December 5, 2025, 3:40 PM
27.9 C
Chennai

மேலதிகாரியை புகழ்வது மட்டும் செய்து வேலை செய்யாமல் இருக்கலாமா?

melathikari - 2025

ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகா சாமிகள் கூறிய ஐந்து லட்சணங்கள்

சங்கர பகவத் பாதர் அருளியுள்ள சிவானந்த லஹரியில் பக்தியின் தரத்தைப் பற்றி பலவாறு அருளியிருக்கிறார்
அங்கோலம்… என் தொடங்கும் அந்த ஸ்லோகம்

athi sankarar - 2025

பக்குவம் வந்ததும் மலர்கள் மலர்ந்து காய்த்து பறப்பதுபோல் பக்தி உணர்வும் மக்கள் உள்ளத்தில் இயல்பாக வளர வேண்டும் சிவபெருமானின் அருள் திறத்தை விளக்கும் இந்த ஸ்லோகங்கள் ஒன்றில் பக்தியின் இயல்பு பற்றி மிக அழகாக வர்ணித்துள்ளார்.

அங்குலம் என்று தொடங்கும் அந்த ஸ்லோகம் அங்கோலம் என்று ஒரு மரம் இருக்கிறது அதன் தன்மை மிக விசேஷமானது மரத்தில் இருந்து உதிர்ந்து விழுந்த விதை இந்த மரத்தின் அடிப்பாகத்தை நோக்கி செல்லும் அடி மரத்தில் உள்ள கோந்து போன்ற ஒரு பசை பொருள் விதைகளை எடுத்துக் கொள்ளும் அந்த விதையின் இயற்கை தன்மை இது.

apinava vidhya theerthar - 2025

இந்த ஸ்லோகத்தின் பொருள் எப்படி ஓர் அங்கோல மரத்தின் விதை மரத்திடம் செல்கிறதோ இரும்புத்துண்டு காந்தத்திடம் செல்கிறதோ பதிவிரதையான ஒரு பெண்மணி தன் கணவன் விஷயத்தில் அபிமானம் வைத்து இருப்பாளோ எப்படி ஓர் இளங்கொடி ஒரு மரத்தை சுற்றி கொள்கிறதோ இப்படி ஒரு ஆறு கடலை சென்று அடைகிறதோ அதே போல் மனதின் எண்ணங்கள் எல்லாம் இறைவனின் பாதாரவிந்தங்களில் போய் நிலைப்பதற்கு பக்தி என்று பெயர்.

அங்கோலம் நிஜ பீஜ சந்ததி அங்கோல மரத்தின் விதை அந்த மரத்தில் இருக்கும் கோந்து போன்ற ஒன்றில் ஒட்டிக்கொண்டு விடும் அதேபோல் முதல் நிலையில் பகவான் பக்தனுக்கு ஆதரவு கொடுத்து தன்னுடைய பக்கம் பக்தனுடைய மனத்தை திரும்புவான்.

sringeri - 2025

இரண்டாவதாக முதல் உதாரணத்தில் பக்தன் ஏதாவது முயற்சி செய்ய வேண்டியிருந்தது இரண்டாவது உதாரணத்தில் பக்தனின் மனம் இறைவனிடம் இயற்கையாகவே செல்கிறது காந்தத்தின் பின்பக்கம் எப்படி இரும்புத்துண்டு போகுமோ அதேபோல பக்தி விஷயத்திலும் சற்று பயிற்சி ஆகிவிட்டால் இறைவனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் மனம் தானாகவே அங்கே செல்லும்.

மூன்றாவதாக இறைவனிடம் தானாகவே மனம் சென்று கொண்டிருந்தால் அவனை பற்றிய கவனம் இருந்து கொண்டே இருக்கும் அதாவது பதிவிரதை எப்படி தன் கணவனை பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பாள் அதேபோல் பக்தனும் இருப்பான்.

நான்காவதாக ஒரு கொடி மரத்தை எப்படி சுற்றி அந்த மரத்திற்கு ஒரு அழகு ஏற்படும் அதேபோல் பக்தன் உத்தமமான பக்தி செலுத்தி வந்தால் பக்தனுக்கு மட்டுமன்றி இறைவனுக்கே ஒரு சோபை ஏற்படும்.

ஐந்தாவதாக உத்தமமான பக்தி ஒரு கடலில் போய்ச் சேர்ந்த பிறகு அதற்கு நதி என்ற பெயரே இல்லை பக்தன் இறைவனிடம் அளவு கடந்த பக்தி வைத்தால் அவனோடு அவன் ஐக்கியமாகி விடுவான் இதுதான் உத்தமமான பக்தியின் உயர்ந்த நிலை

இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டே இருந்தால் போதும் நித்ய கர்மா ஏன் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள் இது சரியல்ல நித்ய கர்மாவைச் செய்து வருவதே சிறந்த வழியாகும்

sringeri 1 - 2025

ஒரு எஜமானனும் அவனுக்கு ஒரு வேலையாளும் இருப்பதாக வைத்துக்கொள்வோம் அந்த வேலைக்காரன் எஜமானன் சொல்கின்ற வேலையை மேற்கொள்ளாமல் எஜமானனை மட்டும் முகஸ்துதி செய்து போற்றிக் கொண்டே இருந்தால் அப்படிப்பட்ட வேலைக்காரனிடம் எஜமானனுக்கு திருப்தி ஏற்படுமா?

நம் எல்லோருக்கும் இறைவன் தான் எஜமான் அவன் வேதத்தின் மூலமாகவும் சாஸ்த்திரத்தின் மூலமாகவும் நாம் எப்படி வாழவேண்டும் என்று கூறியிருக்கிறான்.

ஆகையால் நாம் நமக்கு உள்ள நித்திய கர்மாக்களை சரிவர செய்து வரவேண்டும் இதே சமயத்தில் இறைவனின் நாமங்களை பஜித்து வந்தால் அதிக பலன் கிடைக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories