December 6, 2025, 8:50 AM
23.8 C
Chennai

“பெரியவா,கர்கரா? கண்ணனா?”

10463956 10202412854185469 1301073776877807238 n - 2025

“பெரியவா,கர்கரா? கண்ணனா?”

(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க
வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள்,
நமக்கு என்ன தெரியும்?)

சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு
நிறைவு.இன்னும் பெயர் வைக்கவில்லை.

பெரியவா அனுக்கிரகத்தால் பிறந்த குழந்தைகள்.
அவர்களே பெயர் சூட்டவேண்டும்;என்ற
ஆழமான பக்தி.

உத்தியோகம், ஆந்திரப் பிரதேசத்தின் வடகோடியில்,
காஞ்சிபுரத்துக்கு வந்து, பெரியவாளைத் தரிசனம்
செய்து, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டவேண்டும்
என்று கேட்பதானால்,எவ்வளவு பணம் தேவைப்படும்?

பொருள் வரவு, கணுக்கால் வரை ஆற்று நீரோட்டமாக
இருந்தது; பக்திப் பெருக்கோ, கழுத்துவரை
அலைமோதிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாகப் பெரியவாள் சன்னதியில் குழந்தைகளைக்
கிடத்தி, வந்தனம் செய்து எழுந்தாகிவிட்டது.

“என்ன பேரு?”

தம்பதிகளுக்கு மெய் சிலிர்த்தது. நேரடியாக
சப்ஜெக்டுக்கு வந்துவிட்டார்கள், பெரியவாள்.

“பெரியவா எங்களுக்கு கர்காசாரியார் மாதிரி.
வசுதேவர் குழந்தைகளுக்கு குலகுரு பெயர் வைத்ததைப்
போல, பெரியவா தான் பெயர் சூட்டணும்…”என்று,
‘தந்தை’ பதில் சொன்னார்.

“அந்தப் பழக்கமெல்லாம் நின்று போய், ரொம்ப
நாளாகிறது” புன்முறுவலுடன் வந்த பதில்.

தம்பதிகள் நகரவில்லை. “பெரியவா பெயர்
சூட்டவேணுமென்று தானே, வந்திருக்கோம்?..
என்று பிடிவாதம்.

நிறுத்திவிட்ட ஒரு சம்பிரதாயத்தை, மீண்டும்
துவக்குவதற்கான போதிய காரணம் எதுவும் இல்லை.
ஆனால், மிகுந்த ஆவலுடன்,நம்பிக்கையுடனும்
வந்திருக்கும் தம்பதிகளைப் பரிதவிக்க விடுவதும்
நியாயமில்லை. என்ன செய்ய?

பெரியவாள் கர்காசாரியாரா, இல்லையா?-
என்பது, ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள்
மாயக் கண்ணன் என்பதில் யாருக்கும் சந்தேகம்
இருக்க முடியாது.!

பெரியவாள் சன்னதி, ஒரு தற்காலிக
நாடக அரங்கமாக மாறியது.

ஒரு பக்தர், ஸ்ரீமடத்துக்குக் காணிக்கையாக ஒரு
பசுமாட்டைக் கொண்டு வந்திருந்தார். பெரியவாள்
உத்திரவுப்படி, வித்யார்த்தி நாராயண சாஸ்திரி என்ற
தொண்டர், பசுமாட்டைக் கொண்டு வந்து பெரியவாள்
எதிரில் நிறுத்தி, “இது தான் காணிக்கையாக சமர்ப்பிக்கப்
பட்டுள்ள பசுமாடு” என்று அர்த்தம் தொனிக்க
வடமொழியில், ‘கோ’ (பசுமாடு) என்று சற்று
இரைந்து தெரிவித்தார்.

அதே விநாடியில், ஓர் அம்மாள், கூஜாவில் பால்
எடுத்துக்கொண்டு வந்தார். ‘கூஜாவில் பால் இருக்கிறது’
என்று பொருள் தோன்றும்படி, ‘பால்’ என்று
விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவாள், அருகில் நின்று கொண்டிருந்த அணுக்கத்
தொண்டரை நோக்கி, “அவர்கள் இரண்டு பேரும் சொன்ன
சொற்களை சேர்த்துச் சொல்லு என்றார்கள்.

“கோ + பால் = கோபால்” என்று குதூகலமாகச்
சொன்னார், தொண்டர்.

ஒரு குழந்தைக்குப் பெயர் கிடைத்துவிட்டது.
இன்னொரு குழந்தைக்கு.?.

“ஏண்டா, பஜனை சம்பிரதாயத்திலே, கோபாலனுடன்
சேர்த்து வேறு என்ன நாமம் சொல்லுவா?.”

தொண்டர், மெல்லிய குரலில் இசைத்தவாறே
‘கோபாலா,, கோ…கோவிந்தா..என்றார்.

அந்த நாமாவளி வரிசை அப்படித்தான் வரும்.

கோபாலன்…கோவிந்தன்..

இரண்டு பெயர்கள்.

பெரியவா,கர்கரா? கண்ணனா?

பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க
வேண்டிய கேள்வி!

நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories