விஸ்²வம்ப⁴ரீ ஸ்துதி
விஸ்வம்பரீ ஸ்துதியின் மூலம், குஜராத்தி மொழியில், வல்லப பட் என்பவரால் இயற்றப்பட்டது. குஜராத் மாநிலத்தில் துர்க்கா தேவியின் ஆர்த்தி முடிந்தபின்னரோ அல்லது கர்பா எனப்படும் குஜராத்திய நடனம் தொடங்கும் முன்னரோ துர்க்கை அம்மனின் மீதான இத்துதியை பாடுவர்.
விஸ்வம்பரி ஸ்துதி, தேவியின் லீலைகளை போற்றி, தம்மை ரட்சித்து அருளுமாறு வேண்டும் கவசமாகும். அன்னையிடம் பக்தி சிரத்தையுடன், அன்புடன் வேண்டினால், நமது அனைத்து கவலைகளும் நீங்கி அமைதியான சிறப்பான வாழ்வு வாழ அன்னை அருள்வாள்.
விஸ்²வம்ப⁴ரீ அகி²ல விஸ்²வதணீ ஜனேதா |
வித்³யா த⁴ரீ வத³னமாம்ʼ வஸஜோ விதா⁴தா ||
து³ர்பு³த்³தி⁴ து³ர கரீ ஸத்³த³பு³த்³தி⁴ ஆபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³:க² காபோ || 1||
அகிலம் முழுதும் ஆளும் அகிலாண்டேசுவரியே, ஞானசக்தியாக என்னுள் உறைபவளே!, நீயே கதி என்று சரணடைந்த என் அஞ்ஞானத்தை அழித்து, நல்வழிப்படுத்தி, பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து அருள்வாய்..