December 8, 2024, 4:21 AM
25.8 C
Chennai

தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் இது தான்!

krishnar
krishnar

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என
ஶ்ரீ கிருஷ்ணன் அருளியதை பற்றிய அழகான அருமையான பதிவு இது,

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார் என்பதை விளக்கும் நிகழ்வு.

குருஷேத்திரப் போர் முடிந்து
ஒரு நாள் இருவரும் துவாரகையில் நகர் வலம் போகின்றனர்.

அப்போது அர்ஜுனன் மனதில்
நம்மை ஏன் கீதை உபதேசம் செய்ய தேர்ந்தெடுத்தார் என சந்தேகம் தோன்றுகிறது .
பலராமரிடம் சொல்லி இருக்கலாம்.
தாய் யசோதை இல்லை தேவகி இடம் சொல்லி இருக்கலாம்.

ராதை,பாமா, ருக்மணியிடம் சொல்லி இருக்கலாம்.?
ஏன் என்னிடம் சொன்னார்.?
காரணம் என்ன?
யோசித்த அர்ஜுனன்
கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறார்.
” கண்ணா கீதா உபதேசத்திற்கு ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.
பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர்.
ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.

ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர்,
தரும நீதிகளை உணர்ந்தவர்.
அவரை ஏன் நீங்கள் புறக்கணித்தீர்கள் ?

அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர்.

ALSO READ:  பரணி மகா தீபத்துக்கு இத்தனை பேர் தான் அனுமதியாம்!

இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய்
கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கருதியிருக்கிறீர்களே,
இது எவ்வகையில் நியாயம்?
என நேரடியாக கண்ணபிரானிடமே கேட்டு விடுகிறார்.

அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் அவரது சந்தேகத்திற்கு இவ்வாறு பதிலளிக்கிறார்.

அர்ஜுனா !
நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன்.
என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை.

நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு.

கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.

அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்.
இது இரட்டை வேடம்.

ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது.
எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ
அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம்.
அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர்.
தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால்
பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன்.
அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை
பல கற்றவன் என்ற போதும்கூட
நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு.

இதோ பார், உன்னைவிட வயதான,
அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய்.

என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்.

அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய்.

பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்.
நீ பதவி வெறியனல்ல.
பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்த போதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது.

ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய்.

இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்.

நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு.
இப்போது புரிகிறதா அர்ஜுனா,
நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல;
தகுதிச் சிறப்புதான் காரணம் என்றார்.

ஒருவருடைய தகுதி நியாய அநியாயங்களை சமமாக பாவிக்கும் திறன், சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவெடுக்கும் புத்தி சாதுர்யம்,
எந்த சூழ்நிலையிலும் தன் சுய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை, என் குடும்பம் ,என் உடைமை என யோசிக்காமல் அனைவரையும் ஒன்று போல் நேசிக்கும் மனபாங்கு இந்த தனிப்பட்டதகுதிச் சிறப்புதான் கண்ணபிரான் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசிக்க காரணம்.

நாமும் இத்தகைய நற்பண்புகளை வளர்த்துக்கொண்டு கண்ணபிரான் அன்பை பெறுவோமாக.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...