December 5, 2025, 11:50 PM
26.6 C
Chennai

ஊஞ்சல் ஆட தயாரான ராதா! காத்திருந்த அதிர்ச்சி!

radha krishna
radha krishna

ஒருமுறை, வ்ரஜ பூமிக்கு வந்த நாரத முனிவர், தன வீணையை மிக அழகாக வாசித்தார். இதை கேட்டு மயங்கிய பகவான் கிருஷ்ணர், நாரத முனிவருக்கு வேண்டிய வரமளிக்க தயாராக இருந்தார்.

நாரதர், “எனக்கு இப்போது எந்த வரமும் தேவையில்லை. தேவைப்படும்போது நானே கேட்டுக்கொள்கிறேன்”, என்று கூறினார். கிருஷ்ணரும் சம்மதித்தார்.

ஒரு நாள், அனைத்து சகிகளும் ஒன்று சேர்ந்து, லலிதா குண்டத்திற்கு அருகில், கிருஷ்ணருக்கும் ராதாரணிக்கும் ஒரு ஊஞ்சல் திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

அதற்காக ஒரு ஊஞ்சலை தயார் செய்து அதனை அலங்காரம் செய்து, அனைத்து சகிகளும் பகவான் கிருஷ்ணரும் தயாராக இருந்தனர். எனினும் ஸ்ரீமதி ராதாராணி அங்கு வரவில்லை. அவரில்லாமல் விழா தொடங்க முடியாது.எனவே அனைவரும் அவருக்காக காத்திருந்தினர்.

narather
narather

அப்போது அங்கு வந்த நாரத முனிவர், நடக்கவிருக்கும் விழா பற்றி அறிந்துகொண்டார். பகவான் கிருஷ்ணரிடம், “அன்றொருநாள் தாங்கள் எனக்கு வரமளிப்பதாக கூறினீர்களே. அந்த வரத்தை நான் இப்போது கேட்க போகிறேன் அதை மறுக்காமல் தரவேண்டும்”, என்று கூறினார்.பகவான் கிருஷ்ணரும் ஒப்புக்கொண்டார்.

நாரதர், “பிரபுவே “நீங்களும் லலிதா சகியும் ஒன்றாக ஊஞ்சல் ஆடுவதை பார்க்க நான் ஆசை கொள்கிறேன்”, என்று கூறினார். இதை கேட்ட பகவான் கிருஷ்ணர், “இது மிகவும் எளிது. ஊஞ்சல் தயாராக உள்ளது. ராதாராணியும் இன்னும் வரவில்லை.

ஆகையால் நானும் லலிதாவும் ஊஞ்சல் ஆடுகிறோம்” என்று கூறினார். இதை கேட்ட நாரத முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் லலிதா சகி வருத்தமடைந்தார். ஏனெனில் அவர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடன் , அவரது பிரிய தோழி ஶ்ரீமதி ராதாராணியுடன் ஊஞ்சலில் ஆடுவதையே விரும்பினார்.

லலித சகியின் தயக்கத்தை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர், லலிதா சகியின் கரத்தை பிடித்து தன் அருகில் அமர வைத்து ஊஞ்சலில் ஆட துவங்கினார். இதை கண்ட நாரத முனிவர் மற்றும் சகிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நாரத முனிவர் உடனடியாக அங்கிருந்து மறைந்தார்.

radha krishnar
radha krishnar

லலிதகுண்டத்திலிருந்து ஸ்ரீமதி ராதாராணியின் இருப்பிடத்திற்கு சென்ற நாரதர், ஶ்ரீமதி ராதாராணியின் அறைக்கு சென்று அவரிடம், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”, என்று வினவினார்.

ராதாராணி மிகவும் மகிழ்ச்சியாக, “நான் கிருஷ்ணருடனான ஊஞ்சல் திருவிழாவிற்கு என்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறேன்”, என்று பதிலளித்தார். நாரதர், சிரித்துக்கொண்டே, “பாவம் நீங்கள். இங்கே அலங்காரம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் அங்கே என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் இல்லாமல், லலிதா சகியுடன் ஊஞ்சல் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது”, என்று கூறினார். ராதாராணியால் இதை நம்ப முடியவில்லை.

நாரதர், “வேண்டுமென்றால், நீங்களே லலிதா குண்டத்திற்கு சென்று உறுதி செய்து கொள்ளுங்கள்”, என்று கூறினார். உடனடியாக ஶ்ரீமதி ராதாராணி லலிதா குண்டத்திற்கு விரைந்தார்.

தூரத்திலிருந்து பார்த்த அவருக்கு, கிருஷ்ணரும் லலிதா சகியும் ஊஞ்சல் ஆடுவது தெரிந்தது. மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து சென்றார்.

வெகு நேரமாகியும் ராதாராணி வராததால் கிருஷ்ணர் சந்தேகமடைந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். நாரத முனிவரை காணவில்லை. நாரதர் தான் ஏதோ கலகம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிய கிருஷ்ணர், ராதாராணியை அழைத்து வர தானே சென்றார். பல இடங்களில் தேடிய பிறகு, ராதாராணி ஒரு பாறையின் மேல் அமர்ந்து மிகவும் கோபமாக, அழுதுகொண்டிருந்ததை பார்த்தார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் ராதாராணியின் அருகில் சென்று அவரை சமாதான படுத்த முயற்சித்தார். ஆனால் ராதாராணி எதையும் கேட்க தயாராக இல்லை. மிகவும் கோபமாக ” இனி நான் உங்களுக்கு தேவையில்லை, ஊஞ்சலாட இன்று முதல் உங்களுக்கு லலிதா கிடைத்துவிட்டாளே , அவளுடன் ஊஞ்சல் ஆடுவதால் உங்களுக்கு மகிழ்ச்சியெனில் நீங்கள் லலிதாவுடனே மகிழ்ச்சியாக இருங்கள். நான் உங்கள் விருப்பத்திற்கு எதிராக ஒன்றும் சொல்லபோவதில்லை “, என்று வருத்ததுடன் கூறினார்.

radha
radha

கிருஷ்ணர், “நான் லலிதாவுடன் ஊஞ்சல் ஆடியது உனக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டார். “நாரதர் கூறினார்”, என்று பதிலளித்தார் ராதாராணி. கிருஷ்ணருக்கு இப்போது புரிந்தது, நாரதரின் கலகம்.

ராதாரணியிடம், தான் அளித்த வரத்தை பற்றியும், நாரதரின் வேண்டுகோள் பற்றியும் விளக்கிய கிருஷ்ணர், எவ்வாறு நாரதர் தங்களுக்குள் கலகம் ஏற்படுத்தியுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

லலிதாவிற்கு தன்னுடன் ஆட விருப்பமில்லை என்பதையும் தான் தான் நாரதரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக லலிதாவை வற்புறுத்தினேன் என்பதையும் விளக்கினார் கிருஷ்ணர்.

இந்த விளக்கங்களை கேட்ட ராதாராணி சமாதானமடைந்தார். பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக ஊஞ்சல் ஆடுவதற்காக லலிதா குண்டம் நோக்கி நடந்தனர்.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் ஶ்ரீமதி ராதாராணிக்கும் இந்த குட்டி பிணக்கின் மூலம் பிரேம ரசத்தை பெருக்கவே , நாரத முனிவர் இது போன்ற ஒரு நாடகத்தை நடத்தி அனைவரையும் ஆனந்த படுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories