மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டாவதற்கு குரு மற்றும் ஈச்வரனுடைய கிருபை தேவை.
அந்த கிருபை இல்லாவிட்டால், மற்றவர்களை அடிக்க வேண்டும், அவர்கள் துன்புறுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்னும் அசுர எண்ணங்கள்தான் நம் மனதில் எழும்.
குரு மற்றும் ஈச்வரனுடைய அருளைச் சம்பாதிக்க நாம் அவர்களுக்கு சேவை புரிய வேண்டும். அவர்களுக்குச் சேவை புரிந்தால் மனதின் மலம் நீங்கி புனிதம் ஏற்படுகிறது.
தூய மனதில் நல்ல எண்ணங்கள் ஏற்பட்டு அதன் மூலம் நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது. ஆகையால், ஈச்வரனையும் குருவையும் அடைக்கலமாக அடைய நமக்கு உள்ள தூண்டுகோல் இந்த பரோபகாரம்தான்.