உதடுகூடாமல் வரும் ஒரு சாகித்யம் அமைத்து, ராக ஸ்வரமும் உதடு கூடாமல் வரும்படியாகப் பாடிப் பிரார்த்தித்தார் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். அதுதான் “சாஜ ராஜ ராதிதே…’ என்னும் “நிரோஷ்டா’ ராகக் க்ருதி. உஷ்டம் என்றால் உதடு. “நிர் + உஷ்ட’ என்றால் உதடு கூடாதது என்பது பொருள்”.(வலசி, ஹம்ஸôனந்தி, விஜயநாகரி, மோஹனகல்யாணி ராகங்கள் இவரது கண்டுபிடிப்புதான்!)
“ஹரிகதா சக்கரவர்த்தி’ என்று புகழ்பெற்ற ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தியாகப்பிருமத்தின் சீடர் பரம்பரையில் வந்தவர். தியாக பிருமத்தைப் போலவே புதிய ராகங்களைக் கையாளும் ஆற்றலும் பெற்றிருந்தார்.
தியாகப் பிரும்மம் சங்கராபரண மேளத்திலிருந்து கருடத்வனி, கோலாஹலம், விவர்த்தனி, கன்னட என்று புதிய ராகங்களை ஏற்படுத்தியது போல், இவரும் சங்கராபரணம் மேளத்திலிருந்தே நிரோஷ்டா, கெüடமல்ஹார், ஸôரங்க மல்ஹார், பசுபதிப்ரியா, புதமனோகரி என்று பல புதிய ராகங்களை உண்டாக்கி தமது சாகித்யங்களை அமைத்திருக்கிறார்.
இந்த நிரோஷ்டா ராகம் ஏற்படுத்தப்பட்டதே ஓர் அரிய சம்பவம். மைசூரில் பாகவதர் இருந்த சமயம், கிருஷ்ணராஜ உடையார் பாரிச வாயுவால் தாக்கப்பட்டுச் சரிவரப் பேச முடியாமலும் கை, கால் உதவாமலும் இருப்பதைப் பார்த்த பாகதவர் சாமுண்டீஸ்வரி சன்னிதிக்கு விரைந்து, “”மகாராஜாவைக் காப்பாற்று…” என்று பொருள்பட, உதடுகூடாமல் வரும் ஒரு சாகித்யம் அமைத்து, ராக ஸ்வரமும் உதடு கூடாமல் வரும்படியாகப் பாடிப் பிரார்த்தித்தார். அதுதான் “சாஜ ராஜ ராதிதே…’ என்னும் “நிரோஷ்டா’ ராகக் க்ருதி. உஷ்டம் என்றால் உதடு. “நிர் + உஷ்ட’ என்றால் உதடு கூடாதது என்பது பொருள்.
அம்பாளின் அனுக்ரஹமோ, அன்பனின் வேண்டுதலோ மகாராஜாவின் வியாதி குணமாகிவிட்டது. சங்கீத உபாசகர்கள் சர்வ சித்தி கைவரப்பெற்றவர்கள் என்பது நிச்சயம்.
மைசூர் மகாராஜா, முத்தையா பாகவதரை மற்றுமொரு முறையும் சோதனை செய்திருக்கிறார்.
“”சாகித்தியங்கள் செய்வதில் நீர் சமர்த்தரானால் ஒரே இரவிற்குள் நூறு கீர்த்தனைகள் செய்துகாட்டும்..” என்று பணித்திருக்கிறார். பாகவதரும் அம்பாளை இறைஞ்சி வேண்டி அம்பாளின் அஷ்டோத்திர அர்ச்சனை நாமாக்களைக் கொண்டு நூறு கீர்த்தனைகளைப் பாடி முடித்திருக்கிறார். அதுதான் “சாமுண்டாம்பா அஷ்டோத்ர’ கீர்த்தனைகள்! அனைத்தும் கன்னட மொழியில் இயற்றப்பட்டவை.




