21-03-2023 8:06 PM
More

    இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…

    எல்லாவற்றிற்கும் ஒரே மருந்து! நிறுத்தாமல் அருந்து!

    ramar 2 - Dhinasari Tamil

    ஸ்ரீராம நாம மகிமை

    1.நமக்கு நன்மை வரவேண்டுமானால் ஸ்ரீராம நாமத்தை’ இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் ‘ராம் ‘ராம்’ என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.

    1. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் ‘ராம் ‘ என்றே நடக்கவேண்டும் .
    2. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் ‘ராம நாம ஜெபமே.’ கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.
    3. ‘ ராம நாம’ ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் ‘ராம நாமமே ‘ தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
    4. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது ‘ராம நாமம்.’ எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் ‘ராம நாமம்.’ அந்த நாள் நமக்கு ‘ராம நாம’ நாளாக இருக்கவேண்டும்.
    5. ‘ ராம நாம ‘ ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,
    6. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் ‘ராம நாமா’ சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் ‘ராம நாமா’ சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!
    7. ‘ராம நாமா’ எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் ‘ராம நாமா’ சொல்ல மனம் மட்டும் போதும்.

    இதைதான் “நா உண்டு, நாமா உண்டு” என்றனர் பெரியோர்கள் .

    1. ஒரு வீட்டில் உள்ள பெண் ‘ராம நாமா’ சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .
    2. எல்லாவித சாஸ்திர அறிவும் ‘ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் ‘ராம நாமா’ சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .
    3. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது ‘ராம நாம ஜெபத்தால் பெற முடியும். ‘ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.
    4. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் ‘ராம நாமா’ சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

    காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது )
    ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

    1. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் ‘ராம நாமா’ சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.’ராம நாமா’ சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

    பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ……அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.

    1. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் ‘ராம நாமா’ வை ஒரு முறை சொல்லமுடியும்.
    2. ‘ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
      ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.

    சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் ‘ராம நாமா’ கேட்டு கேட்டு ….. அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ….. யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் ‘ராம நாமா’ கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், செடியாய் பறவையாய் விலங்காய் இருந்தோமோ ! என்னவோ அப்புண்ணிய பலனை ராமனே அறிவான்.

    ‘ராம நாமா’ சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில்
    பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

    ‘ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene codingஇல் உள்ள குணங்களுக்கு காரணமான கோபம் , வெறுப்பு, பொய், பொறாமை , சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான gene coding யை அழித்து ராம நாம அதிர்வு சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.

    (‘யத் பாவோ தத் பவதி’–எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)

    ‘ராம நாமா’ சொல்ல சொல்ல பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம் .

    அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே ” ராம் “.

    அதுவே உருவம் கொண்டபோது , தசரத ராமனாக , சீதாராமானாக, ரகுராமனாக , கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.

    உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே. ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து பிரம்மம் என்பதும் அவனே !

    எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும்.

    இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.

    1. நமது ஒரே அடைக்கலம் ‘ராம நாமா’. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .
    2. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் ‘ராம நாமா’ ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .ஜீவன்முக்தி ) முக்தி தரும்.
    3. ‘ராம நாமா’ மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல ‘ராம நாமா’ வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை ,
      ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.
    4. நமது கைகளால் எது கொடுத்தாலும், அது நமது தலைவனாகிய ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில் உள்ள மனித வடிவில் உள்ள எஜமான் ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம். எது , எதனை எவரிடம் இருந்து பெற்றாலும் நமது அன்னையாகிய ஸ்ரீ ராமனே ( எதிரில் உள்ள மனித வடிவில் ) கருணையுடனும், அன்புடனும் நமது நன்மைக்காக தருகிறான். இந்த உணர்வு பெருக, பெருக ஸ்ரீ ராமனே தந்து , வாங்குகிறான். ( எதிரில் உள்ள மனிதரை கவனிக்காமல் அவரின் அந்தராத்மவுடனே பேசுகிறோம். ராம்! அன்னையே இந்த உடலுள் இருந்து நீயே பேசி, இயங்கி, செயல்படுகிறாய் என வணங்க, நமஸ்கரிக்க ) கொடுப்பவன் ஸ்ரீ ராமன் வாங்குபவன் ஸ்ரீ ராமன்.
    5. ‘ராம நாமா’ சொல்ல , சொல்ல நிகழும் எல்லா செயல்களும் , நிகழ்ச்சிகளுக்கும் ‘ அந்த ஒன்றே !’ காரணமாகிறது என்பதும் எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே !. என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணரப்படும் .

    21.’ராம நாமா’ சொல்லச்சொல்ல ..சொல்லுவதன் மூலம் பார்ப்பது ராம் , பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம் , புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம் , ..நன்மை, தீமை , இன்பம் துன்பம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம்.

    இத்தகைய .’ராம நாமா’ வில் பைத்தியமாவதே அனைத்தும் ராமனாக ஆன்மாவாக ( ஏகாக்கிரக சித்தமாக ) அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ஒன்றாக ராமனாக ( ஆத்மா ராமனாக ) பார்ப்பதுவே எல்லா எண்ணங்கள் எல்லா செயல்கள் எல்லா உணர்ச்சிகளிலும் இறை உணர்வை உணர்வதுவே இந்த பிறவியின் பயனாகும்.

    rama - Dhinasari Tamil

    நன்றி : கிருஷ்ண ப்ரேமி அண்ணாவின் ‘ இறைவனின் நாம மகிமை ‘

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    4 + 18 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-