December 6, 2025, 6:04 PM
26.8 C
Chennai

ருஷி வாக்கியம் (100) – எல்லோரையும் ஏற்றருளும் பராசக்தி!

rv1 24 - 2025

உலகைப் படைத்து காத்து அழிக்கும் பராசக்தியை பலவிதங்களில் வழிபடும் சம்பிரதாயம் நம் கலாச்சாரத்தில் உள்ளது. அந்த சக்தியையே ப்ரக்ருதி என்று நம் சாஸ்திரங்கள் போற்றுகின்றன. “க்ருதி” என்றால் படைப்பு. செய்யப்படுவதற்கு ‘க்ருதி’ என்று பெயர்.

ப்ரக்ருதி என்றால் இயற்கை. இயற்கை அன்னையின் சக்தி உண்மையில் ஒன்றேயானாலும் அது அனேக விதங்களாக படைப்பில் வெளிப்படுகிறது. இந்த வெவ்வேறு சக்திகளே வெவ்வேறு தெய்வ வடிவங்கள்.

இயற்கை அன்னையாகிய ஜகன்மாதாவை மந்திர, தந்திரங்களாலும், யாக, யக்ஞங்களாலும் வழிபடுவது மட்டுமின்றி கள்ளங்கபடமற்ற பக்தியோடு தங்களுக்கு தெரிந்த மொழியில் தூய உள்ளத்துடன் வழிபடும் நாட்டுப்புற சம்பிரதாயங்களும் நம் மதத்தில் உள்ளன.

மனிதர்கள் தங்களிடம் காணப்படும் வேறுபாடுகளுக்கு தகுந்தாற்போல் இயற்கை சக்தியை வழிபட்டு தங்களுக்கு ஏற்ப அனுகூலப்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். அந்த விதத்தில் ஒரு நெருக்கத்தையும் அருகாமையையும் நம் மூதாதையர் பாரம்பர்யமாக அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

அறிவு, பலம், செல்வம் இம்மூன்றும் அனைவருக்கும் தேவையானவையே! அறிவு தெய்வம் சரஸ்வதி. சக்தியளிப்பவள் துர்கா. செல்வத்திற்கு லக்ஷ்மி. இம்மூவரும் ஒரே சக்தியின் மூன்று வெளிப்பாடுகள். அவற்றைப் பெறுவதற்காக பிரக்ருதியையே மூன்று சக்திகளும் ஒன்றுசேர்ந்த ஆதிசக்தியாக வழிபடும் பண்டிகைகளில் “போனாலு” (புவனாலம்மா) பண்டிகையும் ஒன்று. இது தெலுங்கு மொழி பேசும் கிராம மக்கள் கொண்டாடும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று!

ஜகன்மாதாவை கிராம மக்கள் தங்கள் மொழியில், தாமறிந்த வகையில் வழிபாடு செய்து கொள்ளும் சௌகரியம் ஹிந்து தர்மத்தில் உள்ளது.

அர்த்தம் புரியாத மந்திர தந்திரங்களால் மட்டுமன்றி தங்கள் இதயத்தின் கூக்குரலை வாழ்க்கையின் நடைமுறையுடன் இணைத்து தெய்வங்களை வழிபடும் விசாலமான பார்வை நம் சனாதன தர்மத்தில் சகஜமாகப் பரவி உள்ளது என்பதற்கு இந்த பண்டிகைகளே எடுத்துக்காட்டு! இயற்கையின் சக்தியை வீட்டு தேவதையாக, குடும்ப தெய்வமாக, குலதெய்வமாக, கிராம தேவதையாக அனைவருக்கும் ஏற்ப வழிபடுவது ஒரு உன்னதமான நாகரீகம்!

ஆன்மீகம் ஒரு சிலருக்கு மட்டும் சொந்தமல்ல…! அனைவருக்கும் பொது என்பதை நிரூபிக்கின்றன இந்த பண்டிகைகள்! சமுதாயத்தில் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் பண்பு இது. அவற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே கிராமக் கொண்டாட்டங்கள்.
rv2 22 - 2025

ஆடி மாதத்தில் இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றைத் தம் ஆயுள், ஆரோக்கியம், சௌபாக்கியம் ஆகியவற்றிக்கு உகந்ததாக ஆக்கித் தர வேண்டும் என்று இயற்கை அன்னையை வழிபடுவது இந்த பூஜைகளின் உட்பொருள்.

