சுபகிருது தமிழ் புத்தாண்டு சிறப்பு கட்டுரை…

நாளை ஏப்14 வியாழக்கிழமை
சுபகிருது தமிழ் புத்தாண்டு காலை 08:48 (+5.30)மணிக்கு பிறக்கிறது.60 தமிழ் வருடங்களில் 2022 ஆம் ஆண்டில் சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இது 60 ஆண்டுகளில் 36 ஆவது ஆண்டாகும். சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள் என பெரியவர்கள் கூறுகின்றனர்.

ஏப்ரல் 14 வந்துவிட்டது. தமிழ் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழ் சூரிய நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடும் போது, ​​இந்தியா முழுவதும் உள்ள பல மாநில மக்கள் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை அதே நாளில் கொண்டாடுகிறார்கள் .இது கேரளாவில் விஷு பண்டிகையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

சித்திரை தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்துக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, வாயில்களில் அழகாகக் கோலமிட்டு வீட்டு வாசலின் கதவுகளில் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கின்றனர்.

கொன்றை மலர் பூக்களை கொத்தாக பறித்து வீட்டுவாசல் மற்றும் பூஜை அறையில் வைத்து அலங்கரிப்பது இந்துக்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 22 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

சுவாமி அறையில் கண்ணாடி மற்றும் மங்கள பொருட்களும் பழங்கள் காய்கறிகளை வைத்து புத்தாண்டு பிறந்ததும் மங்கள பொருட்களில் கண் விழிக்க சிறந்த பலன்களை தரும் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் உள்ளதால் தமிழ்புத்தாண்டில் தமிழர்கள் இதை செய்ய மறப்பதில்லை.பின்னர், தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு ஆகிய பதினாறு வகையான சமித்துகளால் காய்ச்சப்படும் மருத்து நீரை ஆலயங்களில் பெற்று தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை உள்ளது.

நீராடிய பின்பு புதிய ஆடைகளை அணிந்து அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று பஞ்சாங்கம் வாசிப்பதை கேட்டு தமிழ்புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சித்திரை அன்று அறுவகையான சுவை கொண்ட உணவுகள் தயாரித்து பகிர்ந்து உண்பது இந்துக்களின் மரபாக உள்ளது.

இடைகாட்டு சித்தரின் சுபகிருது வருட வெண்பாவில்
சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்
அவமரம் விலைகுறையு மான்சாம் – சுபமாகும.நாடெங்கும் மாரிமிகு நல்விளை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையதிற் கேள்.
என கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 27 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

சுபகிருது ஆண்டில் சோழ நாட்டில் பல பொருட்கள் வீணாகும். மண் பண்டங்கள் விலை குறைந்திடும். நல்ல மழை பெய்து விளைச்சல் பெருகும். மழையால் பாதிப்பு இவ்வாண்டு இருக்காது.என சுபகிருது ஆண்டின் பொதுவான பலன் கூறப்பட்டுள்ளது.

images 55 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories