சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷம்!

Published:

sankarankoil nandi pradosham - 2026

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சங்கரநாராயண சுவாமி கோவில் முன்புறம் அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பால் நெய். பன்னீர். மஞ்சள். சந்தனம். உள்ளிட்ட பல்வேறு விதமான திரவியங்கள் கொண்டு மந்திரங்கள் முழங்க அபிஷேகங்கள் நடைபெற்றது.

நந்தீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பிரதோஷத்தில் கலந்து கொண்டு பெருமானை தரிசனம் செய்தனர். சங்கரநாராயணர் கோமதி அம்மன் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. செவ்வாய்க்கிழமை என்பதால், மாலை நேரத்தில் கோமதி அம்மன் சந்நிதியில் பக்தர்கள் அதிகம் வந்திருந்து தரிசனம் செய்தனர்.

Related articles

Recent articles

spot_img