ஆறு மாதம் ஓரிரவான அதிசயம்! பக்தருக்கு பரிந்த பரமசிவன்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம்
kethar
kethar

“கேதார்நாத் ஏன் விழித்திருக்கும் மஹாதேவ்” என்று அழைக்கப்படுகிறது..?

ஒரு முறை சிவ பக்தர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கேதார்நாத் சிவனை தரிசிக்க புறப்பட்டார். அங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை,
அவர் நடை பயணமாக . கேதார்நாத் வழியை கேட்டபடி மனதில் சிவனை இருத்தியபடி சென்றார்.

நடைபயணம் துவங்கி பல மாதங்கள் கடந்துவிட்டன. இறுதியாக ஒரு நாள் அவர் கேதார்நாத்தை அடைந்தார். .!

கேதார்நாத்தில் கோவிலின் கதவுகள் 6 மாதங்கள் திறந்திருக்கும் 6 மாதங்கள் மூடப்பட்டிருக்கும்.

அவர் அங்கு சென்று சேரும் நேரம் கோவிலின் கதவுகள் மூடப்பட்டன.
அவர் பண்டிட் ஜி அவர்களிடம், நான் தொலைவிலிருந்து மாதக்கணக்கில் வந்துள்ளேன் பண்டிட் ஜியிடம் பிரார்த்திக்கிறேன், தயவு செய்து கோவில் கதவுகளைத் திறந்து கடவுளை தரிசிக்க அனுமதியுங்கள் என கெஞ்சுகிறார்.
ஆனால் பண்டிட்ஜியோ கோவிலுக்கென்று ஒரு விதி உள்ளது, ஒரு முறை மூடப்பட்டது பின்னர் மூடப்பட்டது தான். மீண்டும் திறக்க இயலாது என்கிறார்.

பக்தன் நிறைய அழுதான். மீண்டும் மீண்டும் சிவபெருமான் இறைவனை மனதினுள்ளே வேண்டினார். எல்லோரையும் பிரார்த்தித்தார், ஆனால் யாரும் கேட்கவில்லை.

பக்தரே தாங்கள் இப்போது சென்று மீண்டும் 6 மாதம் கழித்து வாருங்கள், 6 மாதம் கழித்து, இங்கு கதவு திறக்கப்படும் என்றார் பண்டிட்ஜி.

6 மாதங்கள் பனிக்கட்டி மற்றும் குளிர் மக்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

பக்தர் அழுதார். இரவு வரத்தொடங்கியது. எல்லாமே இருட்டாக இருந்தது. ஆனால் பக்தர் சிவனை சுவாசிப்பதை நிறுத்தவில்லை. நிச்சயம் அருள் புரிவான் என்று நம்பினார். மிகவும் பசியாகவும் தாகமாகவும் உணர்ந்தார். அப்போது யாரோ வரும் சத்தம் அவருக்கு கேட்டது.

ஒரு சன்யாசி அவரிடம் வருவதை பார்த்தார். அந்த சன்யாசி அவரிடம் வந்து அமர்ந்தார்.
அவர் பக்தரிடம் கேட்டார் – எங்கிருந்து வந்தாய் மகனே..? எல்லா நிலைகளையும் விளக்கிய பக்தர், என் வருகை இங்கே வீணாகிவிட்டது என அழுது புலம்பினார்.!

சன்யாசி அவருக்கு ஆறுதல் சொன்னார், அவருக்கு உணவும் கொடுத்தார். பிறகு அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார்.

சன்யாசி பக்தரிடம் கருணையாக காலையில் கோவில் திறக்கும்னு நினைக்கிறேன் மகனே என்றான். நீ கண்டிப்பாக சிவனை தரிசிக்கலாம் என்கிறார்.

பக்தனுக்கு தூக்கம் வந்ததே தெரியவில்லை. அயர்ந்து தூங்கினார்.
திடீரென பேச்சுக்குரலாலும் சூரிய ஒளியால் பக்தனின் கண்கள் திறந்தன.

அவர் சன்யாசியை தேடினார், ஆனால் அவர் எங்கும் இல்லை.பக்தர் புரிந்துகொள்ள முற்படுகிறார்.

பண்டிட் ஜி தனது முழு சபையுடன் கோவில் திறக்க வருவதை பக்தர் காண்கிறார்.

பண்டிதரை வணங்கி ஐயா நேற்று 6 மாதம் கழித்து தான் கோவில் திறக்கும் என்று சொன்னீர்களே..?
இடைப்பட்ட காலத்தில் யாரும் இங்கு வரப்போவதில்லை என்றீர்களே, ஆனால் நீங்கள் காலையில் வந்து விட்டீர்களே என்கிறார் பக்தர்.

பண்டிட் ஜி அவரை கவனமாகப் பார்த்தார், அடையாளம் காண முயற்சித்தார். அடையாளம் தெரியவில்லை.
நீங்கள் நேற்று கோவில் வாசலுக்கு வந்தீர்களா..? என்னை சந்தித்தீர்களா.? என கேட்டார்.

நாங்கள் 6 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் திரும்பி வருகிறோம்..! என்ன ஆச்சரியம் என்கிறார்.!

பக்தரோ..இல்லை, நான் எங்கும் போகவில்லை. நேற்று நான் உங்களை சந்தித்தேன், இரவில் நான் இங்கேயே தூங்கிவிட்டேன். நான் எங்கும் போகவில்லை என்கிறார்.

பண்டிட் ஜிக்கு ஆச்சரியத்தின் அளவு எல்லை கடந்தது..!

ஆனால் நான் 6 மாதம் முன்பு கோவிலை பூட்டிவிட்டு 6 மாதம் கழித்து இன்று வந்தேன். ஆறு மாதங்கள் நீங்கள் எப்படி இங்கு வாழ முடியும்..?

பண்டிட் ஜி மற்றும் அனைத்து சபைகளும் ஆச்சரியமடைந்தனர். இப்படி ஒரு குளிர்காலத்தில் தனி ஒருவன் எப்படி ஆறு மாதம் வாழ முடியும்.?

அப்போது அந்த பக்தர் சன்யாசி மற்றும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு, பேசிய அனைத்து காரியங்களையும் பண்டிட்ஜி மற்றும் குழுவினரிடம் கூறினார்.

நடந்த அனைத்தையும் அவர்கள் மகாதேவனின் சக்தி லீலைகள் என புரிந்து கொண்டனர்.!

பண்டிட் ஜி மற்றும் அனைவரும் அவரது கால்களில் விழுந்தனர்.
இறைவன் தரிசனம் கண்ட நீங்கள் தான் உண்மையான பக்தன். சிவனை நேரில் தரிசனம் செய்தது நீங்களே என்றனர்.

அவர் உங்கள் 6 மாதங்களை தனது சக்தி மூலம் இரவாக மாற்றினார். அது
மாயா எனப்படும். காலத்தை சுருக்கிவிட்டார். இது எல்லாம் உங்கள் புனித மனதின் காரணமாக, உங்கள் நம்பிக்கை காரணமாக. உங்கள் பக்தியை வணங்குகிறோம் என்று பக்தரை வணங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.