காஜல் அகர்வாலை வீட்டுக்கு வரவழைக்க ரூ.75 லட்சம் ! சிக்கிய மோசடி பேர்வழி !

kaajal 1 - 2026ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் கூகுளில் காஜல்அகர்வாலை பார்த்து அவரை வீட்டுக்கு வர வைக்க ஆசைப்பட்டுள்ளார் .

locanto என்ற இணையதளத்தின் மூலம் நடிகைகளை விரும்பிய இடத்திற்கு வர வைக்கலாம் என்று நண்பர்கள் சிலர் கூற , அந்த வெப்சைட்டில் பிரபல தொழிலதிபரின் மகன் ரிஜிஸ்டர் செய்துள்ளார் . ரிஜிஸ்டர் செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே அவருக்கு ஒரு நபரிடமிருந்து போன் கால் வந்துள்ளது.

அதில் பேசிய அந்த மர்ம நபர் தொழிலதிபரின் மகனுக்கு சில நடிகைகளின் போட்டோக்களை அனுப்பிவைப்பதாகக் கூறியிருக்கிறார். அந்த போட்டோக்களில் தொழிலதிபரின் மகன் நடிகை காஜல் அகர்வாலின் போட்டோவை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது .

பின்னர் அந்த தொழிலதிபரின் அடையாள அட்டை மற்றும் புகைப்படங்களை அனுப்புமாறும் , ரிஜிஸ்ட்ரேஷன் தொகையான 50 ஆயிரம் ரூபாயில் , 25 ஆயிரம் ரூபாயை முன் பணமாகவும் அந்த மர்ம நபர் இவரை கட்ட வேண்டும் எனச் சொல்லியுள்ளார் .நடிகை காஜல் அகர்வால் வீட்டிற்கு வருவார் என நம்பி இந்த தொழிலதிபரின் மகன் அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் முன்பணம் ஆகியவற்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் .

இவரின் செல்போன் நம்பர், அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை வைத்து இவர் கோடீஸ்வரனின் மகன் என அறிந்த அந்த மர்ம நபர் , அவரிடமிருந்து மேலும் பணத்தை பறிப்பதற்காக நடிகை காஜல் அகர்வாலுடன் அந்த தொழிலதிபரின் மகன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை மார்பிங் செய்து அந்த தொழிலதிபரின் மகனுக்கு அனுப்பியுள்ளார் .

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அந்த புகைப்படத்தையும் மற்றும் செல்போன் உரையாடல்களையும் வைத்து அவரை மிரட்டி அந்த மர்ம நபர் கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய் வரை அவரிடமிருந்து ஒரு ஒரு வங்கிக் கணக்கிற்கு அனுப்ப சொல்லி இருக்கிறார்.அவரிடமிருந்து மொத்த பணத்தையும் மோசடி செய்துள்ளார்.

பணத்தையும் இழந்து மானத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் அந்த தொழிலதிபரின் மகன் கொல்கத்தாவிற்கு சென்று தலைமறைவானார் . சில நாட்களுக்கு முன்பு அந்த தொழிலதிபரின் மகன் அவரது அப்பாவிற்கு போன் செய்து தனக்கு வாழப் புடிக்கவில்லை என்றும் சாகப்போவதாகவும் கூறியுள்ளார். இதனால் பதறிய அந்த தொழிலதிபர் காவல்துறைக்கு உடனே இதை பற்றி அறிவித்துள்ளார் . காவல்துறையினர் அந்த போன் நம்பரை வைத்து ட்ராக் செய்து தொழிலதிபரின் மகன் கல்கத்தாவில் இருப்பதை கண்டறிந்து அவரை மீட்டெடுத்தனர்.

பின்னர் காவல்துறையினர் அந்த வங்கிக் கணக்கு எண்ணை வைத்து அந்த அக்கவுண்டிற்கு சொந்தமான மணிகண்டன் என்பவரை விசாரித்தனர் . விசாரணைக்கு பின்பு மணிகண்டன் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்கி வருவதாகவும் , அந்த படத்தின் தயாரிப்பாளர் சரவணகுமார் தான் என் வங்கி அக்கவுண்ட்டை பயன்படுத்தி மற்றவர்களிடம் பணத்தை பெற்று வருவதாக மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் , தயாரிப்பாளர் சரவண குமார் என்பவர் அசோக் நகரில் கைது செய்யப்பட்டார் .விசாரணைக்குப் பிறகு சரவணகுமார் தொழிலதிபர் மகனிடம் ஏமாற்றி பெற்ற 75 லட்சம் ரூபாய் பணத்தில் 65 லட்சம் ரூபாயை உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் செலவு செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார் . அவரிடமிருந்த மீதமுள்ள 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் .

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

நடிகை காஜல் அகர்வாலின் பெயரை தவறாக பயன்படுத்தி பணமோசடி செய்த இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories