“உங்களுக்கு “அனுமன் சாலீசா’ தெரியுமா?”
(“”அனுமன் ஒரு மாவீரன்… தோல்வியே காணாதவன். பாரதப் போரில் அர்ஜுனன் தேரில் கொடியாகவும் திகழ்ந்தவன். அவன் இந்த பாரத தேசத்தை நிச்சயம் காப்பாற்றுவான். கவலைப்படாதீர்கள்” )
(மகாபெரியவரின் நம்பிக்கை துளிகூட வீண்போகவில்லை. அதன்பின் மிக விரைவாக பாகிஸ்தானை ஓடஓட விரட்டியடித்தது பாரதம்.)
சொன்னவர்- இந்திரா சௌந்தர்ராஜன்
நன்றி-பால ஹனுமான்.
ஒரு சிந்தனையாளர் நாம் பெரிதும் போற்றும் காஞ்சி முனிவரைச் சந்தித்தார். முனிவரிடம் பாகிஸ்தானுடன் நடந்துவரும் யுத்தம் பற்றி கூறியவர் மேற்கண்ட ஆபத்துக்களையும் எடுத்துக் கூறியதோடு, காஞ்சி முனிவரிடம் வருத்தத்தோடு ஒரு பெரும் கேள்வியையும் கேட்டார்.
அது என்ன தெரியுமா?
“எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இந்த பூமியில்… எத்தனையோ அருளாளர்களும் இந்த பூமியில்.. சகல பாவங்களையும் போக்கிடும் கங்கையும் பாய்ந்து செல்கிறது. மக்களும் பக்தி உணர்வுடன் வாழ்கிறார்கள். இப்படியிருக்க ஏன் இந்த மண்ணே எப்போதும் அடிமைப்படுத்தப்படுகிறது? ஏன் இந்த மக்களே கஷ்டப்படுகிறார்கள்? இதிகாசங்களும் இறவாப் புகழ் பெற்ற காப்பியங்களும் தோன்றிய இந்த மண்ணின்மீது தெய்வத்துக்கு கருணை இல்லையா… இல்லை பகுத்தறிவாளர்கள் கூறுவதுபோல தெய்வமே ஒரு கற்பனையா?’ என்பதுதான் அவர் கேட்ட கேள்வி.
காஞ்சிப் பெரியவரிடம் ஒரு மந்தகாசமான புன்னகை.
எப்பொழுதும் காய்த்த மரமே கல்லடி படும்… அதிலும் இந்த பாரத தேசத்தை ஞானத்துறவி விவேகானந்தர், “இந்த உலகம் என்பது ஒரு வீடானால் அதில் என் பாரத தேசம் ஒரு புனிதமான பூஜையறையைப் போன்றது’ என்றார்.
இந்தப் பூஜையறைக்குள் அருள் இருப்பதுபோலவே அதை சரியாகக் கொண்டாடாவிட்டால் இருள் வந்து சேர்ந்துவிடும். இருள் வந்தால் தான் அருள் ஒளியின் தன்மையை உணரமுடியும்.
நிழலருமை வெய்யிலில் அல்லவா தெரியும்?
இப்படிப்பட்ட சிந்தனைகளால் பெரியவர் முகத்தில் மந்தகாசப் புன்னகை தோன்றியதோ என்னவோ? மிகுந்த வருத்தமுடன் கேள்வி கேட்டவருக்கு அவர் வார்த்தைகளில் பதில் கூறவில்லை.
அவரிடம், “”உங்களுக்கு “அனுமன் சாலீசா’ தெரியுமா?” என்றுதான் கேட்டார். அவரும் “”கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.
“”அனுமன் ஒரு மாவீரன்… தோல்வியே காணாதவன். பாரதப் போரில் அர்ஜுனன் தேரில் கொடியாகவும் திகழ்ந்தவன். அவன் இந்த பாரத தேசத்தை நிச்சயம் காப்பாற்றுவான். கவலைப்படாதீர்கள்” என்ற மகாபெரியவர், தனது சங்கரமட அமைப்பு மூலமும் அன்பர்கள் உதவியோடும் “அனுமன் சாலீசா’வை லட்சக்கணக்கில் அச்சிட்டார்… அச்சிட்டதை போர்முனைக்கு அனுப்பி ஜவான்கள் கையில் கிடைக்கும்படிச் செய்தார்.
“இதை பாராயணம் செய்யுங்கள். புதிய பலம் தோன்றும். செய்யத் தெரியாதவர்கள் இந்தஅனுமனே உடனிருப்பதாகக் கருதி சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். யுத்த களத்தில் உங்களுக்கு வெற்றியைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது’ என்கிற தகவலையும் அனுப்பினார்.
மகாபெரியவரின் நம்பிக்கை துளிகூட வீண்போகவில்லை. அதன்பின் மிக விரைவாக பாகிஸ்தானை ஓடஓட விரட்டியடித்தது பாரதம்
.
அதைத் தொடர்ந்து நடந்த பங்களாதேஷ் யுத்தத்திலும் அனுமன் சாலீசா பல ஜவான்களிடம் பெரும்பங்கு வகித்தது.



