spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்உணர்ந்தால் அறிவோம்.. கீதையே கிருஷ்ணர்!

உணர்ந்தால் அறிவோம்.. கீதையே கிருஷ்ணர்!

- Advertisement -
krishnan
krishnan

வெகு காலம் முன்பு, ‘அர்ஜுன மிஸ்ரா’ என்ற பெயருடைய பண்டா ஒருவர் பூரியில் வசித்து வந்தார். நாள் தோறும் அவர் பகவத் கீதையை முழுவதும் பாராயணம் செய்து வழக்கம்.

தன்னுடைய முழு நேரத்தையும் கீதை பாராயணம் செய்ய கழித்ததாலும், தன்னுடைய அசையா நம்பிக்கையாலும், உள்ளூர் மக்கள் அவரை ‘கீதா பண்டா’ என்றே அழைத்தார்கள். அவர் பகவான் ஜகந்நாதரின் பரம பக்தன், முழுமையாக சரணடைந்த ஆத்மா.

அவர் எல்லாவற்றுக்கும் பகவான் ஶ்ரீ ஜகந்நாதரையே நம்பியிருந்தார். அவர் எது நடந்தாலும் அதை பகவான் ஶ்ரீ ஜகந்நாதருடைய விருப்பமாக ஏற்றுக் கொண்டார். அதனால் கீதா பண்டா இன்ப துன்பங்களால் பாதிப்படையாமல் இருந்தார்.

அவர் மிகவும் ஏழ்மையானவர். யாசகம் கேட்டே தனது நித்ய வாழ்வை நடத்தி வந்தார். ஒரு சமயம் பூரியில் ஒரு வாரம் கடும் மழை பெய்தது. கீதா பண்டாவால் வெளியே போய் யாசகம் கேட்க முடியாமல் போயிற்று. அவரிடமிருந்த சொல்ப தானியங்களும் விரைவில் தீர்ந்து போயின. அவரும் அவரது குடும்பத்தாரும் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று. ஆயினும், கீதா பண்டா கலங்கவில்லை .

அவர் சந்தோஷமாய் கீதை பாராயணம் செய்து காலம் கழித்தார். வெளியே போக முடியாமல் போனதுப் பற்றி அவர் சந்தோஷப்பட்டார். கீதை பாராயணத்திற்கு நிறைய கால அவகாசம் அல்லவா அவருக்கு கிடைத்திருக்கிறது! இதை ஒரு நல்ல வாய்ப்பாகக் அவர் கருதினார்.

அவர் மனைவிக்கு அவர் மேல் கோபம் எழுந்தது. கணவனை இடித்துரைத்தாள் நீங்கள் வெளியே போய் யாசகம் கேட்டாலன்றி, எங்கேயிருந்து உங்கள் குடும்பம் பிழைக்கும் என்று நினைக்கிறீர்கள்? நமக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். நீங்கள் வெளியே போய், அவர்களுக்கு ஏதாவது கொண்டுவராவிட்டால் அவர்கள் எல்லோரும் பட்டினியில் இறந்துவிடுவார்கள்” என்றாள். கீதா பண்டா மனந் தளரவேயில்லை. அவர் தன் மனைவிக்கு ஶ்ரீமத் பகவத் கீதையிலிருந்து ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.

அனன்யாஷ் சிந்தயந்தோ மாம்
யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம்
யோக-க்ஷேமம் வஹாம்-யஹம்

ஆனால் எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்துகொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றை காத்தும் நான் பரிபாலிக்கின்றேன். ( ஶ்ரீமத் பகவத் கீதை 9.22 )

அவளுக்கு தனது கணவரது செய்கையினால் கோபம் இன்னும் அதிகரித்தது. பல நாட்கள் பொறுத்துப் பார்த்தாள் ஆனாலும் அவள் கணவன் எதுவும் கொண்டுவரவில்லை. அவர் அவளிடம் வெறுமனே சொல்லிக் கொண்டிருந்தார்

“நாம் பகவானை சார்ந்திருந்தாலே போதும், அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக தாமே பகவத் கீதையில் சொல்லியிருக்கிறார்.

எத்தனை காலம் தான் பொறுத்துப் போக முடியும் என்று மனைவி நினைத்துப் பார்த்தாள். உணவில்லாமல் குழந்தைகள் மிகவும் பசியால் வாடிக்கிடந்தார்கள். மிகவும் கோபமடைந்த மனைவி , பகவத் கீதையை கையில் எடுத்து திறந்து, கணவன் மேற்கோள் காட்டிய ஸ்லோகத்தில் மூன்று வரிகளை கீறினாள்.

பிறகு பசியும் விரக்தியும் மேலிட அவள் தனது குழந்தைகளுடன் உறங்க சென்றாள். சிறிது நேரம் கழித்து வீடு வந்த பண்டாவும் ஓய்வெடுக்க அவரது அறைக்கு சென்றார்.

