மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் மாற்றம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
meenakshi amman temple madurai
meenakshi amman temple madurai

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையரும் செயல் அலுவலருமான நடராசன், சேலம் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையராக மாறுதல் செய்யப்பட்டார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர ஆலய நிர்வாக அதிகாரியாக, திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய இணை ஆணையரும் செயல் அலுவலருமான செல்லத்துரை மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்திரவை சென்னை இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை முதன்மை செயலரும் ஆணையருமான பனீந்தர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம்.
  • 8 வருடங்களுக்கு பிறகு சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நடராஜன் நியமனம்.
  • இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும்.
  • திருவேற்காட்டில் பணியாற்றும் செல்லத்துரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பணியிட மாற்றம்.
  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.