December 7, 2025, 9:23 AM
26 C
Chennai

நீங்க எல்லாரும் பெரிய ஞானிகள்!  அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள்!

“”நீங்க எல்லாரும்…பெரிய ஞானிகள்!  அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட…. இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்….”

(பெரியவாளின் நகைச்சுவை தத்துவம்-‘தான்’ பற்றி)

(குழம்புக்கு தான் சேர்க்காததை-புரிந்து கொண்டனர்)
61756834 2517068251854066 7432222991972302848 n 1 - 2025

கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாளைச் சுற்றிலும் அடியார்கள் கூட்டம். ஒருபுறம் ஆண்கள்;இன்னொரு புறம்,பெண்கள்.

அன்றைய தினம் பெரியவாள்,இலேசான’  விஷயங்களைப் பேசி,அடியார்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று, ஆண்கள் பக்கம் திரும்பி,”உங்களில் யாருக்கு சமையல் செய்யத் தெரியும் என்று கேட்டார்கள் அடுக்களைப் பக்கம் எட்டிப் பார்த்திராதவர்கள் உள்பட ,எல்லோரும், ‘எனக்குத் தெரியுமே!’ என்று ஒரு குரலாகச் சொன்னார்கள்.

“குழம்பு எப்படிச் செய்வே?” என்று அடுத்த கேள்வி.

முதலில் நின்றவர், ஆரம்பித்தார்; “புளியைக் கரைத்து, மிளகாய்ப் பொடியும் உப்பும் போட்டு, நன்றாகக் கொதி வந்ததும் இறக்கணும்.”

அடுத்தவர்; முதலில்,கடுகு-மிளகாய் தாளித்துக் கொள்ளணும்.புளி-உப்பு-மிளகாய்ப்பொடி சேர்த்து, வெந்த பருப்பைப் போட்டு ஒரு கொதி வந்ததும், கறிவேப்பிலை-கொத்தமல்லித் தழை போடணும்…”

இன்னொருவர்;”புளி-மிளகாய் இரண்டையும் அம்மியீல் அறைத்து உப்பு போட்டு, வெந்த பருப்பைச் சேர்த்து,பெருங்காயம் துளியூண்டு போட்டு வேக வைக்கணும்…”

…..இப்படியெல்லாம், அதி அற்புதமான முறைகளை ஒவ்வொருவராகச் சொல்லி முடித்தார்கள்.

பின்,பெரியவாள் முறை வந்தது.

“நீங்க எல்லாரும்…பெரிய ஞானிகள்!  அகங்காரத்தை மறந்தே விட்டவர்கள் நானும்கூட…. இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்….”

பெரியவாள் என்ன சொல்கிறார்கள்?

“ஜனங்கள் குழம்பிப் போவதற்குக் காரணம், தான் என்ற நினைவுதான். நீங்கள் எல்லோரும் தான் என்ற நினைவே இல்லாதவர்கள்!.
புளி-மிளகாய்-உப்பு-பெருங்காயம் மட்டும் நினைவில் இருக்கு; தான் என்ற எண்ணமே வரவில்லை. ஞானிகள் நிலை இதுதானே.

குழம்புக்கு தான் சேர்க்காததை-புரிந்து கொண்டனர்

கயிலால மலையின் அடிவாரத்துக் கற்சிலைகளாக நின்றார்கள் அடியார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories