
ஒரு உயர்ந்த பரமார்த்த நிலையை அடைந்த ஒரு யோகியின் ஆசிரமத்தில் பிரம்மச்சாரி சீடனாக வாழ்ந்து வந்தார். யோகத்தில் நிலைத்து இருந்து தனது பெரும் காலத்தை நிர்விகல்ப சமாதியிலேயே கழிக்க வேண்டும் என்பதே அந்த சீடனின் லட்சியம்.
ஒரு நாள் யோகி தான் வெளியூர் செல்வதாகவும் திரும்பி வர சில நாட்கள் ஆகும் என்று கூறிச் சென்றார் அன்று மாலை பிரம்மச்சாரி நீர் கொண்டு வருவதற்காக நதிக்குச் சென்றான் ஒரு கன்னிப்பெண் அழுது கொண்டிருப்பதை அங்கு கண்டான்
உனக்கு என்ன கஷ்டம் ஏன் அழுகிறாய் என்று கேட்கிறான் அவள் நதிக்கு அக்கரையில் சில மைல் தூரத்தில் கிராமத்தைச் சேர்ந்தவள் என்றும் அங்கு நண்பர்களுடன் அதிகாலை புறப்பட்டு இங்கு ஒரு கிராமத்திற்கு வந்து ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம் என்றாள்.
இங்குள்ள அழகிய தோட்டத்தைக் கண்டு அங்கே கொஞ்சம் இளைப்பாறினோம் வண்ணத்துப்பூச்சி என் கண்ணில் பட்டது அதை கையில் பிடித்து ரசிக்க விரும்பி பூவை நோக்கி நடந்தேன் அது என் கைக்கு கிடைக்காமல் பறந்தது அது மீண்டும் வந்தமரும் நான் அதனை தொடர்வேன் நான் பிடிப்பதற்குள் ஓடும் பறக்கும் இப்படி சென்றது.

நான் அவர்களின் பார்வையில் இருந்து வெகுதூரம் சென்று விட்டேன் சிறிது நேரத்திற்குப் பிறகு அசதியின் காரணமாக நான் அப்படியே தரையில் உட்கார்ந்தேன். எனக்கே தெரியாமல் உறங்கிவிட்டேன். ஒரு மணி நேரம் நான் தூங்கி இருப்பேன் தூங்கி எழுந்து பார்த்தபோது சூரியன் அஸ்தமனம் ஆகி இருந்தது. என் நண்பர்கள் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தேன் அங்கே ஒருவரும் தென்படவில்லை அவர்கள் எனக்காக காத்திருந்து விட்டு உரக்க அழைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு வண்ணத்துப் பூச்சியின் பின் நான் சென்றதை அவர்கள் கவனிக்கவில்லை போல் இருக்கிறது நான் வீட்டை பற்றி அதிகம் கவலைப்படுவேன் என்று அவர்களுக்குத் தெரியும் நான் சீக்கிரம் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று அவர்கள் எண்ணி இருந்திருக்கலாம் தனியாக இருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.
இப்பொழுது வீட்டை நோக்கிச் செல்லவும் தாமதமாகி விட்டது. சென்று பார்த்தால் ஒரு ஓடக்காரன் கூட இல்லை. இப்பொழுது நான் என்ன செய்வேன் என்னால் தனியாகவும் இருக்க முடியாது. வீட்டிற்கும் செல்ல முடியாது செய்வதறியாது தவிக்கும் என் நிலையை எண்ணி நான் வருந்துகிறேன் என்று கூறினாள்
பிரம்மச்சாரிக்கு அவள் மேல் இரக்கம் வந்தது. நான் வசிக்கும் ஆசிரமத்திலேயே நீ இன்று இரவை கழித்து விட்டு நாளை விடியற்காலை எழுந்து சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடு என்று கூறினான் அவளும் நன்றியுடன் அவன் பின்னே நடந்தாள் அவள் மனதில் சிறிய பயம் மட்டும் இருந்தது வேறு யாரெல்லாம் ஆசிரமத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டாள்
என் குருவும் நானும் தான் இருக்கிறோம் ஆனால் தற்சமயம் என் குருநாதர் வெளியூர் சென்றிருக்கிறார் சில நாட்கள் கழித்து தான் திரும்புவார் என்று கூறினார் அப்படி என்றால் நான் எப்படி அங்கு தங்குவது என்று அவள் கேட்டாள் அவள் மனதில் தோன்றியதை அவனிடம் கூறினாள் அதைக்கேட்டு பிரம்மச்சாரி சிரித்துக்கொண்டே பயப்பட வேண்டாம் நான் என் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்வேன் என்று விரதம் கொண்டிருக்கிறேன்

சிற்றின்பங்கள் எல்லாம் என் மனதில் இடம் தருவதில்லை என்ற வைராக்கியம் அசைக்க முடியாததாக இருக்கிறது தேவலோகத்து அப்சரஸ்களும் ஊர்வசியும் கூட என்னை மயக்க முடியாது என்று கூறினான்.
