
பெங்களூரில்,1917 ஆண்டு, நவம்பர் மாதம் 13″ நாளான தீபாவளித் திருநாளன்று ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் இம்மண்ணுலகில் அவதரித்தார்கள்.
1931 ஆண்டு, மே மாதம் 22ம் தேதி, ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகளால் இவருக்குத் துறவறம் வழங்கப்பட்டது.
இயற்கையாகவே இராஜயோகத்தில் இவர் மனம் நிலைத்திருந்ததால், யோகத்தின் மிக உன்னத நிலையான நிர்விகல்ப சமாதியை 18 வயதிற்குள் அடைந்தது மட்டுமின்றி, தாம் நினைத்த பொழுதெல்லாம் சமாதியில் அடிக்கடி நிலைத்திருந்து ஜீவன்முக்தராகவும் ஆனார்கள்.

1954ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி, ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் 35 பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
தர்க்கம் மற்றும் வேதாந்தத்தில் ஒப்பற்ற
பண்டிதராய் விளங்கிய ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் எல்லோராலும், “சாஸ்திர விஷயங்களில் இவருக்கு நிகர் எவரும் இல்லை” என்று கருதப்பட்டார்கள்.
1974 ஆண்டு, நவம்பர் மாதம் 11ம்தேதி, வேத விற்பன்ன குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயலு என்ற 23 வயது பிரஹ்மச்சாரியைத் தமது வாரிசாகத் தேர்ந்தெடுத்து அவருக்கு துறவறத்தை வழங்கி, ‘ஸ்ரீ பாரதீ தீர்த்தர்’ என்ற யோகப்பட்டத்தையும் அருளினார்கள்.
ஸநாதன தர்மத்தை நாடெங்கும் பரப்புவதற்காக பல கிளை படங்களையும் வேத பாடசாலைகளையும் ஜகத்குரு நிறுவியதோடு பழைய கோயில்களைப் புதுப்பித்து, புது ஆலயங்களையும் ஆங்காங்கே ஏற்படுத்தினார்கள்.

சிருங்கேரிக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பல விடுதிகளை ஜகத்குரு அமைத்தார்கள் இம்மஹானின் மேற்பார்வையில் கட்டப்பட்ட துங்கா நதியில் விளங்கும் அழகிய பாலமே அவருடைய பொறியியல் திறனை நன்கு பறைசாற்றும்.
1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி இராமேஸ்வரத்தில் இருக்கும் பழமை வாய்ந்த ஸ்ரீ இராமநாதஸ்வாமி திருக்கோயிலுக்கு நடத்திய கும்பாபிஷேகமும், 1977ம் ஆண்டு வாரணாசியில் ஸ்ரீ அன்னபூர்ணா தேவி பிரதிஷ்டை செய்து நடத்திய கும்பாபிஷேகமும் குறிப்பிடத்தக்கவை.
ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபித்த நான்கு ஆம்னாய பீடங்களின் பீடாதிபதிகள் ஒன்றுகூடி சரித்திரப் புகழ் வாய்ந்த சம்மேளனத்தை முதன் முறையாக 1979ம் ஆண்டு சிருங்கேரியில் நடத்தினார்கள்.
ஆதிசங்கரரின் உபதேசங்களைப் பரப்புவதகாக பாரதம் முழுவதும் மூன்று முறை நம் ஜகத்குரு விஜயம் செய்துள்ளார்கள்.

ஆதிசங்கரருக்குப் பிறகு நேபாள விஜ
மேற்கொண்ட முதல் சங்கராச்சார்ய
இவரேயாவார். பிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோயிலில் தமது திருக்கரங்களால் பூஜை
நிகழ்த்தியுள்ளார்கள்.
சபரி மலைக்கு முதல் முறையாக விஜயம் செய்த சங்கராச்சார்யாள் இவரே.
ஒப்பற்ற ஜகத்குருவின் கருணையும்
அனுக்ரஹமும் இயற்கையானது மற்றும்
அளவற்றது. இம்மஹானின் தெய்வீக
தரிசனத்தைப் பெற்ற எண்ணற்ற பக்தர்களின் நெஞ்சங்களில் தர்மமெனும் விதையை இவர் விதைத்தார்கள்.
1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி, புனித க்ஷேத்திரமாம் சிருங்கேரியில் ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸித்தியடைந்தார்கள்.