December 6, 2025, 2:40 AM
26 C
Chennai

ரூ. 20 லட்சம் வரை செலவழித்து… +2 படிக்க வைத்து… உங்கள் மகன் பிறகு என்ன செய்யப் போகிறான்?!

school - 2025

ரூ.20 லட்சம் வரை செலவழித்து… உங்கள் பிள்ளைகளை பிளஸ் டூ வரை படிக்க வைக்கிறீர்களே… யார் ஏமாளி? என நீங்கள் சிந்தித்ததுண்டா?!

தனியார் பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறீங்களே அது எதற்கு??

நல்ல வேலைக்கு போகவா?? ஆங்கிலம் சரளமாக பேசவா?? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? எதற்கு? ? ஏன்? ? என்று சிந்தித்ததுண்டா??

இப்போது ஒரு தோராய செலவழிப்புக்கு வருவோம்…

ப்ரிகேஜி ரூ.25,000 ல் தொடங்குகிறது
எல்கேஜி ரூ.40,000
யுகேஜி ரூ.50,000
முதல் வகுப்பு ரூ.60,000
இரண்டாம் வகுப்பு ரூ.70,000
மூன்றாம் வகுப்பு ரூ.80,000
நான்காம் வகுப்பு ரூ.90,000
ஐந்தாம் வகுப்பு ரூ.1,00,000
ஆறு முதல் எட்டாம் வகுப்பு ரூ. 1,20,000
ஒன்பது, பத்தாம் வகுப்பு ரூ.1,50,000
11, 12ம் வகுப்பு ரூ.2,00,000 லட்சம்

ஆக மொத்தம் ரூ. 9,85,000! இது கிராமப் புறங்களில். கிராமப் புறங்களில் இருக்கும் சிபிஎஸ்இ  பள்ளிகளின் தோராய மதிப்புதான்.

இதுவே, நகரங்களில் இருக்கும் பெரிய பள்ளியில் என்றால், 20 லட்சத்தில இருந்து 40 லட்சம் வரை வாங்குகிறார்கள்.

சரி… இவை எல்லாம்  இருக்கட்டும் இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப் படும். மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் உங்களால்?!

ஒன்றை நினைவில் வையுங்கள். உங்கள் பிள்ளை 550 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள்?! அதுவும் இவ்வளவு பணம் செலவளித்து? தமிழகத்தில் ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராக, பொறியாளராக வர முடியுமா?

உங்கள் பிள்ளையும் இவ்வாறு வர வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தீர்கள். சரி இப்போது அவர்களால் மருத்துவராகவோ பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்குக் கொண்டு போய் சேர்ப்பீர்கள்?

மீண்டும் சிபிஎஸ்இ கல்லூரியிலா? அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே?

அப்படி எனில், உங்களின் அடுத்த தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரியில் தான் இல்லையா?

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE, மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா? இல்லை!  இல்லவே இல்லை!

இப்போது உங்கள் பிள்ளைகளுடன், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களும்தான்  படிப்பார்கள்! பத்து லட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகளுடன்  பணமே செலவளிக்காமல் அதுவரை படித்து முடித்து வந்த அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்துதான் படிப்பார்கள்!

இப்போது சொல்லுங்கள்..! காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா? உங்கள் பிள்ளை சாதனையாளனா? இல்லை பணமே செலவழிக்காமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?

உங்களுக்குத் தெரியுமா TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதம் பேர் அரசுப் பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று?!  TET தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?

இன்று இருக்கும் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பேரும் அரசுப் பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?  ஏன் நீங்கள் கூட அரசுப் பள்ளியில் படித்த அரசு ஊழியராகவே இருக்கலாம்? உங்களால் ஆணித்தரமாக எடுத்துக்கூற முடியுமா? CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?

அந்தப் பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம்!  இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள் அன்புப் பெற்றோர்களே! அரசுப் பள்ளிகள் அடித்தளமான பள்ளிகள் என்று! அரசுப் பள்ளியை வெறுக்கும் நீங்கள் அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?

வாருங்கள் குரல் கொடுப்போம்! அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம். அப்படி சட்டம் இயற்றுவார்களா? ? அரசியல்வாதிகள் இயற்றினால் என்ன நடக்கும்?

அரசுப் பள்ளியில் அமைச்சர் மகனுடன், கலெக்டர் மகனுடன் நம் பிள்ளைகளும் படிப்பார்கள்! கட்டட வசதிகள் அதிகமாகும். சத்துணவு சத்தான உணவாகும். நவீன கருவிகள் முறையில் பாடம் கற்பிக்கப்படும்! CBSE பாடத்திட்டம் மொழி பெயர்க்கப் படும்.

உண்மையில், தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் யார்?! ஆட்சியில் இருப்போர்.. ஆட்சியில் இருந்தோர். அரசியல் பெரும் புள்ளிகள்!

அவர்கள் தங்கள் பள்ளிகளில் மிகக் குறைவான சம்பளம் கொடுத்து ஆசிரியர்களை பணி செய்ய வைக்கிறார்கள். கசக்கிப் பிழிகிறார்கள். அதே நேரம், சலுகைகள் கொடுத்து, பணம் பெற்று லஞ்சம் முறைகேட்டில் திளைத்து, ஆசிரியப் பணிகளில் அரசுப் பள்ளிகளில் ஆட்களை நியமித்து விடுகிறார்கள். டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் விழி பிதுங்கும் நபர்கள் இதனை உணர்த்துகிறார்கள்

இதுவே, அரசுப் பணியில் இருப்போர், கட்டாயம் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் இருந்தால்… ஆசிரியர்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி பெற்ற அறிவாளி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப் படுவார்கள். தரம் உயரும். ஒழுக்கக் குறைபாடு நீங்கும். அப்படியே யாரேனும் ஒழுக்கக் குறைபாடுடன் வகுப்புக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் உடனே பாயும்…

எத்தனையோ நல்ல மாற்றங்கள் அரசுப் பள்ளிகளில் ஏற்படும். அதற்கு ஒரே ஒரு சட்டம்… போதும். அதுதான் – அரசுப் பணியாளர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்ப்பது….!

இதன் மூலம், செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப் படும். சிந்தித்து மற்றவரிடம் கொண்டு சேர்ப்போம்

என்றும் அன்புடன்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories