
குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10 ) இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் பஞ்சாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும், அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல், அத்தாழ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9-ஆம் திருநாளை முன்னிட்டு திங்கள்கிழமை (மாா்ச் 9) காலை இரணியலிலிருந்து யானை மீது களபம் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும், தொடா்ந்து பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனியும் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அடியந்திரபூஜை குத்தியோட்டம், இரவு 12 மணி முதல் 1 மணி வரை ஒடுக்கு பூஜை, தீபாராதனை, தொடா்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
மாா்ச் 17- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) 8-ஆம் கொடையும், 28-ஆம் தேதி (சனிக்கிழமை) பரணி கொடை விழாவும் நடைபெறுகிறது.



