December 6, 2025, 3:34 AM
24.9 C
Chennai

உபாகர்மா: அர்த்தமும், தாத்பரியமும்..!

Screenshot 2020 0802 151716 - 2025

வேதத்திற்காக ஒரு பண்டிகை.
உங்களுக்குத் தெரியுமா❓
அது தான் ஆவணி அவிட்டம் புது பூணூல் மாற்றி கொள்வதற்காக மட்டும் அல்ல.

ப்ராசீனமான நமது வைதிக சம்ப்ரதாயத்தில் பல பண்டிகைகள், விழாக்கள் உண்டு. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது என்பதையும் நாம் அறிந்ததே.

அது மாதிரி வேதத்திற்காக ஒரு பண்டிகை, உண்டு என்றால் அது உபாகர்மா எனும் பண்டிகைதான். ஆவணியாவிட்டம் என்றும் சொல்லப்படும் இந்த பண்டிகை வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப்படுவதில்லை.

ஆனால் இக்காலகட்டத்தில் நம்மில் எத்தனை பேர் ஆவணியாவிட்டத்தன்று இந்த பண்டிகை வேதத்தை உத்தேசித்துதான் கொண்டாடப்படுகின்றது என அறிந்துள்ளோம் என்பது சந்தேகம் தான்.

ஆவணி அவிட்டம் என்ற உடனே புது பூணூல் மாற்றி கொள்வது மட்டும்தான் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கலாம். ஓரளவிற்கு இதில் உண்மை இருந்தாலும், உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதுதான் சத்தியம்.

பொதுவாக ஆவணி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகை வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்று ஒரு பெயர் வந்திருக்கலாம். ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ஆனால் உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர்.

உபாகர்மா என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது வேதாரம்பம்.

Screenshot 2020 0802 151735 - 2025

”ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம் உபாக்ருத்ய மாஸ ப்ரதோஷே ந அதீயீத, தேஷ்யாம் பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வா விரமேத்” என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார். இந்த வாக்யத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால் ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பெளர்ணமி அன்று முதல் ச்ராவணமானால் ப்ரஹ்மச்சாரிக்கும், மற்ற க்ரஹஸ்தர்களுக்கும் இந்த நாள் வேதாரம்பம் ஆகும்.

மேலும் வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகின்றதாம். அதாவது ‘பழையது’ என சொல்லுகிறோம் அல்லவா அது மாதிரி. இந்த தோஷம் நீங்கவும் உபாகர்மா செய்யப்படுகின்றது. வேதத்திற்குபோய் ‘பழைய’ எனு தோஷம் எப்படி வரும் எனும் சந்தேகம் நமக்கு வந்தால் அது நியாயம்தான். வேதத்திற்கு இயற்கையாக எந்த தோஷமும் வராது. ஆனால் நாம், சாதாரண மனிதர்கள், வேதத்தை பாராயணம் செய்வதனால் அதற்கு அந்த தோஷம் வருகிறதாம். உதாரணத்திற்கு நாம் ஆலயங்களை எடுத்துக்கொள்ளலாம்.. கும்பாபிஷேகம், பவித்ரோத்ஸவம் நாம் ஏன் செய்கின்றோம் என யோசித்தால் நமக்கு இதன் அடிப்படை புரியும்.

பிரஹ்மாவும், உபாகர்மாவும்:
மேலும், உபாகர்மாவில் ப்ரஹ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார். அதையும் பார்ப்போமா.வேதத்தை ரிஷிகள் இயற்றவில்லை.என்பது நமக்கு தெரிந்ததே. ஸர்வஞ்னான ஸர்வேஸ்வரன் ஸங்கல்பம் செய்து கொண்டதாக வேதமே கூறுகின்றது. இதோ,

அதற்கான வாக்யம்:
“ஸோ காமாயத! பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி !”
ஈஸ்வரனின் அறிவான அந்த வேதத்தை அவர் முதல் முதலில் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்தார். உபதேசம் செய்தார் என்னும்போது வாயால் உபதேசித்ததாக நினைக்க வேண்டாம். சங்கல்பத்தினாலேயே உபதேசித்தார். ப்ரஹ்மாவிற்கு பிறகு ப்ரஜாபதிகள் ‘சந்தை’ சொல்லி, ‘திருவை’ சொல்லி வேதத்தை வரப்படுத்தினார்கள். ப்ரஹ்மா உபதேசம் பெற்ற நாள் எது தெரியுமா❓ இன்று தான்.

ஆதலால் இது வேதத்தின் ‘ஆண்டு விழாவாகவும்’ (Anniversary) எடுத்துகொள்ளலாம். இதை பற்றி ஏற்கனவே ‘வேதமும் பண்பாடும்’ புஸ்தகத்தில் ‘வேத ப்ரபாவம்’ என்கின்ற அத்யாயத்தில் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதத்தை கற்றவர்கள், வேதாத்யயனம் செய்தவர்கள், உபாகர்மா செய்து வேதம் சொன்னால்தான் வேதத்திற்கு மஹிமை உண்டு என சாஸ்திரம் சொல்லுகின்றது.