சற்று கழித்து, கீதா பண்டாவின் மனைவி வாயிற் கதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டாள். படுக்கையை விட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தாள், வெளியே இரண்டு அழகான சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தங்களோடு சமைப்பதற்குக் தேவையான பல பொருட்களை கொண்டு வந்திருந்தார்கள். அங்கு வந்த இரண்டு அழகான சிறுவர்களைப் பார்த்த பிராமணிக்கு பேராச்சார்யம், வந்த இருவருள் ஒருவர் கருப்பு நிறத்திலும் : மற்றவன் பால் வெள்ளை நிறத்திலும் மிகவும் அழகாக காட்சியளித்தனர் , கருப்புச் சிறுவன் பிராமணியிடம் பேசினான்.

கீதா பண்டாவின் நண்பர் ஒருவர் இவற்றை எங்களிடம் கொடுத்தனுப்பினார் “தயவுசெய்து இந்தப் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள், சமைத்து நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் வயிறார உண்ணுங்கள் என்றனர். இந்த அழகானச் சிறுவர்களைப் பார்க்க பிராமணிக்கு மிகவும் மகிழ்ச்சி பொங்கிற்று.

சிறுவனின் குரலைக் கேட்ட அவள் இதயத்தில் சந்தோஷம் நிறைந்தது. சிறுவர்களிடம் பாசம் எழுவதை அவள் உணர்ந்தாள். உணவு சமைத்து தங்களோடு பிரஸாதம் உண்ண வேண்டும் என்று அவர்களை கேட்டுக்கொண்டாள்.

அதற்கு கருநிறச் சிறுவன் . “அன்னையே உங்களுடனும் உங்களுடைய அருமையான கணவருடனும் சேர்ந்து பிரஸாதம் உண்ண எங்களுக்கு ஆசைதான். ஆனால் என் நாக்கில் காயம் ஏற்பட்டுள்ளது அதனால் என்னால் எதுவும் சாப்பிட்ட முடியாது என்று பதிலளித்து விடை பெற்றுச் சென்றார்கள்.

கீதா பண்டாவின் மனைவி மளிகை சாமான்களை தானிய அறையில் வைத்து, தங்களுடைய நல்லதிஷ்டத்தைப் பற்றிச் சொல்வதற்காக கணவனைக் கூப்பிடப் போனாள் கீதா பண்டா வந்து, தானிய அறைமுழுவதும் மளிகை சாமான்கள் நிறைந்திருப்பதைப் பார்த்துவிட்டு, மனைவியைப் பார்த்து ” நீ அந்த சிறுவர்களுக்கு உணவு அளித்தாயா? அவர்களுடைய அன்புக்கு கைம்மாறாக நீ அவர்களுக்கு சிறிது பிரஸாதம் கொடுத்திருப்பாய் என்று நம்புகிறேன் என்றார்.

அவரது மனைவி கீதா பாண்டாவிடம் : “நான் அந்த சிறுவர்களை காத்திருந்து சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு கூறினேன், ஆனால் அந்த கருப்பு நிற சிறுவனோ தன்னுடைய நாக்கை யாரோ மூன்று இடங்களில் கீறியிருப்பதாயும், அதனால் சாப்பிட முடியவில்லை” என்று சொன்னான். என்று பதிலளித்து சமயலறைக்கு சமைக்க சென்றாள்.

பிரசாதம் தயாராகும் வரை கீதை பாராயணம் செய்ய எண்ணிய கீதா பாண்டா புத்தகத்தை திறந்ததும். மேற்படி ஸ்லோகங்களில் கீறல் இருந்ததை கண்டு மனம் வருந்தி மனைவியிடம் பகவத்கீதையில் இந்த வரிகளில் எப்படி கீறல் வந்தது என்று கேட்டார்.

மனைவியும் நடத்தவற்றை கூற. கீதா பண்டாவிற்கு சிறுவனாக வந்தது பகவான் ஶ்ரீ ஜகந்நாதரே என்பது புரிந்துகொண்டார். அவருடைய மனைவி மேற்படி பகவத்கீதையின் ஸ்லோகத்தை மூன்று தடவை கீறியதால் பகவான் திருவாய் மொழிந்த அந்த நாக்கில் அந்த கீறலின் தாக்கமாக இருக்கும் என்று உணர்ந்தார்.

கீதா பண்டாவின் மனைவி, பகவான் தனது பக்தர்களுக்கு ஶ்ரீமத்பகவத் கீதையில் தான் அருள்பாலிப்பதாய் கூறிய உறுதிமொழியின் உண்மையை எந்தவித சந்தேகமின்றி மனப்பூர்வமாக உணர்ந்தாள்.

தன் பக்தனுக்கு பகவான் கொடுத்த போகத்தை நினைத்து கீதா பண்டாவும், அவருடைய மனைவியும் உடனடியாக ஜகந்நாதருக்கு நன்றி தெரிவிக்க கோயிலுக்குப் புறப்பட்டனர்.

பலிபீடத்தை அடைந்தவர்கள் பகவான் ஶ்ரீ ஜகந்நாதாரின் உதடுகளில் மூன்று தழும்பு இருப்பதைப் பார்த்தார்கள். தங்களது தவறை உணர்ந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் மல்க பலவாறு பிரார்த்தனை செய்தனர். கீதாபாண்டாவின் மனைவி பரிபூரண நம்பிக்கையுடன் தனது கணவருடன் இல்லம் திரும்பினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe