சுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது!

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம் |ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

39. தன் தப்பு தனக்குத் தெரியாது!,

செய்யுள்:

கல: சர்ஷபமாத்ராணி பரச்சித்ராணி பஸ்யதி |
ஆத்மனோ பில்வமாத்ராணி பஸ்யன்னபி ந பஸ்யதி||

பொருள்:

தீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.

விளக்கம்

சுயவிமரிசனம் செய்து கொள்ளாமல் எப்போதும் பிறர் குற்றங்களைத் தேடுவது சரியல்ல. பிறரிடம் உள்ள குறைகளை விமர்சிப்பதற்கு முன் நம்மிடம் எத்தனை குறைகள் உள்ளனவோ கவனிக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறும் சுலோகம் இது.

சிலர் அதே வேலையாகப் பிறரிடம் உள்ள குற்றங்களை தேடிக் கொண்டே இருப்பார்கள். பிறர் குற்றம் நோக்குபவர்களை நம்பக் கூடாது என்று சுமதி சதகம் கூட எச்சரிக்கிறது. பிறரை நோக்கி ஒரு விரலை நீட்டினால் மீதி விரல்கள் உன்னை நோக்கிச் சுட்டும் என்பது பழமொழி.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

ஊழலில் கழுத்துவரை மூழ்கியிருக்கும் அரசியல் கட்சிகள் தம் தப்புகளை மூடிமறைத்து ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தையும் பிற கட்சிகளையும் விமர்சிப்பதும், தம் தோல்விக்குக் காரணம் காட்டுவதும் உலகில் பார்க்கிறோம்.

மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் சரியாக தேர்வுத்தாளை திருத்தவில்லை என்றும் பாடங்களில் இல்லாத கேள்வி கேட்டார்கள் என்றும் ஏதோ ஒரு சாக்கு சொல்வதையும் பார்க்கிறோம். தம் தோல்விக்கான பொறுப்பை ஏற்க மாட்டார்கள்.

தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிறர் மீது குற்றம் சுமத்தி தப்பித்துக் கொள்ள கூடாது. ‘உன் தவறை நீயே உணர்!’ என்று போதிக்கும் ஸ்லோகம் இது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img