December 6, 2025, 12:58 AM
26 C
Chennai

“யாகம் செய்யாமலே கொட்டித் தீர்த்த மழை”

“யாகம் செய்யாமலே கொட்டித் தீர்த்த மழை”
51839673 955787964617631 8869518511790096384 n - 2025
( மழையென்றால் அடைமழை! காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு, ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது. நாடெங்கும் நிலம் பசுமையை ஏற்றது. விவசாயத்துக்கும், நாடு பூராவுக்கும் தண்ணீர் கிடைத்ததனால், என் இலாகாவான குடிநீர் வடிகால் வாரியத்துக்கும், நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகள், மகாசுவாமிகளின் ஆசியால் நாட்டுக்கும் எனக்கும் கிடைத்தன.” -அமைச்சர்-ராஜாராம்.)

கட்டுரையாளர்- அமைச்சர்  கே.ராஜாராம்-நன்றி-கல்கி-மழை பதிவு-2

எனக்கு விவசாய இலாகா கொடுக்கப்பட்ட நேரமோ, வறட்சியான நேரம். மழையே கிடையாது. நிலங்கள் வெடித்துக் கிடக்கின்றன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காஞ்சி மகாசுவாமிகளின் நினைவுதான் வந்தது. காஞ்சிப் பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காஞ்சி மடத்தில் நுழைந்தேன். அங்குள்ள காரியஸ்தர் திரு. நீலகண்ட அயர் என்னைச் சிறு வயது முதலே அறிந்தவர். அவர் என்னை வரவேற்று, ‘மகாசுவாமிகள், ‘நீ வந்தாயா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தற்போது மேடையில் படுத்து அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டார்கள்’ என்றார்.
நான் ‘சற்று தூரத்தில் நின்று, சத்தமில்லாமல் தரிசித்து விட்டுப் போகிறேன்’ என்று, மகாசுவாமிகள் படுத்திருந்த மேடைக்கு எதிரில் போய் நின்று அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். சில நிமிடங்கள் கழிந்தன. மகா சுவாமிகள் சற்றுப் புரண்டு திடீர் என எழுந்து உட்கார்ந்தார்கள். என்னைப் பார்த்ததும், ‘எப்பொழுது வந்தே?’ என்றார்கள். ‘இப்பொழுதுதான் வந்தேன்’ என் றேன். ‘எதற்காக என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினா?’ என்றார்கள்.

‘நாட்டில் மழையேயில்லை. இந்த நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எனக்கு விவசாய இலாகாவைத் தந்துள்ளார்கள். பூமியெல்லாம் வெடித்துக் கிடக்கிறது. மழையில்லாத நாட்டில், எப்படி நல்ல பேரோடு விவசாய அமைச்சராக வாழ முடியும்? என் பேரே கெட்டுவிடும். தாங்கள் யாகம் செய்தால் மழை வரும் என்கிறார்கள், தாங்கள் மழைக்காக யாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே வந்தேன்’ என்றேன்.

‘இதற்காகத்தான் வந்தாயா?’ என்றார். ‘ஆம்!’ என்றேன்.

சற்று நேரம் தலையைக் குனிந்துகொண்டு மௌனமாக, தியான நிலையில் இருந்தார்கள். சற்று நேரம் கழித்து, ‘நாளைக்கே காமாட்சி அம்மன் கோயிலில், பதினைந்து நாட்களுக்கு யாகம் நடைபெற ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்கள்.

எனக்கு மாலையில் செங்கல்பட்டில் நிகழ்ச்சி. முடித்துக்கொண்டு காரில் ஏறினேன்.

சாப்பிட்டவுடன் வண்டி, ஸ்ரீபெரும்புதூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வண்டி நெளியத் தொடங்கிற்று. சீட்டில் படுத்திருந்த என்னால் தூங்க முடியவில்லை. எழுந்து பார்க்கிறேன். நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். முன் கண்ணாடி மீது குடத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதுபோல் மழை கொட்டுகிறது. மழையென்றால் அடைமழை! காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு, ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது. நாடெங்கும் நிலம் பசுமையை ஏற்றது. விவசாயத்துக்கும், நாடு பூராவுக்கும் தண்ணீர் கிடைத்ததனால், என் இலாகாவான குடிநீர் வடிகால் வாரியத்துக்கும், நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகள், மகாசுவாமிகளின் ஆசியால் நாட்டுக்கும் எனக்கும் கிடைத்தன.”

– கேராஜாராம், முன்னாள் அமைச்சர்
–நன்றி கல்கி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories