சமூக நிதி..?! இதிலும் திமுக.,வுக்கு நிதி தான் தேவையா?!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்

stalin tv - 2026

கருணாநிதி, உதயநிதி, அருள்நிதி, கலாநிதி, தயாநிதி என நிதிகள் கொண்ட குடும்பத்தில் அனைத்து நிதிகளையும் திமுக., தொண்டர்களிடம் இருந்து திரட்டி குடும்பச் சொத்தாக வைத்திருக்கும் திமுக., வின் தலைவர் ஸ்டாலின், தனது நிதிப் பற்றை இன்றும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள், இந்தப் பிறந்த நாளில் அவர் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டிருக்கிறார். அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில்…

சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்! சுயமரியாதை – சமூகநீதி – சகோதரத்துவத்தை போற்றிப் பாதுகாக்கின்ற இந்த இலட்சிய பயணத்தில் என்னோடு கரம் கோர்க்க வாருங்கள். ‘உங்கள் சகோதரனின் குரல்” -இல் இனி உங்களோடு கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி. இழந்தவற்றை மீட்போம்! தமிழகத்தை காப்போம்!

– என்று கூறி பதிவு செய்துள்ளார். ஆனால், குடும்பத்தில் எல்லோரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு… சமூக நிதி என்றே அதனைச் சொல்கிறார்.

ஒருவேளை தன் பிறந்த நாளுக்கு தன் சமூகத்தின் சார்பில் நிதி வேண்டும் என்று கேட்டாரோ என்னவோ?

எது எப்படியோ போங்க.. இனி அடுத்து ட்ரெண்ட் ஆகப் போவது இந்த சமூக நிதிதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.