நீ அச்சமின்றி தங்கிக் கொள்ளலாம் என்றான் அவனுடைய மன உறுதியைக் கண்டு வியந்த அந்தப் பெண் ஆபத்துக் காலத்தில் உதவி செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவன் பின்னே நடந்தாள். ஆசிரமத்திற்கு சென்றடைந்தார்கள் சில பழங்களை கொடுத்து உண்ணச் சொன்னான் சீடன்.
பிறகு நீ இன்று இரவு இங்கு இருக்கும் ஒரு அறையில் தங்கிக் கொள் நான் வெளியில் சென்று படுத்துக் கொள்கிறேன் என்றான் அவள் தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு அவன் வெளியில் சென்றதும் கதவை தாழிட்டுக் கொண்டாள்
பிரம்மச்சாரி பாயை தரையில் விரித்து படுத்து உறங்கினான் அரை மணி நேரத்திற்குள் மழை தூர ஆரம்பித்தது பிரமச்சாரி கதவை தட்டினான் அவள் கதவை திறந்தாள் மழை தூறிக் கொண்டே இருப்பதால் தன்னால் வெளியில் உறங்க முடியாததை எடுத்துரைத்தான்
மேலும் தான் கண்டிப்பாக உறங்க விரும்புவதையும் அதன் அவசியத்தையும் அவளிடம் தெரிவித்தான் காலையில் என்னுடைய பூஜைகள் மிகவும் முக்கியம் இப்பொழுது விழித்தால் காலை என் வேலைகள் கெடும் என்பதை கூறினான்
அவளை அந்த அறையின் ஓரத்திற்கு தள்ளி கொள்ளச் சொல்லிவிட்டு அவன் தன்னுடைய பாயை அவளின் மற்றொரு ஓரத்தில் விரித்து அவளை பார்க்காதவாறு சுவற்றை பார்த்து முகத்தை வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான்
சில நிமிடங்களில் தூறிக் கொண்டிருந்த மழை கனத்த மழையாக மாறியது வானம் தொடர்ந்து இடியுடன் மின்னிக் கொண்டிருந்தது ஜன்னலின் வழியாக மின்னலின் ஒளி அவன் கண்களை துளைத்தது தொடர்ந்து வந்த வெளிச்சத்தினால் அவனால் சரியாக தூங்க முடியவில்லை அதனால் முகத்தை ஜன்னலில் இருந்து திருப்பி வைத்துக் கொண்டான்
இப்பொழுது அவனால் அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது அப்பொழுது அவள் குளிரினால் நடுங்கிக் கொண்டிருப்பதை கண்டான் பாவம் இன்றைய நாள் இவளுக்கு சரியில்லை நிம்மதியாக தூங்க கூட முடியாமல் கஷ்டப்படுகிறாள் என்று எண்ணியதோடு அவள் நன்கு உறங்குவதற்கு உதவி செய்ய எண்ணினான் அவளுடைய தோளை தட்டி என்னிடம் இருக்கும் ஒரு போர்வையை உனக்குத் தருகிறேன் என்று சொன்னான்

ஆனால் மொத்தமாக அவனுடைய போர்வையை தரவும் அவன் மனசு இடம் தரவில்லை குளிர் அதிகமாகி கொண்டே இருந்தது போர்வையில்லாமல் தூங்க முடியாது என்று நான் இரவு முழுவதும் கண் விழித்தால் காலையில் தூக்கக் கலக்கத்துடன் இருப்பேன் என்னுடைய தியானம் கெட்டுவிடும் நிச்சயமாக எனது தியானம் மிக முக்கியமானது
ஒரு மரக்கட்டை எப்படி உணர்ச்சிகளை தூண்டாது அப்படியே தான் இவ்வளவு தேகத்தை நான் கருதுகிறேன் என்று அவன் எண்ணினான் அவள் ஆச்சரியம் அடைந்தாலும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை அவர்கள் இருவரும் ஒரே போர்வைக்குள் படுத்து உறங்கினர் அந்தப் பெண்ணின் உடலுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தால் சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த பிரம்மச்சாரியின் உள்ளத்தில் காம உணர்ச்சிகள் கிளர்ந்து எழுந்தன
இதனை உணர்ந்த போதிலும் சிறிதும் மனம் கலங்காமல் அமைதியுடன் இருந்தான் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எல்லாம் பசியுடன் இருக்கையில் அருகில் இருக்கும் பழங்களை எடுத்து உண்ண உள்மனம் தூண்டிய போதும் நான் அந்த ஆசைகளை அடக்கி உண்ணாமல் இருந்திருக்கிறேன் அதே போல் எனது மனதில் கோபம் உண்டான போதெல்லாம் கடும் சொற்களைக் கூறுதலிலிருந்து மட்டுமின்றி மௌனத்தையும் கடைபிடிக்கிறேன் நிச்சயமாக இந்த காம உணர்ச்சிகளுக்கும் நானடிமை ஆக மாட்டேன் எனவே எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாது என்று நினைத்தான்.
சில நிமிடத்திற்குள் அவனது ஆசை தீவிரமானது அவளை புணர அவன் ஆசைக்கொண்டு அவள் மீது தனது கரத்தை வைத்தான் அப்படி அவன் வைத்த வினாடியே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானான்
அவளுடைய இடத்தில் தனது குருநாதர் இருப்பதை கண்டான் சில வினாடிகள் ஒன்றும் தோன்றாமல் சிலைபோல் காட்சியளித்தான். குருநாதர் சொன்னார் நீ எல்லாவற்றையும் கடந்து விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஏற்கனவே ஒருகுரங்கின் கதைப் பற்றி உனக்கு கூறியிருக்கிறேன்
நீ இன்னும் பக்குவம் அடையவில்லை என்பதை உனக்கு உணர்த்தவே நான் பெண்ணாக மாறி இந்த நாடகத்தை போட்டேன்
கனிவான வார்த்தைகளைக் கேட்டதும் சிடனுக்கு அந்த கதை நினைவு வந்தது ஒரு பெரிய குரங்கு பட்டாளம் ஒரு காட்டில் வசித்து வந்தது கூட்டத்தின் தலைவனான குரங்கு மனிதர்களெல்லாம் ஏகாதசி விரதமிருந்து புண்ணியத்தை சம்பாதிக்கிறார்கள்
நாமும் அந்த ஏகாதசி விரதத்தில் ஒன்றும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது எல்லா குரங்குகளும் சம்மதித்தனர். ஏகாதசி நாள் வந்தது எல்லா குரங்குகளும் தரையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தது.
சிறிது நேரம் கழித்து இப்படி அசையாமல் தரையில் அமர்ந்து கொண்டிருப்பது நமக்கு உயிருக்கு பெரும் ஆபத்து என்று கூறியது ஒரு குரங்கு. யானைக் கூட்டம் நம்மை மிதித்து விட்டு போய்விடும் அல்லது ஏதாவது புலி சிங்கம் வந்தது என்றால் நம்மை கடித்து குதறிவிடும்
நாமெல்லாம் மரத்தில் வசிக்கும் மிருகங்கள் இப்படி தரையில் உட்கார்ந்து இருப்பது மனதிற்கு பிடிக்கவில்லை மரத்தின் மீது ஏறிக் இலைகளின் அடிப்பாகத்தில் ஏன் உட்காரக் கூடாது நமக்கு பாதுகாப்பாக இருப்பதோடு கிளைகளின் நுனியில் இருக்கும் பழங்களில் இருந்து தள்ளி இருப்போம் என்று கூறியது
எல்லா குரங்குகளுக்கும் சரி என தோன்றவே அவர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தியது சிறிது நேரம் சென்றது இன்னொரு குரங்கு சிறுத்தை நம்மை தாக்கலாம் கிளைகளில் நுனிக்கு சென்றால் சிறுத்தை வராது நாம் பழங்களை பார்க்காமல் இருப்போம் என்றது
கிளையின் நுனி சிறுத்தையின் பாரத்தை தாங்காது ஆகையால் சிறுத்தை அங்கு வராது அப்படியே அங்கு வந்தாலும் நாம் வேறு கிளைக்குத் தாவி விடலாம் பாம்புகளிடம் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ளலாம் கிளையின் நுனியில் இருக்கும் பழங்களை நாம் பார்க்கக் கூடாது
திரும்பி உட்கார்ந்து கொண்டு தரையையும் வானத்தையும் பார்த்துக் கொண்டே காலத்தை போக்குவோம் என்று கூறியது இந்த ஆலோசனை பிடித்திருந்தால் அதை உடனே செயல்படுத்த தொடங்கின
சில மணி நேரங்கள் ஆனதும் முனையில் உள்ள எல்லா குரங்குகளும் அமர்ந்திருந்தன ஆபத்தை தவிர்க்க வேண்டி எவ்வளவு நேரம்தான் தரையையே பார்த்துக் கொண்டிருப்பது மனதிற்கு அலுப்பாக உள்ளது ஒருவர் மட்டும் காவல் காத்தால் பிறகு ஒவ்வொருவராக அந்த வேலையை சிறிது சிறிதாக பகிர்ந்து கொள்வோம் என்றதும் மற்ற குரங்குகள் எல்லாம் தங்கள் இஷ்டப்படி நாலா பக்கங்களிலும் பார்த்துக்கொண்டிருக்கலாம் இதனால் நாம் சலிப்படையாமல் பொழுதைப் போக்கலாம்
சில சமயம் நம் பார்வை நொடிப்பொழுது இங்கிருக்கும் பழங்களின் மேல் விழலாம் இதனால் ஏகாதசி விரதத்திற்கு பங்கம் உண்டாகாது என்று கூறியது இந்த ஆலோசனையும் மற்ற குரங்குகள் ஏற்றுக்கொண்டனர் தங்கள் பார்வையை அங்கிருந்த பழங்களின் மேல் செலுத்தத் தொடங்கினார் ஒரு சில மணித்துளிகள் தான் சென்றிருக்கும் நாம் ஏன் வெறுமனே பழத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் அவை நன்கு பழுத்து உள்ளனவா இருக்கிறதா என்று கைகளால் தொட்டு சோதித்து வைத்துக் கொண்டோமானால் நாளைக்கு நமக்கு சௌகரியமாக இருக்கும்
ஏனெனில் நாம் மிகவும் பசியோடு இருப்போம் அதனால் நல்ல பழுத்த பழங்களை தேடி தெரிவதற்கு நம்மால் முடியாது அதற்கு நேரமும் நிறைய வேண்டி வரும் தனது பங்கிற்கு ஒரு உபதேசத்தை முன்வைத்தது
எல்லா குரங்குகளும் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தது நன்கு பழுத்த பழங்களை கண்டதும் என் வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது நாளைக்கு நான் பசியோடு மட்டுமின்றி மிகவும் களைத்துப் போய் இருப்போம் பழங்களைப் பறிக்க மரத்தின் மீது ஏறுவதற்கு கூட நமக்கு கஷ்டமாக இருக்கும்