ஜகத் ஜனனி தன் கலை அம்சங்களுடன் கிராம தேவதைகளாக அவதரித்து ஆட்கொள்கிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. எந்த தேவி மூன்று சக்திகளும் ஒன்று சேர்ந்தவளோ அந்த தேவியே இந்த கிராம தேவதைகளின் உருவத்தில் உள்ளாள்.

எனவேதான், ‘உஜ்ஜயினி மஹாங்காளி’, ‘ரேணுகாம்பாள்’…. போன்ற பெயர்களுடன் ஜகன்மாதாவை வழிபடுகிறோம்.

“யா யாஸ்ச கிராம தேவ்ய: ஸ்யுஸ்தா: சர்வா: ப்ரக்ருதே களா: !” – என்பது தேவி பாகவதத்தின் வாக்கு. “பிரகிருதியாகிய பராசக்தியின் அம்சங்களே கிராம தேவதைகளனைவரும்!”

இவர்களின் அருளால் கிராமங்கள் எத்தகைய பெருந்துன்பங்களுக்கும் ஆளாகாமல் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுகின்றன. எல்லம்மா, போலேரம்மா, அங்காளம்மா… முதலான கிராம தேவதைகளனைவரும் வேத கலாச்சாரத்தின் தொடர்ச்சியான உருவங்களே!

எல்லை, பொலிமேரு, அங்கம்…. இவை அனைத்தும் தெலுங்கு மொழியில் கிராமங்களின் எல்லைகளைக் குறிக்கும் சின்னங்கள். இந்த எல்லைகளில் கோயில் கொண்டு கிராமத்தையும் கிராம மக்களையும் காக்கும் அன்னையே இந்த காவல் தேவதைகள்! “பொலாலம்மா” என்ற பெயர்கள் பயிர்பச்சைகளைக் காக்கும் நாட்டுப்புற பெயர்களே! ‘பொலாலு’ என்றால் வயல்கள்!

ஆடி மாதத்தில் இந்த சக்தி தேவதைகளை கிராமத்து ஆலயங்களில் அனைத்து மந்திரங்களாலும் அர்ச்சனை செய்வார்கள். வீடுகளில் கூட ‘போனாலு’ என்ற பெயரில் புஷ்ப அலங்காரமும் பிரசாதமும் தயாரித்து கிராம தேவதைகளுக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. மேற்சொன்ன கிராம தேவதைகள் தெலுங்கு மொழி பேசும் கிராம மக்கள் வணங்கும் தேவதைகளின் பெயர்கள்.

ஆடி மாதத்தில் தமிழ்நாட்டிலும் சக்தி வழிபாடு சாதாரண கிராம மக்களால் அசாதாரண வைபவத்தோடு நடத்தப்படுகிறது! யக்ஞ திரவியமாக எளிமையான அன்னத்தை சமர்ப்பித்தல் என்பது இயற்கை அன்னையாகிய சக்திகளின் ஆனந்தத்திற்குக் காரணமாகிறது!

இயற்கை அன்னையின் அருளால்தான் நமக்கு உணவு கிடைக்கிறது. பயிர் விளைச்சல், மழை பொழிதல்… போன்றவை அனைத்துமே இயற்கையினுடைய அருள் மேல் ஆதாரப்பட்டுள்ளன. அவற்றினால் கிடைக்கும் உணவினை பக்தியோடு நிவேதனம் செய்வது, நன்றி செலுத்துவதன் பொருட்டேயாகும். மீண்டும் அவற்றை பிரசாதமாக நமக்களித்து ஆசீர்வதிக்கிறாள் ஜகன்மாதா! தேவதைகள் ‘பார்வையால் திருப்தியடைபவர்கள்’. அவர்களின் பார்வை பதார்த்தங்களில் பட்டால் போதும். அவை சக்தி நிரம்பிய பிரசாதமாக மாறிவிடுகின்றன.

எல்லா நிலையில் இருப்பவர்களுக்கும் ஏற்புடையவளாக உள்ள பராசக்தியின் அருளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்பண்டிகைகள்! எளிய பக்தியை இசைந்து ஏற்கும் அன்னை பராசக்திக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories