December 5, 2025, 9:42 PM
26.6 C
Chennai

“”ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில் தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே…. அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும்? -பக்தரின் கேள்வி

(மனித ராமனுக்கு சீதையின் கூச்சல் கேட்காது. ஆனால் கடவுள் ராமருக்கு பக்தர்களின் குரல் கட்டாயம் கேட்கும்!”-பெரியவாளின் அற்புத விளக்கம்)
17861559 1517108385000988 5242240015705989905 n - 2025

நன்றி-“ஒரு நாடகம் அன்றோ நடக்குது!”- தினமலர்.

காஞ்சிப்பெரியவரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவரின் முகத்தில் வருத்தம். பத்திரிகையில் அவர் படித்த செய்தியே அதற்கு காரணம்.

”என்ன விஷயம்?” என்று கேட்டார் சுவாமிகள்.

”ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில் தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே…. அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும்? என்று ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தனர். ராமரை பற்றி இப்படி குறைவாக எழுதினார்களே என்று மனம் வேதனைப்படுகிறது. இதற்கு என்ன பதில் சொல்வது என்றும் புரியவில்லை” என்று கண் கலங்கினார்.

சுவாமிகள் கலகலவெனச் சிரித்தபடி, ” ராமாயண நாடகம் நடக்கிறது. அதில் வால்மீகி மகரிஷி சிறுவர்களான லவ, குசர்களை ராமரிடம் அழைத்து வருவது போல் ஒரு காட்சி. ராமராக வேஷமிட்டவர் ராஜபார்ட் ராமசாமி அய்யங்கார். அது மட்டுமல்ல. அவரது சொந்தப் பிள்ளைகளே லவகுசர்களாக நடித்தனர்.

நாடகராமர் வால்மீகியிடம், ”இந்தக் குழந்தைகள் யார்?” எனக் கேட்கிறார்.

அப்போது, ”என்ன இது… ராமசாமி அய்யங்காருக்கு சொந்தப் பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லையே? என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? அல்லது நாடக வால்மீகி, ” நீங்கள் தானே ராமசாமி அய்யங்கார்; உங்களின் சொந்தப் பிள்ளைகள் தானே இவர்கள்” என்று பதில் சொன்னால் அது எத்தனை ரசாபாசமாக இருக்கும்?

உண்மையில் இருப்பதை, நமக்கு தெரிந்ததை நாடகத்தில் அப்படியே சொல்ல முடியாது. ஏனென்றால் அது நடிப்பு.

நாடகம் பார்ப்பவர்களும்,’என்னடா இது… அய்யங்காருக்குத் தன் குழந்தைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நினைக்க மாட்டார்கள். அது போல மகாவிஷ்ணுவும் பூலோகத்தில் ராமனாக தனது சக்தி, ஞானத்தை மறைத்துக் கொண்டு மனிதனாக வாழ்ந்தார்.

மனித ராமனுக்கு சீதையின் கூச்சல் கேட்காது. ஆனால் கடவுள் ராமருக்கு பக்தர்களின் குரல் கட்டாயம் கேட்கும்!”விளக்கத்தால் தெளிவு பெற்ற பக்தர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories