“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”
“தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு”.-பெரியவாள்)
சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை. வாசற்கதவைத் திறந்தபடி போட்டுவிட்டு எங்காவதுபோய் விடுகிறாள். அப்புறம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. வீட்டில் வேறு யாரும் இல்லை.அவளை மடத்திற்குக் கொண்டு வந்து விட்டு வைக்கலாமா?” என்று முறையிட்டார் கோபாலன் என்ற பக்தர்.
பெரியவாளிடம். “நல்லவேளை….எங்கேயாவது காட்டிற்குக் கொண்டு போய், விட்டு விடலாமா என்று கேட்காமல், என்னிடம் கொண்டு வந்து விட்டுவிடலாமா? – என்று கேட்கத் தோன்றியதே உனக்கு!”–பெரியவாள்.
“தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு”.-பெரியவாள். “தாயார்கள் பாடு இம்மாதிரி ஆயிடுத்து…” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்று, சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.
அதற்குள் கோபாலனின் மனம் படாத பாடு பட்டுவிட்டது. பெரியவாளிடம் அபசாரப்பட்டு விட்டோமோ? அதனால், மேலும் அதிகக் கஷ்டங்கள் வருமே?-என்ற கவலையும் வந்தது.
பெரியவா திரும்பி வந்ததும் மறுபடியும் காலில் விழுந்தார் கோபாலன். “ரொம்ப மன்னிக்கணும் பெரியவா. என் தாயாரைப் பற்றி தவறுதலா சொல்லிட்டேன்” என்று கெஞ்சினார்.
பெரியவா சாந்தமாக அறிவுரை சொன்னார்கள்.
வயோதிக காலத்தில் பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை.தாய் – தந்தையர் சாபம் குடுத்தால் குடும்பம் வீணாகப் போயிடும். தனியாக உன்னால் உன் அம்மாவைக் கவனித்துக் கொள்ளமுடியவில்லைன்னா, ஒரு ஆசாமியை ஒத்தாசைக்கு வெச்சுக்கோ.”-பெரியவாள்.
“பெரியவாளின் கட்டளையை மீறமாட்டேன்” என்று கூறி பிரசாதம் பெற்றுச் சென்றார், கோபாலன்
“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”
Popular Categories



