தலைக்கவசம் உயிர் கவசம் என்பதாக ஹெல்மெட் அனைவரும் அணிய வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒரு சிலர் ஹெல்மெட் அணிவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவருக்கு அபராதமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த அபராததொகை உயர்த்தப்பட்டுள்ளது .ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் விதிக்கப்படும் அபராதம் ரூ.1000-ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னால் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அப்படி அணியாவிட்டால் இனி ரூ.1000 அபராதம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து புறப்படும் போது செல்போன் போன்று ஹெல்மெட்டையும் எடுத்துச் செல்லவேண்டும் எனவும், உயிர் காக்கும் ஹெல்மெட் அணிவதை கட்டாய பழக்கமாகக் கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.



