அர்ப்பணிப்பு அண்மையில் சேர்க்கும்! மனம் அறிந்து அருளும் குரு!

Published:

sringeri acharyas in sabarimala - 2026

ஒருமுறை ஜேஷ்ட மகாசன்னிதானமும் மகாசன்னிதானமும் ஒரு சிறிய நகரத்தில் முகாமிட்டிருந்தனர். மகாசன்னிதனம் தனக்குத் தெரிந்த ஒரு சில உள்ளூர் பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் ஆச்சார்யாளுடன் மிக நெருக்கமாக நின்று முக்கியமான ஒன்றைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

முகாமில் வேறு ஏதோ சேவை செய்து கொண்டிருந்த ஒரு பக்தர் எல்லாவற்றையும் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தன்னைத்தானே நினைத்துக் கொண்டார், “இவர்களைப் போன்ற பெரிய குரு சேவையை என்னால் செய்ய முடியாது. ஆச்சார்யாள் அத்தகைய சீடர்களைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பார். அவருடைய புனித மனத்தின் சிந்தனையின் எண்ணங்களில் ஒரு நொடி கூட இருக்க நான் அதிர்ஷ்டசாலி அல்ல.”

முகாமில் ஒருவருக்கொருவர் அருகிலுள்ள இரண்டு தனித்தனி அறைகளில் ஆச்சார்யர்கள் தங்கியிருந்தனர். ஒரு நாள் இந்த பக்தர் மண்டபத்தில் ஏதோ சேவை செய்து கொண்டிருந்தார். திடீரென்று மகாசன்னித்தனம் பக்தரை அழைத்து, “நீங்கள் என் அன்பான சிஷயர். உங்கள் குரு சேவையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று இரக்கத்துடன் கூறினார். அத்துடன் சிறிது நேரம் அவரைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் கேட்டு உரையாடினார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!
sringeri bharathi theerthar

ஆச்சார்யாளிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட பக்தர் முற்றிலும் திகைப்புக்குள்ளானார் அது அவருக்கு ஒரு கனவு போல இருந்தது. அவரது நன்றியை விவரிக்க அவருக்கு வார்த்தைகள் இல்லை.

தன்னுடைய எண்ணம் அறிந்து ஆச்சாரியாள் தன்னிடம் வந்து உரையாடியதும், தன் எண்ணம் தவறானது என்பதை உணர வைத்தது. ஆச்சாரியாளின் கருணையை எண்ணி அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்ந்தது.

பெரிய சேவைகளை செய்பவரே ஆச்சார்யாளை நெருங்கி உரையாட முடியும் என பலரது தவறான அபிப்பிராயம் வைத்துக் கொண்டுள்ளனர். கடவுள் எப்படி சுத்த மனத்துடன் உள்ள தூய அர்ப்பணிப்பு பக்தியை மட்டுமே கவனிக்கிறாரோ அதே போல் தான் ஜகத்குருவும் நம் மனம் எண்ணும் எண்ணம் அறிந்து நம் தூய பக்திக்கும் குருசேவைக்கும் அனுக்கிரஹம் செய்கிறார்கள்.

Related articles

Recent articles

spot_img