’நாம் தான் வேத அத்யயனம் செய்யவில்லையே.அப்போ எனக்கு உபாகர்மா அனுஷ்டிப்பதிலிருந்து விதிவிலக்கு உண்டா❓என்று சிலர் யோசிக்கலாம். நியாயம் தான். வேதாத்யயனம் செய்யாமலிருக்கலாம். ஆனால் உபாகர்மா அனுஷ்டித்துதான் ஆகவேண்டும். எப்படி என்று பார்ப்போம். நித்யப்படி நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் மந்திரங்கள், மேலும் காயத்ரி மந்திரம், பூஜை புனஸ்காரங்களில வரும் மந்திரங்கள், ச்ராத்தம் போன்ற கார்யங்களில் வரும் மந்திரங்களை நாம் வருஷம் முழுவதும் சொல்லுகிறோம் அல்லவா, இவைகள் நமக்கு பலனளிக்க வேண்டுமானால் உபாகர்மா செய்தே ஆக வேண்டும். நாம் சொல்லும் மந்திரங்களுக்கு சக்தி வர வேண்டுமானால் உபாகர்மா ச்ரத்தையாக அனுஷ்டித்தே ஆக வேண்டும்.

இப்போது புரிந்ததா உபாகர்மாவுக்கும் வேதத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் உள்ளது என்று.

இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளுவோம். ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது. பூணூல் போட்ட மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை. முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்க யோக்யதை வருகின்றது.

உபாகர்மா அன்று நாம் செய்யும் வைதிக சடங்குகளில் வரும் சில அற்புதமான சில விஷயங்களை இங்கே இப்போ பார்ப்போம்:

நூதன யக்ஞோபவீத தாரணம்.

காமோகார்ஷீத் ஜபம்:

ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் ‘உத்ஸர்ஜனம்’ ஒன்றும் இருக்க வேண்டும் அல்லவா. வேதத்தை யதோக்தமாக உத்ஸர்ஜனம் செய்ய வேண்டும்.இந்த உத்ஸர்ஜனத்தை அனுஷ்டிப்பவர்கள் மிக குறைவு. ஆதலால்தான் உத்ஸர்ஜனம் செய்யாததற்கு ப்ராயஸ்சித்தமாக ‘காமோகர்ஷீத்’ என்கின்ற ஜபத்தை இன்று செய்கிறோம். மேலும் இது ஒரு சர்வ பாப ப்ராயஸ்சித்த மந்திரமாகவும் விளங்குகின்ற்து.

தர்ப்பணம், ஹோமம்:

மந்திரங்களை நமக்கு ஆதியில் தந்த ரிஷிகளையும், தேவதைகளையும் பூஜித்து அவர்களது தபஸ்சக்தி மூலம் அவர்களுடைய அனுக்ரஹத்தை நாம் அடையவேண்டித்தான் ச்ராவணத்தில் ப்ரஜாபதி முதலிய ஒன்பது பேர்களுக்கு காண்டரிஷி தர்ப்பணம் செய்கிறோம் தொடர்ந்து ஹோமமும் சொல்லப்பட்டுள்ளது.

Screenshot 2020 0802 151926 - 2025

மஹா சங்கல்பம்:

எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல் உபாகர்மா அன்று சொல்லப்பட்டுள்ள மஹா ஸங்கல்பம் மிகவும் விசேஷமானது என்பதை நாம் அறிவோம். பல பாவங்களும் தோஷங்களும் நீங்குவதற்கான பிரார்த்தனை வாக்யங்கள் அடங்கியுள்ள இந்த ஸங்கல்பத்தை நாம் பக்தி ச்ரத்தையோடு சொல்லுவது பலன் அளிக்கும். இந்த ஸங்கல்பத்தில் பல தேவதா மூர்த்திகளின் சன்னிதிகளையும், புண்ய க்ஷேத்ரங்களையும், புண்ய நதிகளையும் நாம் நினைவிற்கு கொண்டு வருகின்றோம் அல்லவா. நாம் பாக்யசாலிகள்தாம். .

எனவே வருஷத்தில் நாம் பல சந்தர்பங்களில் செய்யும் பலவிதமான கர்மாக்களில் வரும் மந்திரங்கள் பலமுள்ளதாக நமக்கு ஸ்ரேயஸ் அளிக்க வேண்டும் என நாம் நினைத்தால் நாம் இந்த உபாகர்மாவை ச்ரத்தையாக செய்ய வேண்டும்.

உபாகர்மாவை அனுஷ்டானம் செய்யாவிடில் தோஷம் ஏற்படும். சந்தேகமே வேண்டாம். இதை செய்தால்தான் நம்மிடமிருக்கும் சொல்ப வேத மந்திரமானது வீர்யத்தோடு கூடியதாகயிருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories