December 6, 2025, 8:16 AM
23.8 C
Chennai

வசூலில் வந்த வாகனம் ! வசை பாடும் வலைதளம் ! சர்ச்சையில் கேரள பெண் எம்.பி.!

ramya harithas 1 - 2025
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு முக்கியமான நாடாளுமன்றத் தொகுதி ஆலத்தூர். இந்தத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே 36 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் காங்கிரஸ் கட்சி இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்தவர்  32 வயதான ரம்யா ஹரிதாஸ்.  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிஜூவை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் ரம்யா ஹரிதாஸ்.ramya - 2025கோழிக்கோட்டைச் சேர்ந்த ரம்யா பட்டியலினத்தைச் சேர்ந்தவர். வெற்றிக்குப் பின் சுறுசுறுப்பாகத் தனது பணிகளைக் கவனித்து வருகிறார். இருந்தாலும் அவரைச் சர்ச்சைகள் சூழ்ந்துகொண்டே இருக்கிறது. கேரளாவில் மழை பெய்துவருவதால் சமீபத்தில் நடவுப் பணிகள் நடந்தது.

ரம்யாவும் தான் ஒரு எம்.பி என்பதை மறந்துவிட்டு  தன் நிலத்தில் நாற்று நடும் பணிகளைத் தொடங்கினார். டிராக்டர் கொண்டு தன் நிலத்தைத் தானே உழுது, பின்னர், சக தொழிலாளர்களுடன் சேர்ந்து  நாற்று நடும் பணிகளை மேற்கொண்டார்.  பப்ளிசிட்டிக்காக இப்படி நடவு செய்கிறார் என விமர்சனம் செய்தனர்.

ஆலத்தூர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரிவினர் ரம்யாவுக்காக கார் புக் செய்துள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து மொத்தம் 14 லட்சம் வசூல் செய்து அவருக்காக கார் புக் செய்துள்ளனர். அடுத்த மாதம் 9ம் தேதி இந்தக் காரை ரம்யாவுக்கு கொடுக்கவிருக்கிறார் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. ramesh sennithala - 2025
இந்த விவகாரத்திலும் தற்போது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் ரம்யா. இதற்குச்சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ரம்யாவின் சம்பளம் மட்டுமே 2 லட்சம் வரை வரும். இதுபோக படிகள் இருக்கிறது. எம்.பி-க்கு என்றால் வட்டியே வாங்காமல் வங்கியில் லோன் கொடுப்பார்கள். அதில் கார் எடுக்கலாம். அதையெல்லாம் விடுத்து அப்பாவி இளைஞரிகளிடம் இருந்து பணம் வசூல் செய்து அவருக்கு கார் வழங்க வேண்டுமா?” எனச் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

இது சர்ச்சையாக மாற, எங்கள் எம்.பி. எங்களுக்காக பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நாங்கள் கொடுக்கும் காரில் வந்தால் எங்களுக்குப் பெருமை. இதற்காக நாங்கள் பொதுமக்களிடம் காசு வசூலிக்கவில்லை. கட்சிக்காரர்களாக எங்கள் பணத்தை கொடுத்து கார் வாங்கிக்கொடுக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது” எனக் கூறியுள்ளனர் இளைஞர் காங்கிரஸார்.ramya haridhas 1 - 2025
இதுகுறித்து பேசியுள்ள ரம்யா,   3 ஜோடி உடுப்புகளும்,  கையில் பணம் இன்றியும்  ஆலத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வந்தேன்.அப்படிப்பட்ட என்னை, இதே காங்கிரஸார் தான் தங்களுடைய பணத்தை கொடுத்து நான் ஜெயிக்க வேண்டும் என என்னை பிரசாரம் செய்ய வைத்ததுடன், வெற்றிபெறவும் வைத்தனர். ஆலத்தூர் மக்களுக்காக உழைக்க, இளைஞர் காங்கிரஸார் கார் வாங்கித் தருவதில் எனக்குப் பெருமை தான். பேஸ்புக் பதிவு பார்த்த பின்பே இந்த விவரம் எனக்குத் தெரியவந்தது. இதில் விமர்சனம் எதற்காக வருகிறது, கட்சிக்குள் நடக்கும் விஷயத்தை மற்றவர்கள் ஏன் விவாதம் செய்கிறார்கள் என்றுத் தெரியவில்லை.ramya hari - 2025
நானும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் தான். இளைஞர் காங்கிரஸில் இருக்கும் எனக்காக என் சக உறுப்பினர்களே உதவுவதை நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனக்காக என் கட்சிக்காரர்கள் வாங்கித்தந்த கார் என்று இனி நான் போகும் இடம் எல்லாம் பெருமையுடன் சொல்வேன்” எனக் கூறியுள்ளார். ரம்யாவின் தந்தை சாதாரண கூலித் தொழிலாளி, தாயார் டெய்லர். இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு அளித்த இலவச வீட்டில் வசித்து வருகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.பி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories