“குஜராத் சட்னி”

Published:

“குஜராத் சட்னி”scan0002 - 2026

நன்றி-உங்கள் ராஜ்கோட் ராஜா டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!-மற்றும் மத்யமர் குருப்

செய்முறை

தோல் நீக்கிய நிலக்கடலை! (ரொம்ப கஷ்டப் படாதீர்கள்… ஹல்திராம் ₹25 பாக்கெட் வாங்குங்க…. கிடைக்காதவர்கள் தோலோடு கூடிய கடலையை வறுத்தால் தோல் இளகும்…)

ஒரு கப் கடலைக்கு எனக்குத் தெரிந்து 5-6 பச்சை மிளகாய்.

2 ஸ்பூன் எலுமிச்சை ரசம் அல்லது ஒரு ஸ்பூன் சிட்ரிக் ஆசிட் பௌடர்… கால் ஸ்பூன் உப்பு

நறுக்கென்று வாசம் வர, கூடுதலாக பெருங்காயம்.

அவ்வளவுதான்!

எல்லாவற்றையும் போட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள்…. சட்னி ரெடி…

சொல்ல மறந்துட்டேனே! இதை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் தேவாமிர்தம்….

இட்லி தோசைக்கு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். இல்லைன்னா கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாது!

2. புதினா சட்னி: (ஹரிமிர்ச்சி புதின் சட்னி) நாம் ஏறத்தாழ அனைவரும் செய்வதுதான். புதினா இலை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம்….

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

நன்றாக நீர்க்க அரைக்கவும்…

3. கொத்தமல்லி சட்னி (ஹரி மிர்ச்சி கொத்திமிரி சட்னி).

ஐட்டம் 2இல் உள்ள புதினாவிற்கு பதில், கொத்தமல்லி.

4. கட்டா மிட்டா சட்னி:

ஒரு கோலி குண்டு சைஸ் புளியை முக்கால் கப் தண்ணீர் விட்டு சுடுதண்ணீரில் புளிக் கரைசல் தயாரிக்கவும். அதில் மூன்று கோலி அளவு வெல்லம் போட்டு சூடாக்கவும். கரைந்த பின் கொஞ்சம் சாட் மசாலா, உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்….

5. தமாட்டர் ப்யாஸா ஹரி சட்னி:

ஒரு தக்காளி, அரை பெரிய வெங்காயம், மூன்று பச்சை மிளகாய் , பெருங்காயம், உப்பு போட்டு நீர்க்க அரைத்துக் கொள்ளவும்….

6. தஹி சாட் சட்னி!

சாதாரண தயிரில் சாட் மசாலா, கொஞ்சமாக உப்பு போட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்….

இந்த ஆறு சட்னிகள் உங்கள் கைவசம் இருந்தால் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா சாட் ஐட்டங்களை செய்து அசத்தலாம்….

எனவே…. முதல் சட்னி ஐட்டத்தை மட்டும் (சிக்கிசென்னாமிரச்) இன்று செய்து பார்த்து கமெண்ட் போடுங்கள்….

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

நாளை முதல் மெய்ன் கோர்ஸ் ஐட்டங்கள்!

உங்கள் ராஜ்கோட் ராஜா
டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!

Related articles

Recent articles

spot_img