யோகா ஃபெடரேஷன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த செங்கோட்டை வேதபாடசாலை மாணவர்கள்!

சுய முன்னேற்றம் நெல்லை லைஃப் ஸ்டைல்
sbt vedapadasala studetns - 2026

திருநெல்வேலி மாவட்ட யோகா ஃபெடரேஷன் ஏற்பாடு செய்த, தமிழ்நாடு யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற்றது.

குற்றாலம் கலைவாணர் கலை அரங்கத்தில் நடைபெற்ற இந்த யோகா போட்டிகளில் செங்கோட்டை சிருங்கேரி பாரதீ தீர்த்த வேத பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டிகளில், 2 தங்கம், 2 வெள்ளி, 4 வெங்கலம் 3 ஷீல்ட் என பதக்கங்களைப் பெற்று செங்கோட்டை எஸ்பிடி வேத பாடசாலை மாணவர்கள் அசத்தினர்.

யுவன் சங்கர் ராஜா, சௌரப் பாண்டே ஆகியோர் தங்கமும், உமேஷ். யுக் பாண்டே ஆகியோர் வெள்ளியும், முகேஷ் அனுராக், சுதர்ஷன், அமித் ஆகியோர் வெங்கலமும் வென்றனர். சுப்ரமணி, ரோஷன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஷீல்ட் பெற்றனர்.

செங்கோட்டை எஸ்பிடி வேதபாடசாலை நிர்வாக அறங்காவலர் எம்.ராமசந்திரன் இந்த மாணவர்கள் யோகா போட்டிகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். விருதுகள் பெற்ற மாணவர்களுக்கும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்த பயிற்றுனர் மருது சுபாஷுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.