December 5, 2025, 11:51 PM
26.6 C
Chennai

“ஓம் நமோ நாராயணாய”..

images 73 - 2025

ஒரு சமயம் பாண்டிய மன்னனர் வல்லப தேவன் இரவு, நகர் வலம் சென்றபோது ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டார். அவரருகே சென்று எழுப்பி, “பெரியவரே ,தாங்கள் யார்.?” என வினவினார்.

” நான் புனித கங்கையில் நீராடி
விட்டு, சேதுக்கரைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்,” என்றார் முதியவர்.

“ஓ…அப்படியா ? மிக்க மகிழ்ச்சி.

ஆன்மிகப் பற்றுடைய தாங்கள் ஏதாவது ச்லோகம் சொன்னால் நன்றாக இருக்கும்,” என்றார் மன்னனர்.

முதியவர் சுலோகமும் சொல்லி அதற்கான பொருளையும் சொன்னார். “

மழைக் காலமான ஆடி முதல் ஐப்பசி வரை இன்பமாய் வாழ ,மற்ற எட்டு மாதத்திலும் உழைக்க வேண்டும். இரவுக்குத் தேவையானதை பகலிலும்,முதுமைக்குத் தேவையானதை இளமையிலும் தேட வேண்டும். அதே போல அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேட வேண்டியது அவசியம்,” என்றார் முதியவர் .

அவரை வணங்கி வழியனுப்பி வைத்த மன்னர். முதியவர் சொன்ன முதல் மூன்று விசயங்களை முடித்து விட்டேன். அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேடுதல் என்றால் என்ன….!! என்று குழம்பியவாறே, அரண்மனைக்குச் சென்றார்.

மறு நாள் குலகுரு செல்வ நம்பியையும், பண்டிதப் பெருமக்கள் பலரையும் அழைத்து , இது குறித்து விசாரித்த போது யாரும், மன்னரின் சந்தேகத்தைப் போக்க இயலவில்லை.மன்னர் ஒரு மூங்கிலின் உச்சியில் ஒரு பொற்காசு முடிப்பைக் கட்டி ,அரண்மனை வாசலில் நடுமாறும்,மன்னனின் சந்தேகத்தை தெளிவுறச் செய்வோர்களுக்கு இந்தப் பொற்காசுகள் அடங்கிய முடிச்சு இலவசம் என்றும் அறிவிக்கச் செய்தார்.

அன்றைய இரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் கனவில் பெருமாள் தோன்றி,” பரம்பொருளைத் தொழுது அருளைப் பெறுதலே ,அடுத்த பிறவிக்கான தேவை,” என்று சொல்லி மன்னர் சந்தேகம் போக்கும்படி கூறி மறைந்தார்.பெரியாழ்வாரும் அதன்படியே அரண்மனையருகே வந்து ,வாசலில் மூங்கில் மரமருகே நின்றபடி, வல்லப தேவனை அழைத்து, ” மன்னா,! நாராயணனே பரம்பொருள்,
இப்பிறவியில் அவரை வணங்கி அருள் பெறுதலே அடுத்த
பிறவிக்கான தேடல் ஆகும்,”என்று சொல்லி முடிக்கும் தறுவாயில் மூங்கில் மரம் வளைந்து ,தாழ்ந்து பொற்காசு முடிச்சை நீட்டியது. மன்னரும் ஆச்சரியமடைந்து பெரியாழ்வாரின் கருத்தை ஏற்றார்.

அதே நேரத்தில் கருட வாகனத்தில் பெருமாளும் காட்சியளித்தார். அப்போது தான் ஆழ்வாரும் பல்லாண்டு பல்லாண்டு எனத் தொடங்கும் பாசுரம் பாடினார்.”ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரம் சொல்லி வழிபட்டால் பல்லாண்டு நலமுடன் வாழலாம்.

FB IMG 1667362338859 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories