December 6, 2025, 1:32 PM
29 C
Chennai

“ராஜ ராஜ சோழன் – பெரியவா- தங்க கிரீடம்!

“ராஜ ராஜ சோழன்-பெரியவா– தங்க கிரீடம்”
 
“இந்த தங்க கிரீடம் என் தலையில் இருப்பதைவிட தஞ்சை பெரியகோவிலில் இருக்கும் ராஜ ராஜ சோழன் தலையிலிருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்
 
கட்டுரையாளர்-காயத்ரி ராஜகோபால்
61786490 699034313864551 2831924052833075200 n 2 - 2025
வலையில் படித்தது
 
 
 
ஒரு நாள் மஹாபெரியவா ஆந்திரப்ரதேசத்திலுள்ள விஜயவாடா என்னும் ஊருக்கு சென்றார். அங்கு தங்கி பக்தர்களுக்கு தரிசனமும் கொடுத்து இந்துமத போதனைகளையும் செய்து வந்தார்.
 

அப்பொழுது மஹாபெரியவாளுக்கு வயது அறுபது.

 

விஜயவாடாவிலிருக்கும் பக்தர்களுக்கு ஒரு ஆசை. மஹாபெரியாளின் சஷ்டியப்த பூர்த்திக்கு தங்கள் அன்பு காணிக்கையாக ஏதாவது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். முடிவாக எல்லோரும் பணம் வசூல் செய்து தங்கத்தினாலான தலைக்கிரீடம் ஒன்று செய்வோம் என்று முடிவு செய்தார்கள்.
 
இதுபற்றி மஹாபெரியவாளுக்கு எதுவும் தெரியாது. சன்யாசத்திற்கு ஒரு இழுக்கு வருகிறதென்றால் பிரபஞ்சத்திலுள்ள பஞ்ச பூதங்களும் ஒன்றாக இணைந்து அவதார புருஷர்களை காப்பாற்றிவிடும் அது அவர்களுக்குள்ளே இருக்கும் எழுதப்படாத இறைவிதி
 
அன்று இரவு மஹாபெரியவா தன் கடமைகளை முடித்துவிட்டு வழக்கமான நேரத்தில் படுக்கச்சென்றார். ஆனால் தூக்கம் வராமல் மிகவும் அவதிப்பட்டார். எவ்வளவு முயன்றும் தூக்கம் வரவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொண்டார்.
 

ஆம் தன்னைச்சுற்றி ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கிறது என்று மட்டும் புரிந்து கொண்டார். தனக்கு கைங்கர்யம் செய்யும் மனுஷாளை அழைத்து தனக்கு தூக்கம் வரவில்லை என்ன காரணம்னு தெரியல்லே. உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டார்கள்.

 

கைங்கர்ய மனுஷாளுக்கு தெரியும் எதுவும் மஹாபெரியவாளுக்கு தெரியாமல் நடக்காது.அப்பொழுது கைங்கர்யமனுஷாள் அவாளுக்குள்ளேலய பேசி நடக்கப்போகும் விஷயத்தை மஹாபெரியவாளிடம் சொல்லிவிட தீர்மானித்தார்கள். கைங்கர்ய மனுஷாளில் முக்கியமான ஒருத்தர் மஹாபெரியவளிடத்தில் பின்வருமாறு சொன்னார்.
 
“பெரியவா, விஜயவாடா பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து பணம் வசூல் செய்து தங்களுக்கு தங்கத்திலான கிரீடம் செய்து, தங்களுடைய அறுபதாவது வயதில் உங்கள் சிரஸில் (தலை) சாத்த முடிவுசெய்துள்ளார்கள்.”
 
இதைக்கேட்ட மஹாபெரியவா கைங்கர்ய மனுஷாளிடம் சொன்னார்.
 
“நான் ஒரு சன்யாசி. என்னோட காவி துணியும் தண்டமும் தவிர எனக்குன்னு எதுவுமில்லை. அப்படியிருக்க எனக்கு தங்கம் எதுக்குடா. அதெல்லாம் வேண்டான்னு அவாகிட்டே சொல்லிடுங்கோ. கைங்கர்ய மனுஷாளும் பக்தர்களிடம் அவர்கள் மனது புண்படாமல் விஷயத்தை தெரிவித்தார்கள். ஆனால் பக்தர்களுக்கு பெரிய ஏமாற்றம்.
பக்தர்கள் முடிவாக மஹாபெரியவாளிடமே நேராக கேட்டு அனுமதி பெற்றுவிடலாம் என்று தீர்மானித்து மஹாபெரியவாளை நேரில் பார்த்து தரிசினம் செய்து தங்கக்கிரீடத்தை சிரசில் சாத்த அனுமதி கேட்டார்கள். ஆனால் மஹாபெரியவா மறுத்துவிட்டார் .
 
பக்தர்களுக்கு ஏமாற்றம்.இருக்காதா பின்னே. கண்ணுக்கு எதிரே பரமேஸ்வரன்.நேரில் பரமேஸ்வரன் அவதாரம்.இந்த வாய்ப்பை விட்டால் பின் எந்த ஜென்மத்தில் இந்தமாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.. ஆகவே பக்தர்கள் அனைவரும் மஹாபெரியவாளை மிகவும் நிர்பந்தம் செய்தார்கள். இறுதியில் மஹாபெரியவா பக்தர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு சம்மதித்தார்கள்.
 
அறுபதாவது வயது ஜென்ம நக்ஷத்திர நாளில் தங்க கிரீடத்தை செய்து முடித்து மஹாபெரியவாளிடம் சமர்பித்தார்கள். மஹாபெரியவாளும் பக்தர்களை சிறிது நேரம் காக்கவைத்துவிட்டு ஒரு காரியம் செய்தார். ருத்திராக்ஷரத்தை தன் தலையில் சுற்றிக்கொண்டு அதன் மேல் தங்க கிரீடத்தை வைக்கச்சொன்னார்கள்.
 
உங்களுக்கு புரிகிறதா

தங்கம் தன் தலையிலும் படவில்லை.உடம்பிலும் படவில்லை. ருத்திராக்ஷரத்தின் மேல் வைத்ததால் அது அந்த சிவபெருமானுக்கு சாத்தியதாகவே ஆகும். மஹாபெரியவாளும் தங்க கிரீடத்தை தன் தலையில் வைத்து தரிசனமும் கொடுத்து விட்டார்கள். பக்தர்களுக்கு ஏக சந்தோஷம். தங்கள் அன்பு காணிக்கையாக பெரியவாளுக்கும் மரியாதை செய்துவிட்டோம். ஸ்ரீ மடத்திற்கும் தங்கத்தை காணிக்கையாக்கிவிட்டோம்.

 

பக்தர்களின் சிந்தனை இப்படியிருக்க மஹாபெரியவாளின் சிந்தனை வேறு விதமாக இருந்தது. ஒரு சன்யாசி எப்படி தங்கத்தை ஏற்றுக்கொள்வது.அப்படி ஏற்றுக்கொண்டால் என் சன்யாச இலக்கணத்திற்கு இழுக்கல்லவா.
உடனே அந்த பக்தர்களிடம் சொன்னார்.
 
“இந்த தங்க கிரீடம் என் தலையில் இருப்பதைவிட தஞ்சை பெரியகோவிலில் இருக்கும் ராஜ ராஜ சோழன் தலையிலிருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி இதை ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது சதய விழா வரப்போகிறது.
அந்த நன் நாளில் இந்த தங்க கிரீடத்தை அவன் தலையில் சாத்தி விடுங்கள். அது தான் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி தான் கிரீடத்தை அவர்களிடமே கொடுத்து விட்டார்கள். இதை கேட்ட பக்தர்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஸ்ரீகார்ய மனுஷாளின் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories