தமிழகத்தில் தற்போது கோடை காலத்தில் நிலவும் வெப்பத்தினை தணிக்கும் வகையிலும், மழை வேண்டியும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் வருண ஜெபம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் உடனுறை செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் மழை வேண்டி வர்ண ஜெபம் நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. இதன் பின்பு வர்ண யாகம் நடந்தது. இதில் மழைப்பதிக பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் யாக குண்டத்தில் இருந்து தீர்த்த குடங்களை எடுத்து கோயில் பிரகாரத்தை வலம் வந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் நடைபெறுவதையொட்டி தாரா அபிஷேகம் தொடங்கியது. இந்த அபிஷேகம் மே 21-ம் தேதி வரை நடக்கிறது. யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்



