‘ஷூ’ரன் – தில்… திகில்… நிறைந்த புத்தம் புதிய திராவிடக் காப்பியம்!

Published:

vijay thrisha - 2026

ஷூரன் – படத்தின் பர்ஸ்ட்லுக் அவுட்லுக் பார்வை  இது.

இவர் தான் வேலு, சென்னையைச் சேர்ந்த தடகள வீரர். கத்தாரின் தோகாவில் நடக்கும் ஆசியத் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்கு தயாரான இவர் ஸ்போர்ட்ஸ் ஷு கூட இல்லாமல் இருந்தார்.

இதனை அறிந்த அவரின் மாமன் மகள் தனலட்சுமி, என்னுடைய சேமிப்பு பணம் சிறிது உள்ளது மாமா, நீங்கள் எங்கள் கிராமத்திற்கு உடனடியாக வாருங்கள்; நாம் மதுரைக்கு சென்று ஷு வாங்குவோம் என்றிருக்கிறார்.

அடுத்த கணமே விரைவாக பயணத்தைத் தொடங்கி மாமன்மகள் வீட்டை அடைந்தார் வேலு, அங்கு தன் மாமன் மகள் காய்ச்சல் வந்து படுத்திருப்பதை பார்த்ததும் பதறுகிறார், ஆம்புலன்சை கூப்பிடுங்கள் மருத்துவமனைக்கு செல்லலாம் என்கிறார்.

எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் எல்லாம் வராது என்று அங்கிருந்தவர்கள் சொன்னதும், அடுத்த நொடியே தன் மாமன் மகளை தோள்மீது போட்டுக் கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓட ஆரம்பித்தார் வேலு!

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

அவர் …

மாமன் மகளை மருத்துமனையில் சேர்த்தாரா?
காய்ச்சல் குணமானதா?
ஷு வாங்கினாரா?
ஆசியத் தடகளப் போட்டியில் பங்குபெற்றாரா? – என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள … பாருங்கள்.!

– யுவராஜ் கலைச்சித்தன் (Yuvaraj Kalaichithan)

Related articles

Recent articles

spot_img