அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!

Published:

arapaliswarar - 2026

ஏது?

பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?
பொங்குபசி யுள்ள பேர்க்குப்
போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டு
பொதுமாதர் வலைவி ழியிலே
எந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமே
தென்றென்றும் உறுகல் விமேல்
இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?
வெளிதாய் இருந்து கொண்டே
பன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?
பாரிலொரு வர்க்க திகமே
பண்ணியிடு மூடருக் கறமேது மறமலால்?
பகர்நிரயம் ஒன்று ளதுகாண்!
அன்னாண வருகரி உரித்தணியும் மெய்யனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

இருள் நாணுமாறு (கருநிறத்துடன்) வந்த யானையின் தோலை உரித்து அணியும்
மேனியனே!, குற்றம் அற்றவனே!, அருமை தேவனே!, பொருளாசை பிடித்தவர்க்குச்
சுற்றமும் ஆசிரியரும் இல்லை, மிகுதியான பசியுடையோர்க்கு நிறைந்த தூய்மையும் உணவினிமையும் பார்த்தல் இயலாது. பொதுப் பெண்களின் கண்வீச்சில் எப்போதும் அகப்பட்டு உழல்பவர்க்கு அச்சமும் நாணமும் இல்லை. எப்போதும் சிறந்த கல்வியின் மேல் விருப்பம் உடையோர்க்கு மிக வசதியிலும் தூக்கத்திலும் மனம் நாடாது, எளிய வாழ்வில் இருந்து பலநாளும் திரிபவர்க்கு இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இல்லை, உலகில் ஒருவருக்குத் துன்பத்தையே செய்யும் பேதையருக்குப்
பாவமன்றிப் புண்ணியம் இல்லை, ஆனால் கூறப்படும் நரகம் ஒன்று இருக்கிறது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.9 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img