December 6, 2025, 1:04 AM
26 C
Chennai

கோவிந்த பட்டாபிஷேகம்!

maharanyam sri muralidhara swami - 2025

துணிந்து தவறு செய்துவிட்டுப் பிறகு உணர்ந்தால், அவர்களது மனமே அவர்களைக் கொன்று விடும். ப்ரும்மா அப்படித்தான் துடித்துப்போனார்.

ஆனால் தேவேந்திரனுக்கோ இது பழக்கமான ஒன்று. இருந்தாலும் இப்போது நேரடியாக பகவானிடமே அபசாரப்பட்டுவிட்டதால், தனியாகச் செல்ல பயந்துகொண்டு காமதேனுவை அழைத்துச் சென்றான்.

தனியாக கோவர்தன மலைமீது ஒயிலாக அமர்ந்திருந்த கோபாலனை நோக்கி காமதேனு ஓடினாள். அவள் பின்னாலேயே தயங்கி தயங்கிச் சென்ற இந்திரன் பகவானின் சரணங்களில் விழுந்தான். ஐராவதத்தை சற்று தொலைவில் நிறுத்திவைத்திருந்தான்.

கண்ணன் முறுவலோடு பேசாமல் இருக்க மன்னித்து விடும்படி ப்ரார்த்தனை செய்தான். கண்ணனோ, நீ செய்வது மகத்தான பணி. என் நியமனத்தில் இருந்துகொண்டு நீ சேவை செய்கிறாய் என்று எப்போதும் நினைவில் கொள் என்றான்.

காமதேனு அழ ஆரம்பித்தாள்.  கோலோக நாதனாக இனி இந்திரனை ஏற்க முடியாது. என் குழந்தைகளான பசுக்களையும் பச்சிளம் கன்றுகளை கொல்லத் துணிந்தான் இந்த இந்திரன். இனி நீரே எமது தலைவர். கோலோக நாதனாக உமக்கே பட்டாபிஷேகம் செய்கிறோம் என்றாள்.

பகவான் இந்திரனைப் பார்க்க, அவன் தலையைக் கவிழ்ந்துகொண்டு
அப்படியே செய்யலாம் ஸ்வாமி என்றான். உடனே ஐராவதத்தை திரும்பிப் பார்க்க அது ஆகாச கங்கை தீர்த்தத்தை கண்ணன் மீது வர்ஷித்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆகாயத்தில் சூழ்ந்து நின்று

கோவிந்த கோவிந்த என்ற நாமத்தை இசைக்க, காமதேனுவும் தன் க்ஷீரத்தால் பகவானுக்கு அபிஷேகம் செய்தது.

பகவான் கோவிந்தன் என்ற திருநாமத்தோடு கோலோக நாதனாக விளங்கினான். கோலோகத்தில் பகவான் ராதையுடன் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறான்.

Kannan - 2025

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மதுரகீதம்

ராகம் : குறிஞ்ஜி
தாளம் : ஆதி

பல்லவி
அபிஷேகம் அபிஷேகம் – இன்று நம்
ப்ரேமிக வரதனுக்கு பட்டாபிஷேகம் || அ ||

சரணம்
1) இந்திரன் வந்து தலை வணங்க
காமதேனு பால் பொழிய
ஆகாச கங்கையுடன் ஐராவதமும் வர
தேவர்கள் பாட்டுப் பாடி பூமாரி பொழிய
– கோவிந்த பட்டாபிஷேகம் || அ ||

2) மூன்றெழுத்து ப்ரணவம் போல் நாமமிது
மூன்று மாயையையும் போக்கி
மூன்றுலகத்தையும் காக்கும்
– கோவிந்த பட்டாபிஷேகம் || அ ||

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் சில…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories