நாமத்தின் மேன்மை விளக்கும் நாமக்கல்

சமீபத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் சன்னிதியில், பூஜையின் போது, ஒரு அர்ச்சகர் உயரத்திலிருந்து தவறி விழுந்து இறந்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆலயத்தில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களும், உயிரைப் பணயம் வைத்துத்தான் செய்கின்றனர் என்பதை இவ்வுலகம் இனியாவது உணரட்டும். நூற்றியறுபது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, வார, மாத விடுமுறைகள் இன்றியும், ஓய்வூதியம், வைப்புநிதி இன்றியும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையினை இந்த உலகம் பார்க்கட்டும்!!

ஆலய அர்ச்சகர் பணிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகள், குறைந்தபட்சம் இந்நிகழ்வுக்கு வருத்தமாவது தெரிவித்தனரா? இதில் அரசியல் ஆதாயத்திற்கான வாய்ப்புகள் எதுவும் அவர்களுக்கு இல்லையன்றோ!!

அதுபோகட்டும்… இனி சொல்லப்போகும் விஷயத்தையாவது கொஞ்சம் உணர்ச்சிபூர்வமாகப் படியுங்கள். ஏனென்றால், உணர்வுகள் மரத்துப்போனவர்களுக்கு உண்மை உறைக்காதுதான்!!!

இந்த அர்ச்சகரின் சிகிச்சைக்காக, சமூக வலைத்தளங்கள் மூலமாக பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. உடனடியாக பல லக்ஷம் ரூபாய்கள் வாங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன. கருணையுள்ளம் கொண்ட பலர், இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்டனர். ஆனால் என்னவாயிற்று? அந்த ஆத்மா உடலைவிட்டுப் பிரிவதை எவராலும் தடுக்க முடியவில்லை. இது எம்பெருமானின் சங்கல்பம். ஆஞ்சநேயரின் திருவடிகளில் அவர் சேர்ந்துவிட்டார்.

அர்ச்சகரின் குடும்பத்தினர் ஓர் அறிக்கை விட்டனர்; “சமூக வலைத்தளங்கள் வாயிலாக, நிதியளிக்கும்படி நாங்கள் எவரையும் கேட்கவில்லை. அதனால், பணம் எதுவும் அனுப்ப வேண்டாம். இதெல்லாம் பகவத் சங்கல்பம்” என்று சொன்ன அந்த குடும்பத்தினர், மேலும் ஓர் அதிரடியை மொழிந்தனர். இதுவரை, அவர்கள் அறியாமலும், கேட்காமலும், உதவி செய்தவர்களுக்கு, அந்த வங்கியின் மூலமாகவே அனைத்தையும் திரும்ப அளிப்பதாகவும் கூறியுள்ளனர்!!!!

அன்பர்களே! நாமம் போட்டால் ஏமாற்றுவது என படுகேவலமாக இந்துக்களை இழிவுபடுத்தும் இந்த காலகட்டத்தில், நாமம் போடுவது நேர்மையின் உச்சகட்டம் என்பதை நாமக்கல் சம்பவம் உணர்த்துகிறது. பார்ப்பானைப் பார்த்து பொறாமைபடுபவர்களும், நாமம் போட்டு ஏமாற்றுகிறார் எனப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் இனியாவது உள்ளம் திருந்தட்டும்.

முதலில், நமக்கு நாமமே அடையாளம் என்பதை நாம் உணர வேண்டும். கட்டுப்பாடாக நெற்றிக்கு இட்டுக்கொண்டு செல்வதை, நமது தர்மம் என நிரூபிக்க வேண்டும்.

ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர் போன்ற மகான்கள், தங்களின் பக்தியின் மேன்மையால், தங்கக் காசு மழை பொழிவித்தனர். அதில் ஒரு சிறு துளி கூட அவர்கள் கைக்கொள்ளவில்லை!! நாமம் போட்ட பார்ப்பான்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்! பிறரை ஏமாற்றத் தெரியாதவர்கள்! நாமம் போட்ட நாமக்கல் குடும்பம் நம் சமூகத்தின் நெஞ்சுரத்தை பறைசாற்றுகிறது.

“நமக்கு நாமமே அடையாளம்”. 

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Sri APN Swami.

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்..

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...