October 15, 2024, 2:16 AM
25 C
Chennai

ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் ஜெயந்தி!

சிருங்கேரியில் 33வது ஆச்சாரியாராக இருந்த ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளை (வயது 9) உத்தராதிகாரியாக அபிஷேகம் செய்தவுடன் அவருடைய குருநாதர் ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் யோகமார்கத்தில் முக்கியமான சில பாகங்களையும் ஞானமார்கத்தில் நிர்குணத்யானம் செய்ய வேண்டிய சம்பிரதாயத்தையும் தானே உபதேசித்தார்.

அத்துடன் இல்லாமல் ஜகன்மாதா, தானே அஷ்டாங்க யோக மார்கத்தை உபதேசிப்பாள் என்றும் யோகசித்தியும் ஞானம் பெறுதலும் அம்பாள் அனுக்ரஹத்தால் பூர்த்தியாகும் என்றும் ஆசிர்வதித்தார்.

பெரிய குருக்களிடமிருந்து யோகமார்கம் உபதேசம் செய்யப்பட்டது முதல் இவருக்கு யோகமார்கத்தில் அதிகமான ஈடுபாடு உண்டாகி, அது சம்பந்தமான நூல்களைப் பார்ப்பதும் அந்த மார்கத்தில் சிரமப்பட்டிருக்கிற நபர்களைப் பார்க்க நேர்ந்தால் அவர்களுடன் இது பற்றி விவாதிப்பது ஆகிய முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தார்.

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் வம்சத்தவரான விஸ்வநாத விதூஷர் ‘ஸ்ரீ ஸச்சிதானந்த விஜயம்’ என்ற நூலில் -நிஜயோகபலேன தேசிகேந்த்ரோ நிஜதாமாவசதிம் சமாலலம்பே’

தமது நிஜயோகபலத்தால் தேசிகேந்திரரரான ஸ்ரீஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ ஸ்வாமிகள் பெரும் இருப்பை அடைந்தார் – என்று கூறுகிறார்.

இது பெரிய சந்நிதானம் அவர்களின் கவனத்திற்கு வந்தது. தம் சிஷ்யருடைய யோக மார்கத்தில் முன்னேற்றத்தைக் குறித்து சந்தோஷித்து இவருக்கு உத்சாஹத்தைக் கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.

ஆனாலும் யோகத்திற்கும் ஞானத்திற்கும் இது சமயமல்ல என்றும் இப்போது சரஸ்வதீ உபாசனை ரூபமான சாஸ்திர படிப்பு முடிந்த பிறகு யோகத்திலும் ஞான மார்கத்திலும் ஈடுபடுவது சுலபம் என்றெல்லாம் பெரிய ஸ்ரீகள் தம் சிஷ்யருக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

ஆனாலும் ஸ்ரீ ஆச்சாரியாள் யோகத்தில் ஈடுபடும் காலம் அதிகமாகிக் கொண்டே போனது. தனிமையில் வனப்பிரதேசங்களில் சஞ்சாரம் செய்து யோகத்தில் ஈடுபட்டுக்கொண்டு மனதையும் ஐம்பூதங்களாலான உடலையும் தம் வசத்தில் கொண்டு வந்து மோக்ஷத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பலமாகிக்கொண்டு வந்தது.

ALSO READ:  சபரிமலை மண்டல மகரவிளக்கு சீஸன்; நவ.15ல் நடை திறப்பு!

உணவு எடுத்துக்கொள்வதில் கூட பிரயத்தினம் குறைந்து எந்த சந்தர்ப்பத்திலும் சிந்தையுள்ளவராகவே காணப்பட்டார். இந்த விவரம் ஸ்ரீ சுவாமிகளுக்கு (வயது 20க்கும் குறைவு) அப்போது பாடம் சொல்லி வந்த ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சாஸ்திரிகளுக்கு தெரிய வந்ததும், அவர் ஸ்ரீகளின் மனதில் உள்ளதை அறிய முற்பட்டார்.

அவருடைய கேள்விக்கு ஸ்ரீகள், பால்யத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஒரு முறை இதே மாதிரி சிந்தனையில் இருந்த போது, வசிஷ்ட மஹரிஷி காரணம் கேட்கும் சமயத்தில் சொல்லிய பதிலை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு,

प्राक्तनं वासनाजालं नियोजयति मां यथा । मुने तथैव तिष्टामि कृपणः किं करोम्यहम् ।।

ப்ராக்தனம் வாஸனாஜாலம் நியோஜயதி மாம் யதா முனே ததைவ திஷ்டாமி க்ருபண : கிம் கரோம்யஹம்.

என்று பதிலளித்தார்.

அதாவது முன் ஜன்மாக்களில் செய்த கர்மாக்களின் ஜாலங்களின் கட்டளைப்படி நான் நடக்கின்றேன். நான் வாசனை என்ன செய்யமுடியும்?’ என்று ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி வசிஷ்டருக்கு அளித்த பதிலை ஸ்ரீ சுவாமிகள் கூறியதைக் கேட்ட லக்ஷ்மிநரசிம்ஹ சாஸ்திரிகள் பால் துறவியின் மனப்பக்குவத்தை புரிந்து கொண்டு, இதை பெரிய சந்நிதானத்திடம் தெரிவித்தார்.

இது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றானாலும். அவரை சமஸ்தானத்திற்கு கொண்டு வந்த தம்முடைய எண்ணம் ஈடேறாமல் போய்விடும் என்று உணர்ந்த பெரிய சந்நிதானம், பால சுவாமிகளை தனியாக வரவழைத்து கேட்ட போதும், வனத்திற்குப்போக வேண்டும் என்ற தம் எண்ணத்தை வெளியிட்டார்.

இதை மாற்ற வேண்டிய அவசியத்தை மனதில் கொண்ட பெரிய சந்நிதானம்,”ஸ்ரீ சாரதாம்பாளே யோக மார்கத்தை முழுவதுமாக உபதேசிப்பாள். அவளுடைய அனுக்ரஹத்தால் நீ பெரிய யோகியாக ஆவாய் என்பதில் சந்தேஹமில்லை. ஆனால் நம் எதிரில் ஆவதில்லை” என்று கூறியதுடன் சிருங்கேரி போய் சேர்ந்ததும் (இரண்டு ஸ்ரீகளும் அப்போது யாத்திரையில் இருந்தார்கள்)

அங்கு ஸ்ரீ மடத்தின் அருகிலேயே உள்ள விஸ்தாரமான வனப்பிராந்தியத்தில் உம் இஷ்டம் போல் இருக்கலாம் போன்ற வார்த்தைகளால் அவருடைய மனோபாவத்தை மாற்றினார்கள். இதை தனது குருநாதரைக் குறித்து தாமியற்றிய

ALSO READ:  சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதிகளில் விநாயகர் ஊர்வலம்!

‘குருஸ்துதி’யில்

நாவோச: கிம் பூர்வம் த்வமபி பவே: ஸதாசிவேந்த்ராப: என்றும் கரின் |-ஸ்வப்னே மமோத்தமாங்கே ஸ்வயமாஹுயாதிகருணயா சரணௌ தததஸ்தவ நிகடே மமதா குருவர நரசிம்ஹ யாசகா காஸ்தி’ என்றும்

(ஸ்வப்னத்தில் கருணையுடன் என்னை அழைத்து என் தலையில் தங்களுடைய திருவடிகளைப்பதித்து அனுக்ரஹித்த தங்களிடம் நான் கேட்கவேண்டியது என்ன உள்ளது? ஆனால் தாங்கள் முன்பு ஒரு தடவை “நீ ஸதாசிந்திரர் போல ஆவாய்” என்று கூறியது போல நான் அந்த மஹான் போலவே யோகத்தில் முன்னேற்றம் அடைய அனுக்ரஹியுங்கள்) ஸ்ரீ ஸச்சிதானந்தசிவாபிநவ நரசிம்ஹ பாரதீமஹாஸ்வாமிகள் வேண்டுகிறார்.

மேலும் தாமியற்றிய “ஸ்ரீ சாரதா சதஸ்லோகீஸ்தவ’த்தில் பெரிய சந்நிதானம் தம்மிடம் கூறியதை

அம்பாளிடம் கீழ்கண்டபடி தெரிவித்து விண்ணப்பிக்கிறார்.

‘आज्ञाऽऽसीद्‌गौरवी मे तव खलु करुणावारिधिः शारदाम्बा
साष्टाङ्गं योगमारादुपदिशति भवानौरसः सूनुरस्याः ।

ஆக்ஞாசீத்கௌரவீ மே தவ கலு கருணாவாரிதி: சாரதாம்பா சாஷ்டாங்கம் யோகமாராதுபதிசதி பவானௌரஸ: புத்ர: சூனுரஸ்யா:’ ‘

கருணைக்கடலான சாரதாம்பிகையே உனக்கு அஷ்டாங்க யோக முறையை உபதேசிக்கிறாள். நீ அவளது வயிற்றில் பிறந்த பிள்ளை’ என்று என் குருநாதர் எனக்கு ஆணையிட்டார். என்றும்

तवौरसं सूनुमहो त्वदीयभक्ताग्रगण्या मम देशिकेन्द्राः प्राहुः

தவௌரஸம்சூனுமஹோத்வதீயபக்தாக்ரகண்யாமம தேசிகேந்த்ரா: ப்ராஹு: என்றும்

சாரதம்பாளே அஷ்டாங்கயோகத்தை உபதேசிப்பாள் என்று, “உன்னுடைய பக்தர்களில் முதன்மையானவரான” தனது
ஆச்சாரியாரின் ஆசிர்வாதத்தை நினைவு கூர்ந்து அம்பாளிடம் வேண்டுகிறார்.

அதே போல ஸ்ரீ சாரதாம்பாளாலேயே கற்றுக்கொடுக்கப்பட்டு அதன்படி அவர் தீவிர பயிற்சி செய்து யோகத்தின் உச்ச நிலையை அடைந்தார்.

உதாரணத்திற்கு எப்படியிருந்தார் என்று அவர் பிராணாயாம் யோகத்தில் பார்ப்போம். பிராணயாமத்தின் மூன்று பகுதிகளான பூரகம்(மூச்சை உள்ளே இழுத்தல்), ரேசகம் (அந்த மூச்சை வெளி விடாமல் உள்ளேயே நிறுத்தி வைத்தல்).கும்பகம்(வெளியே விடுதல்) ஆகியவற்றை முழுவதுமாக முறைப்படி செய்பவர்களுக்கு பயிற்சியில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, உடல் முழவதும் வியர்வை உண்டாகும். அடுத்து உடல் நடுங்கும். முழுவதுமாக அதில் சித்தி ஏற்பட்டு விட்டால் உடல் நகரும்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக... சபரிமலை நடை திறப்பு!

ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளுக்கு இந்த அனுபவம் முழுவதுமாக ஏற்பட்டதை, தாம் நேரில் பார்த்து பரவசமடைந்ததாக, ஜகத்குருவுடன் கூடவே இருந்து சேவை செய்து வந்த ஸ்ரீ ஸ்ரீகண்ட சாஸ்திரிகள், தாம் எழுதிய மேற்கண்ட ஸ்ரீ ஆச்சாரியாளுடைய வாழ்க்கை சரித்திர நூலில் கூறுகிறார்.

யோகத்தில் நிபுணராக இருந்த கங்காதாஸ் என்ற பைராகி சிருங்கேரிக்கு வந்தான். இதை அறிந்த ஸ்ரீகள் சிருங்கேரியில் தங்குமிடம் உணவு முதலியவற்றிற்கான வசதியை செய்து கொடுத்து அங்கு 6 மாதங்கள் வரை அவனை தங்கும்படி செய்தார்.

இவ்விஷயத்தைப்பற்றி அவனிடம் விவாதித்தும் உப்பு, காரம் முதலியன இல்லாத தீவிர நியமங்களுடன் பயிற்சியில் ஈடுபட்டும் வந்தார். கடைசியில் அவன் புறப்படும்போது ஸ்ரீ ஆச்சாரியாளின் யோகசக்தியை வியந்து அவரிடம் ஆசி பெற்றுச் சென்றான்.

முத்கௌதனாசக்தமனோ “ம்புஜாதாம” -என்று மூலாதாரத்தில் நாலிதழ்தாமரையில் தாம் கண்டதையும்

“अद्राक्षमर्कायुतभासमानामनाहताख्ये हृदयाब्जमध्ये ।
फालेऽहिशत्रोर्धनुषः सवर्णा அத்ராக்ஷமர்காயுதபாஸமானாமனாஹதாக்யே ஹ்ருதயாப்ஜமத்யே
பாலே ‘ஹிசத்ரோர்தனுஷ: ஸவர்ணாம்”

என்று பத்தாயிரம் சூரியர்கள் போன்று அனாஹத சக்கரத்தில் தாம் பார்த்ததையும்

“अद्राक्षमिन्दोः सदृशीं शिरस्थसहस्रपत्रे कमले मनोज्ञे ।
त्रिकोणमध्ये वरदीपिकाभामितः

அத்ராக்ஷமிந்தோ: ஸத்ருஸீம் சிரஸ்தஸஹஸ்ரபத்ரே கமலே மனோக்ஞே
த்ரிகோணமத்யே வரதீபிகாபாமித:”-

என்று தலையில் சஹஸ்ராரத்தில் தாம் பார்த்ததையும் வர்ணிக்கிறார்.

அம்பாளே ஸ்ரீ ஆச்சாரியாளுக்கு நேரில் சொல்லிக் கொடுக்க அதை இவர் பார்த்து “நான் கண்டேன்” என்று வர்ணிக்கிறார்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week