அதனால் இப்பொழுதே பழுத்த பழங்களாக தேர்ந்து வைத்துக் கொண்டோமானால் சிரமமின்றி சாப்பிடலாம் என்று அறிவுரை கூறியது எல்லா குரங்குகளும் அதனைப் பாராட்டி அந்த பழங்களை பறிக்க ஆரம்பித்தன அந்த குரங்கு நல்ல பழங்களை கண்டுபிடிக்க அவைகளை தொட்டுப் பார்த்தால் மட்டும் போராது முகர்ந்து பார்க்க வேண்டும் என்று கூறியது தொட்டுப் பார்த்தால் நல்லவை போல் காட்சியளிக்கும் ஆனால் அழுகிப் போய் இருக்கும்
அழுகிய பழங்களை நாம் சாப்பிட மாட்டோம் வாசனை உள்ளதா என்று சோதித்து பார்த்து விடுவது நல்லது என்று கூறியது உடனே பழங்களை முகர்ந்து பார்க்க தொடங்கின அழகிய பழங்களை தரையில் வீசி எறிந்தன ச
ில பழங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் தொட்டுப் பார்த்தாலும் நன்றாக இருக்கும் முகர்ந்துப் பார்த்தாலும் நன்கு கனிந்த பழத்தை போல வாசனை தரும் ஆனால் உள்ளே பார்த்தால் புழுக்கள் இருக்கும் இதனை நான் அனுபவத்தில் பல தடவை பார்த்து இருக்கிறேன்
அதனால் பழத்தை சிறிது யோசித்துப் பார்த்தால் தான் அவை நல்ல பழங்கள் என்று நிச்சயமாக நம்மால் சொல்லமுடியும் நாளை காலை சாப்பிடுமாறு நல்லபடியாக அமையும் அழுகிய பழங்களை சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்பட வேண்டாம் ஓரத்தில் சிறிது கடித்து பார்த்தால் நமக்கு ஏகாதசி விரதம் ஒன்றும் கெட்டு விடாது
அவற்றை விழுங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றது எல்லா குரங்கும் ஆமோதித்தது பழங்களை ருசிக்க ஆரம்பித்தது எல்லாம் நன்கு பழுத்த பழங்களை கடித்து சுவைத்து சாப்பிட ஆரம்பித்தது இப்படியாக குரங்குகளின் ஏகாதசி விரதம் முடிந்தது
சிஷ்யனுக்கு கதை ஞாபகப்படுத்தி விட்டு யோகி இந்தக் கதையிலிருந்து நீ சரியான பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன் உனக்கு பாடம் புகட்டுவதற்காக எனது யோக நிலையை சக்தியால் ஒரு இளம் பெண்ணாக உருமாறி உன் முன் காட்சி தந்தேன்
பிறகு நடந்ததை நீயே அறிவாய் புத்தி தடுமாற்றத்தை உண்டாக்க இந்திரியங்களுக்கு இருக்கும் சாமர்த்தியத்தை குறைத்து மதிப்பிடுவதாகும் தனது செயல்களை தானே குறைபாடுகளுடன் கூடிய காரணங்களால் நியாயப்படுத்திக் கொள்வதாலும் அளவுக்கு மீறிய நம்பிக்கையை தன்னிடத்தில் வைத்துக் கொள்வதாலும் விட்டுக் கொடுக்கக்கூடாது
இந்த விஷயங்களில் விட்டுக் கொடுப்பதால் ஒருவன் ஆன்மீக நெறியில் இருந்து தவறி விழுந்து விடுகிறான் என்று அறிவுரை கூறினார் பிரம்மச்சாரி தனது தவறை உணர்ந்து திருந்தினான் சிஷ்யன்.
இக்கதையின் வாயிலாக ஆச்சார்யாள் ஒருவன் மனதை அடக்கிவிட்டேன் என்று கூறுவதும், அது தன் வசம் இழக்க சந்தர்ப்பம் அமைந்தால் தவங்களும் பூஜைகளும் வைராக்கியமும் போகும் இடம் தெரியாது என்பதையும் விளக்கி திடமும் வைராக்கியமும் எவ்வளவு தூரத்திற்கு வலுவுடன் இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்கள்.



