spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்காளிதேவி தோற்றக் காரணமும் விளக்கமும்..!

காளிதேவி தோற்றக் காரணமும் விளக்கமும்..!

- Advertisement -

ஸ்ரீ காளிமாதா என்று சொன்னதும் பயங்கரமான ரூபம் அவள் கையில் கொண்டுள்ள பொருள்களும், தரித்திருக்கும் ஆபரணங்களும் நம்மில் பலருக்கு ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தும். அவள் பயங்கரி, உக்ரமானவள் என்று நினைத்து அவளிடம் நெருங்க தயங்குவோம்.

ஆனால் உண்மையில் பராமனந்தமும் ப்ரேமையும் நிறைந்த கருணாமூர்த்தியாகிய இந்த தேவியை பார்த்து நாம் பயந்து கொள்ள அவசியமில்லை

அவளுடைய ரூபமும் இத்யாதி ஆபரணங்களும், ஸ்வரூபத்தில் உள்ள பல லக்ஷணங்களும் வேதாந்த ஸாரமான விஷயங்கள் , மந்தரசாஸ்த்ர தத்துவங்கள்.

உதாரணமாக தேவியின் விரிந்து பரவி நர்தனமாடும் அவள் கேசம் கூட இவள் கட்டிலடங்காநிலையில் உள்ள பரப்ரஹ்ம்மதின் ஸகுண ரூபம் என்கிற உண்மையை சொல்லவதற்காக.

இவள் தேஹத்தில் வஸ்த்ரம் இல்லாமல் இருப்பது இவளின் குணங்கடந்த கோலத்தையும், நிர்குணஸ்வரூபிணீ என்ற தத்துவத்தை காட்டவதற்காக! .

தன் இடது மேற்கரத்தில் தாங்கும் வாள் ஞான ஸக்தியின் சின்னம்.

இடதுகீழ் கரத்தில் உள்ள வெட்டப்பட்ட ஸிரஸானது யோகாப்யாஸம் செய்த ஒரு யோகியானவன் ப்ரபஞ்சத்தில் எல்லா பற்றுகளும் துறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதைக் காட்டும் தத்வம்.

தன் இடுப்பில் வெட்டப்பட்ட கரங்களை கோத்த மேகலையை சூடியிருப்பது கர்மயோக ஸித்தியின் மகிமையை நமக்கு எடுத்து சொல்லவதற்காக!.

இவள் ஸ்ரீ மஹாகாளரின் ஹ்ருதயத்தில் வலதுபாதம் வைத்து ஸதா ஆடிக் கொண்டிருப்பது கூட ஜீவன்முக்தனின் நித்யானந்த நிலையைக் காட்டவதற்காக.

பரம கருணாமூர்த்தியாகிய பராஸக்தி, தன் குழந்தைகளாகிய எல்லா ஜீவன்களையும் ரக்ஷிக்கும் ஆனந்தத்தில் திளைத்து ஸந்தோஷித்து ஆனந்த நர்த்தனம் செய்து அருளைப் பொழியும் வேளையில் தனது வலது பாதத்தை ஸ்ரீ மகாகாளரின் ஹ்ருதய ஸ்தானதிலே வைத்து கொண்டு இருக்கிறாள்.

ஜகந்மாத்ரூகையின் பாதத்தை தாங்கி களிப்படையும் ஸ்ரீ மஹாகாளர், தேவியின் காருண்யத்தையும், ஷக்தியையும் பார்த்து தன் இயல்பான இயக்கம் செயல் இல்லாது போவதை உணர்கிறார்.

செயலற்றுப் போன மஹாகாளர் ஒரு சவம் போல் கீழே கிடந்து தேவியின் ஆனந்த நடனத்தை மிகுந்த சந்தோஷத்துடன் அனுபவித்துக் கொண்டு உள்ளார்.

இந்த நிலையை த்யானிக்கும், எந்த உபாஸகனும் தானும் அந்த பேரானந்த பரவசத்தில் மூழ்கி சிவத்துவம் அடைவானே தவிர பீதிக்கு இரையாக மாட்டான்.

இந்த தேவியின் வழிப்பாட்டு க்ரமத்தில் பலியிடுதல் ஒரு அம்ஸம். ஜீவன்களின் ப்ராணனை அபஹரித்து அர்ப்பணம் செய்வது தான் பலி என்று நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

தேவியை உபாஸிப்பவர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸ்ர்யம் என்கிற ஷட் ஸத்ருக்களை தேவியின் மந்தர ஜபம் என்கிற ஹோம அக்னியில் இடும் ஹவிஸே இந்த பலி ஸம்ப்ரதாயம். காளி அந்த மஹாகாளராலயே புரிஞ்சுக்க முடியாத பரப்ரஹ்ம்ம ஸ்வரூபிணி!!

காளி மந்த்ரங்களுக்கு கட்டுப்பட்டவள் என்று நினைத்தால் அதுவும் நமது அறியாமை தான் ஏனெனில் இவளது மந்த்ரத்திற்கு விஷேஷமாக வித்யாராக்ஞீ என்கிற பெயர் உண்டு. அதாவது மந்த்ரங்களுக்கெல்லாம் ஆதியானவள் காளி என்பது பொருள்.

வித்யைகளுக்கெல்லாம் மஹாராக்ஞீ நம் காளீ தான். இப்பேர்ப்பட்ட அந்த லோகமாதவை பூர்ணஸரணாகதி பண்ணவேண்டும்.

“ஸ்வதந்த்ரா” அவள் யாருக்கும் கட்டுப்படாதவள் ஆனால் அவளுக்கு பக்திவச்யா என்கிற நாமமும் உண்டு.

ஸம்பந்தாண்டான் மாதிரி அஞ்ஞானத்தோடு பூஜிக்காமல் தெனாலி ராமனை போல குழந்தை மாதிரியும் ராமக்ருஷ்ணரை போல ஸ்ரத்தா தாஸ்ய பாமர பக்தியோட அவளை சரணடைவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe