29-03-2023 10:05 AM
More

  இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…

  சிவராத்திரி ஸ்பெஷல்: உங்கள் நட்சத்திரத்திற்கு சிவபெருமானை வழிபட ஸ்லோகம்!

  sivan 1 - Dhinasari Tamil

  எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் நன்மை அளித்திடும் ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா ஸ்தோத்திரம்:

  காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர்.

  சிவனைத் துதித்து ஒவ்வொரு நட்சத்திரக்காரரும் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா. அந்த இருபத்தேழு நட்சத்திரங்களுக்குட்பட்டோர் அனைவரும் சிவனைக் குறித்த இந்தத் துதியை ஜபிக்கலாம். மேன்மையடையலாம்.

  குறிப்பாக, திருவாதிரை நட்சத்திர நாள், மாத, வருட சிவராத்திரி தினங்கள், பிரதோஷ காலம், சோமவாரம் (திங்கட் கிழமை) ஆகிய புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.

  அஸ்வினி

  ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

  பொருள்: ஐஸ்வர்யம் மிகுந்தவரும், குணக்கடலும், தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியையும் தோற்கடிப்பவரும், தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு பந்துவாகவும், ஞானிகளுக்கு பிரதான பந்துவாகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.

  பரணி

  கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
  சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம:சிவாய
  மூல காரணீய கால காலதே நம: சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

  பொருள்: யமனுக்குப் பயந்திருந்த குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரும், வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரும். அனைத்திற்கும் மூல காரணமானவரும், காலத்துக்கு மேம்பட்டவரும், கருணைக்கு இருப்பிடமானவருமாக விளங்கும்
  சிவபெருமானே, நமஸ்காரம்.

  கிருத்திகை

  இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய
  துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
  ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
  அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே
  நம: சிவாய

  பொருள்: இஷ்டப்பட்ட சிறந்ததான பொருளைக் கொடுப்பதில் கருணையுள்ள வரும், முப்புரத்திலுள்ள அரக்கர்
  வம்சத்துக்கு தூமகேதுவானவரும், படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரும், பூமி,
  ஆகாயம்,நீர், அக்னி, காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டையும் தன் உருவாய்க் கொண்டவரும், ரிஷபக் கொடியோனும் ஆகிய சிவபெருமானே நமஸ்காரம்.

  ரோஹிணி

  ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
  பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
  பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
  சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

  பொருள்: மலைபோல வரும் ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில்
  தரித்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவநதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவபெருமானே நமஸ்காரம்.

  மிருகசீர்ஷம்

  வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

  பொருள்: ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், சிவ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் உடையவரால் அடையமுடியாதவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

  திருவாதிரை

  ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
  நம: சிவாய ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம்: சிவாய
  ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

  பொருள்: ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவரும், பெரிய பாம்பினை குண்டலமாக அணிந்தவரும்,
  வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவமானவரும், யமனுக்கு உயிர் கொடுத்தவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  புனர்பூசம்

  காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம:
  சிவாய ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

  பொருள்: தன்னலம் கருதாது செய்யப் படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு, ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் ஸௌக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் ஸௌக்கியமுற்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  பூசம்

  ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம:
  சிவாய மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

  பொருள்: பிறப்பு – இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானமனைத்தும்
  வரும், மன விருப்பத்தை நிறைவேற்றுகிறவரும், ஒரே உருவமாயுடைய ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவபெருமானே நமஸ்காரம்.

  ஆயில்யம்

  யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
  ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே
  நம: சிவாய
  பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

  பொருள்: யட்சர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரும், தயை மிகுந்தவரும், பொன் மயமான வில்லை வலக்கரத்தில் கொண்டவரும், கருட வாகனம் உள்ள மகாவிஷ்ணுவின் இதய தாபத்தைப் போக்குபவரும், நெற்றிக் கண்ணரும், மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  மகம்

  தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்வத வேதஸே நம: சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம: சிவாய தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

  பொருள்: வலது கையில் அக்னியை வைத்திருப்பவரும், அட்சரம் எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், சிவ பஞ்சாட்சர தீட்சை பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக்
  காட்டுபவரும், தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரும், சாதுக்களுக்கு
  நல்வழியை அருள்பவருமான
  சிவபெருமானே நமஸ்காரம்.

  பூரம்

  ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம:
  சிவாய
  ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

  பொருள்: வெள்ளி மலை என்று பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரும், புன்சிரிப்புடன் கூடியவரும், ராஜஹம்ஸம் எனும் பட்சிபோன்று சிறந்து விளங்குபவரும், குபேரனின் தோழனாக விளங்கும். சிவபெருமானே நமஸ்காரம்.

  உத்திரம்

  தீனமான வாளி காம தேனவே நம:
  சிவாய ‍‌ ஸூ‌ந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம:
  சிவாய

  பொருள்: ஏழைகளுக்குக் காமதேனு
  எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேருமலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குப் பிரகாசமான கதிரவன் போன்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  ஹஸ்தம்

  ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம:சிவாய
  பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

  பொருள்: ‘ஸர்வமங்களை’ எனப்
  பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவபெருமானே
  நமஸ்காரம்.

  சித்திரை

  ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய ஏகபில்வ தானதோபி தோஷிணே
  நம: சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

  பொருள்: குறைந்த அளவே பக்தி செய்யும் பக்தர்களையும் வளர்ப்பவரும், குயில் மாதிரி பேச்சு உடையவரும், ஒரு வில்வதளத்தை அர்ப்பணித்தாலேயே மகிழ்ச்சி அடைபவரும், பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  ஸ்வாதி

  ஸர்வ ஜீவரக்ஷணைக சீலினே நம: சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம:
  சிவாய துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

  பொருள்: எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களை அரவணைத்துக் காப்பவரும், தவறான செயல்களில் ஈடுபடும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடைய வரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  விசாகம்

  பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

  பொருள்: உமாதேவியின் மனத்துக்கு உகந்த சரீரத்தை உடையவரே, என்னைக் காப்பாற்றும். வெள்ளியங்கிரியில் இருப்பரே, ஈசனே, எனக்கு வரம் அருளும். மஹரிஷிகளின் மனைவியரை மோகிக்கச்
  உம்மிடம் வேண்டியதைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  அனுஷம்

  மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
  கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

  பொருள்: மங்களத்தைச் செய்பவரும், ரிஷப வாகனத்தை உடையவரும், அலைமோதும் கங்கையை தலையில் தரித்தவரும், போரில் சத்ருக்களை ஒழிப்பவரும், மன்மதனுக்குப் பகையானவரும், கையில் மானை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  கேட்டை

  ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய அக்னி பால சவேத உக்ஷ கேதவே நம: சிவாய தேஹ காந்தி தூத ரெளப்ய தாதவே நம: சிவாய
  கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம:
  சிவாய

  பொருள்: பக்தர்கள் கோருவதைக்
  கொடுப்பவரும், யாகம் இயற்றுபவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் பேரொளி மிக்க உடலை உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  மூலம்

  திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
  தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

  பொருள்: முக்கண்ணரும்,ப்ரஜாபதியின் யாகத்தை நாசம் எளியவர்களிடத்தில் கருணையுடையவரும், தட்ச செய்தவரும், சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் கண்களாய் உடையவரும், வணங்கிய பக்தர்களை தாமதமில்லாமல் காப்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

  பூராடம்

  அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
  பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
  பங்க ஜாஸனாய சங்கராயதே நம:
  சிவாய

  பொருள்: மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்கவைப்பதில் மிகச் சிறந்த படைவீரன் போன்றவரும், சம்சாரக் கடலுக்கு
  பயந்தவர்களின் அச்சத்தைப் போக்கடிப்பவரும், தாமரைக் கண்ணரும், சுகத்தை அருள்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

  உத்திராடம்

  கர்மபாச நாச நீலகண்டதே நம:
  சிவாய
  சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

  பொருள்: கர்மாவாகிற கயிற்றை அழிக்கிற நீலகண்டரும், சுகத்தைக் கொடுப்பவரும், சிறந்த திருநீற்றை கழுத்தில் தரித்தவரும், தன்னுடையது எனும் எண்ணம் நீங்கப்பெற்ற மகரிஷிகளை அருகில் கொண்டவரும், விஷ்ணுவால் வணங்கப்பட்டவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  திருவோணம்

  விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
  சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம:
  சிவாய
  இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

  பொருள்: சுவர்க்கத்துக்குத் தலைவரும், விஷ்ணுவால் போற்றப்பட்டவரும், ஒழுக்கமுள்ள பக்தர்களின் இதயக்குகையில் சஞ்சரிப்பவரும், தானே பிரம்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவரும், புலன்களை அடக்கியவரும், பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரும், உலகத்தை ஜெயிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  அவிட்டம்

  அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
  ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
  ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
  விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

  பொருள்: அளவிடமுடியாத தெய்வீக
  மகிமை பொருந்தியவரும், தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதில் நாட்டமுற்றவரும், தன்னிடத்திலேயே ஒளிரும் அளவில்லாத ஆத்மானுபவத்தை உடையவரும், மார்க்கண்டேயருக்குத் தன் அன்பைக் காட்டியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

  சதயம்

  ஸேவ காயமே ம்ருடப்ரஸாதினே நம: சிவாய
  பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
  தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

  பொருள்: பரமேஸ்வரா! உம்முடைய வேலைக்காரனான என்னிடம்கருணை காட்டும்.இதயத்தில் பாவனை செய்யும் அளவுக்கு அருள்புரிபவரும், நெருப்பைக்கண்ணாக உடையவரும், தேவர்களும் வணங்கித் தொழும் திருவடியை உடையவரும், தன்னுடைய திருவடியைச் சரணடையும் பக்தர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  பூரட்டாதி

  புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
  சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
  பக்த ஸங்கடாபஹர யோகினே நம:
  சிவாய
  யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

  பொருள்: இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றைக் கொடுப்பவரும், தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் சம்பந்தமுள்ளவரும், தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதில் ஆழ்ந்த கவனம் உள்ளவரும், ஸாதுக்களின் மனத் தாமரையில் வசிக்கும் யோகியுமான
  சிவபெருமானே நமஸ்காரம்.

  உத்திரட்டாதி

  அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
  சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
  ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
  ஜந்து ஜாத நித்ய ஸௌக்ய காரிணே நம: சிவாய

  பொருள்: காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப்போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள
  துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய ஸௌக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  ரேவதி

  சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய
  பாலினே விரிஞ்சி துண்ட மாலினே
  நம: சிவாய
  லீலினே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
  சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

  பொருள்: சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரும், தம்மை வணங்கும் ஜீவர்களைக் காப்பவரும், பிரம்மாவின் கபாலத்தை உடையவரும், ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும், நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடிய வருமான சிவபெருமானே நமஸ்காரம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  two × 4 =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  19,033FansLike
  388FollowersFollow
  83FollowersFollow
  0FollowersFollow
  4,634FollowersFollow
  17,300SubscribersSubscribe
  -Advertisement-