முருகனுக்கு பதில் மாரியம்மன்: ‘அம்மா’வுக்காக அமைச்சர்கள் எடுத்த இளநீர் காவடி!

00039002கரூர்: அ.தி.மு.க வில் ஒவ்வொரு அமைச்சரும், அம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பக்தி என்ற பெயரில் பொதுமக்களையும், ஆண்டவனையும் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் வாட்டி வருவதை ஆங்காங்கே காண முடிகிறது. 00039001அதன் தொடர்ச்சியாக  முருகனுக்கு பிடித்த நேர்த்திக்கடனான காவடி எடுப்பது காலம் காலமாக தமிழர்கள் செய்து வந்த ஒரு நேர்த்திக்கடன் ஆனால் இன்று (17-04-15) கரூர் மாவட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அனைத்து தொண்டர்களும் அமராவதி ஆற்றில் இருந்து இளநீர் காவடி எடுத்து வந்து ஏதோ ஒரு முருகன் கோயிலுக்கு செல்வார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் கரூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். பக்தகோடிகளை மட்டுமில்லாமல் விஷ்வ இந்து பரிசத், இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சியினர் என பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் இதற்கு கண்டன் தெரிவித்துள்ளனர். அதாவது எங்களது காலத்தில் முருகனுக்கு தான் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பல வகை காவடிகளை எடுப்பது வழக்கம்.17.04.2015 karur  govt bus fire  25 passenger safe vis001 ஆனால் வழக்கத்திற்கு மாறாக அம்மா அம்மா என அம்மனையும், முருகனையும் இழிவு படுத்தும் விதமாக இந்த செயல் விளங்குவதாக பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த அரசுப்பேருந்து போக்குவரத்து துறை அமைச்சர் ஊர் அருகே தளவாபாளையம் பகுதியில் தீடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக 26 பயணிகள் உயிர் தப்பினர். ஒரு வேளை அதற்காக இந்த காவடியா, இல்லை போக்குவரத்து துறை ஊழியர்களின் பேச்சுவார்த்தை சுமூக மாக முடிய வேண்டும் என இந்த காவடியா ? என பல்வேறு கட்சியினர் குழப்பத்தில் இருக்கின்றனர். கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இளநீர் காவடி எடுத்தவர்களுக்கு ரூ 500 ம் அங்கப்பிரதட்சனை செய்தவர்களுக்கு ரூ 2 ஆயிரமும் வழங்கப்பட்டது. 00053001இது மட்டுமில்லாமல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த மாரியம்மன் திருக்கோயிலில் கோயில் கர்ப்பகிரகத்தை இது வரை எந்த தொலைக்காட்சியும், நாளிதழ்களில் வேலை பார்க்கும் புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் எடுத்ததில்லை. எடுக்கவும் கூடாது என்று அங்கே போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அம்மாவை காப்பாற்ற நினைத்து அம்மனை களங்கப்படுத்தும் செயலாக இந்த செயல் இருந்ததாக உண்மையான பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா வாழ்க என கோஷம் பாட மாரியம்மன் கோயிலை அமைச்சர் செந்தில்பாலாஜி அங்கப்பிரதட்சனம் செய்தார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் கோயிலா ? இல்லை அம்மா கோயிலா என்று குமுறுலுடன் சென்றனர். மேலும் இந்நிகழ்ச்சியினால் கரூர் ஐந்து ரோட்டில் இருந்து மாரியம்மன் கோயில் வரை போக்குவரத்து 3 மணிநேரம் பாதிக்கப்பட்டது. 00064001அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர் அ.தி.மு.க தொண்டர்களுக்கு தயவு செய்து ஒரு அன்புக்கட்டளை இட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். என்னவெனில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர் அல்லது அதிகார வர்க்கத்தில் நேர்த்திக்கடன், வேண்டுதல் என்ற பெயரில் பொதுமக்களுக்கு முழுவதும் இடைஞ்சல், முகம் சுளிக்கும் வகையில் கூட்டத்தை கூட்டி அம்மாவின் பெயரை களங்கப்படுத்துவது போல் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.