
சங்கரர் தாம் எழுதிய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தில் ந்ருஸிம்ஹரை துதிக்கும் போது மனதை நோக்கி,
த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேன்னரஹரிபூஜாம் குரு ஸததம்
ப்ரதிபிம்பாலங்க்ருதித்ருதிகுசலோ பிம்பாலங்க்ருதிமாதனுதே I
என்று சொல்கிறார்.
மனம் தனது பிரபுவான ஜீவனுக்குச் சந்தோஷம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடனிருக்கிறது. மனம் ஜீவனுடைய தாஸன். தாஸனுக்கு என்ன இச்சை இருக்கும்? தன் பிரபு க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் அவர்.
த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேன்னரஹரிபூஜாம் குரு ஸததம்
என்று கூறினார்.
“உன்னுடைய பிரபுவான ஜீவன் செளக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நீ பகவத் ஆராதனை செய்” என்றார்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்