November 5, 2024, 6:39 AM
26.9 C
Chennai

ஆரோக்கியத்தை அளிப்பவன் சூரியன்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

“ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்” – “சூரியனிடம் ஆரோக்கியத்தை பிரார்த்திக்க வேண்டும்”

பூமிக்கும் பூமியிலுள்ள உயிர்களுக்கும் சக்தியளிப்பவன் சூரிய பகவான். சூரியன் மூலம் பிராண சக்தியும் ஆரோக்கியமும் கிடைக்கப் பெறுகிறோம். அதனால்தான் நோய் தீர்ப்பதற்கு சூரிய சக்தியைப் பெறும் வழிமுறைகள் பல நம் வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளன.

விடியற்காலையில் துயிலெழுந்து சூரியனை வழிபடுவது நம் தேசத்தின் சம்பிரதாயம். ஆதித்யனை வெறும் கிரகமாகவோ ஒரு ஜடப் பொருளாகவோ அன்றி சைதன்ய மூர்த்தியாக தரிசித்த உண்மையான விஞ்ஞானக் கண்ணோட்டம் நம் வேத மந்திரங்களில் வெளிப்படுகிறது. அதனையே புராணங்களும் ராமாயணம் போன்ற இதிகாசங்களும் ஆதித்ய ஹிருதயமாக வெளியிட்டன.

இதய நோய், தோல் வியாதி, கண் நோய்களை நீக்கும் சூரியக் கதிரின் ஆற்றலை கிரகிக்கும் வழிமுறைகளை ஆயுர்வேதம், யோக வித்யை, இயற்கை மருத்துவம் ஆகியவை பல விதங்களில் எடுத்துரைக்கின்றன.

arasavilli-suryanarayana-temple
arasavilli suryanarayana temple

பௌதீகமாகத் தெரியும் சூரிய சக்தியை மட்டுமின்றி, சூட்சுமமான தெய்வீக பாஸ்கர சைதன்யத்தை பதில்வினையாற்றச் செய்து அதன் மூலம் அற்புத பலன்களைப் பெரும் முழுமையான செயல் முறைகள் சூரிய உபாசனையில் உள்ளன.

ALSO READ:  வேட்டையன்: எப்படி இருக்கிறது இந்த ரஜினி படம்?!

ஞாயிறு அன்று ரவி ஹோரையில் சூரியோதயம் தொடங்குகிறது. எனவே அன்றைய நாளை ‘பாஸ்கர வாசரம்’ என்று குறிப்பிட்டனர். இந்த வழிமுரையை உலகில் அனைத்து காலக் கணக்கீடுகளும் அங்கீகரித்து ஏற்றன.

சூரிய வழிபாடு:-

ஞாயிற்றுக் கிழமையை நியமத்தோடு கழிப்பது, சூரிய தோத்திரங்களை பாராயணம் செய்வது, பாயசம் (கோதுமை ரவை) செய்து சூரியனுக்கு நைவேத்யம் செய்வது போன்றவை நல்ல ஆரோக்கியத்தை அளிப்பவை. சிவப்பு மலர்கள் சூரிய வழிபாட்டுக்கு உகந்தவை.

சூரிய நமஸ்கார வழிமுறை யோகாப்பியசத்தில் முக்கிய பாகமாக, உலக நாடுகளுக்குக் கூட ஆரோக்கியத்தை அளிப்பதாக உள்ளது.

சூரியனில் உள்ள இறை சக்தியைப் பெற்று அதன் மூலம் ஆரோக்கியத்தை அடையும் வழிமுறைகளை நம் புராண நூல்கள் அளிக்கின்றன.

“க்ரீம் அச்யுத அனந்த கோவிந்த”  என்ற மந்திரத்தை எப்போதும் ஜபம் செய்து வந்தால் கொடிய நோய்கள் கூட தீரும். சூரிய கிரகத்திற்கு அதி தேவதை ருத்ரன். அதனால் சிவ வழிபாடு, சிவார்ச்சனை, சிவ நாம ஜபம் போன்றவை ஆரோக்கியத்தை அளிக்கும். ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் கூட அருளும்.

ALSO READ:  தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் வலியுறுத்தல்!

மிருத்யுஞ்ஜயனாகவும், வைத்தியநாதனாகவும் வணங்கப்படும் சிவனின் நாமங்களை ஜபம் செய்தால் ஆரோக்கியம் முழுமையாக கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாலாம்பிகேசாய நம: – வைத்யேஸாய நம:
பவரோக ஹராய நம: – ம்ருத்யுஞ்ஜயாய நம:

சிவ, கேசவ பேதம் இல்லை என்பது பாரதிய வேத சம்பிரதாயம். எனவே மேலே சொன்ன விஷ்ணு நாமங்கள் மூன்றையும் இந்த சிவ நாமங்களோடு சேர்த்து ஜபம் செய்தால் ஆரோக்கியச் செல்வத்தைப் பெறலாம்.

author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
ALSO READ:  மகாளய பட்சம் எனும் மகத்தான நாட்கள்! என்ன செய்ய வேண்டும்?!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் நவ.05- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...