December 7, 2025, 7:04 PM
26.2 C
Chennai

திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்!

thirunamangal - 2025

-> மகர சடகோபன், தென்திருப்பேரை <-

காஞ்சி மஹா பெரியவர் ஶ்ரீ உ.வே. பிரதிவாத அண்ணங்காரச்சாரியார் ஸ்வாமி எழுதிய “உள்ளுறை பொருள் விளக்கு” என்ற நூல். 1958 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில், ஆழ்வார்கள் உபயோகப்படுத்திய எம்பெருமானின் உவமை திருநாமங்களான கடல் வண்ணன் , முகில் வண்ணன் போன்ற திருநாமங்கள் பெயர் வருவதற்கான காரணத்தை எம்பெருமானின் குணத்தை மேற்கோள் காட்டி ஒப்பிட்டுப் பெயர் பொருத்தத்தை அழகாக விளக்கியுள்ளார். இந்தக் குணங்கள் நிர்வாகத் தலைமைக்கும் அவசியம் என்பதனால் “எம்பெருமான் திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்” என்ற தலைப்பில் இங்குப் பகர விரும்புகிறேன்.

  1. முகில் வண்ணன்( மேகவண்ணன்) திருநாமம் :

தென்திருப்பேரை எம்பெருமானை நம்மாழ்வார் “ நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்தான்” என்றும் , ” நீல முகில் வண்ணத்து எம்பெருமான்” என்றும் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்த திருநாமம் காட்டும் தலைமைப் பண்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மேகம் கடலிருந்து நீரை எடுத்து நல்ல நீராக மாற்றி பாரபட்சமின்றி எல்லா இடத்திலும் பெய்யும். அதேபோல் தலைவன் பாரபட்சமின்றி எல்லோரிடமும் அன்பு காட்டவேண்டும்.

மேகமானது உப்பு நிறைந்த கடல் நீரிலிருந்து

எடுத்து நல்ல நீரை, தான் எடுத்த இடத்திலும் பெய்யும். அதேபோல் தலைவன் என்பவன் உருவாக்கப் படுகிறான். உருவாக்கும் பொழுது தன் ஆசானிடம் கற்றுக்கொண்ட நல்ல கெட்ட விஷயங்களை அலசி ஆராய்ந்து கெட்டவற்றை அகற்றி, நல்லதைச் செய்யும் பொழுது பெரிய தலைவனாக உருவாக்கப்படுகிறான். அந்த நல்ல கருத்துகள் அவனை உருவாக்கிய ஆசான் அல்லது தலைவனிடம் மீண்டும் பெரிய தலைவனாக மேன்மையேற்றிய குணங்கள் கற்பிக்கப்படும். இப்படியே சிறந்த தலைவர்கள் உலகில் உருவாக்கப்படுகிறார்கள். ( Continuous Improvement on leadership qquality

மேகத்தில் மின்னலுள்ள காலத்தில் நீர் நிறைந்திருக்கும். மேகத்தின் கருணையால் நீராகப் பெய்யும்.அதேபோல் தலைவன் என்பவன் மக்களிடம் கூடியிருக்கும் பட்சத்தில் மட்டுமே அவனது நீர்மைத் தன் பலமை கருணையால் நல்லதைப் பொழியும். மக்களிடம் கூடியிருப்பவனே தலைவன்.

மேகமானது கர்ஜித்து சிலசமயம் பெய்யாமல் பொய்த்து விடும். ஆனால் பொய்த்துப் போன மேகத்தை நம்பியே மீண்டும் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் மேகமானது கருணையின் வடிவம். அதேபோல் தலைவன் சில நேரங்களில் கர்ஜித்து அன்பு காட்டாமல் போகலாம். இதை நடைமுறையில் சில சமயங்களில் அனைவரும் பார்க்கிறோம். ஆனால் அவனது இயற்கை குணமாவது கருணையின் வடிவமாக இருக்கவேண்டும்.

மேகம் மழையாக நிலத்தில் பெய்யும் பொழுது சில இடங்களில் நன்மைகளும், சில இடங்களில் தீமைகளும் ஏற்படும். எதிர்காலத் தேவைக்காக

மேகம் மழையாகப் பெய்கிறது. தீமை ஏற்படுத்தாமல் மழை நீரை எதிர்கால நன்மைக்காக சில முன்னேற்பாடுகளை மக்கள் செய்யவேண்டும். அதேபோல் தலைவனின் செயல்களிலும் நன்மை தீமைகள் இருக்கலாம். ஆதலால் எதிர்கால நன்மையைக் கருதி செயலை முடக்காமல், செயலை அமல்படுத்தவேண்டும். தீமைகள் கருதாமல் அந்த செயலின் நன்மைகளை மக்கள் பெரிதும் பயன்படுத்த வேண்டும்.

மேகமானது மயிலை சிறகடித்து ஆடச்செய்யும். தலைவன் என்பவனைப் பார்த்து மக்கள் பரவசம் அடைந்து மகிழ்ச்சியின் எல்லைக்குச் செல்லவேண்டும்.

மேகம் செய்யப் பெறாத காலத்தில் வறக்கும். எம்பெருமானும் அடியார்களுக்கு அருள் செய்யப்பெறாத காலத்தில் நெஞ்சுலர்ந்து பேசுபவன். அதேபோல் தலைவன் என்பவன் மக்களுக்கு நன்மை செய்யமுடியாத காலத்தில் நெஞ்சுலர்ந்து பேச வேண்டும். இது அவனது உணர்வு சார் நுண்ணறிவை வெளிப்படுத்தும்

மேகம் என்பது எழிலுடையது. பார்ப்பதற்குக் கவர்ச்சி தரக்கூடிய ஒரு அழகுப் பொருள். அதேபோல் தலைவன் என்பவன் அவன் செயல்களினாலும் குணங்களினாலும் மக்களால் ஈர்க்கப்படுவன்.

மேகமானது சிப்பிக்குள் பெய்து முத்தாக்கும். தலைவன் என்பவன் அடுத்தகட்ட தலைவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு அறிவு மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்து முத்து போல் இளைய தலைவர்களை உருவாக்க வேண்டும். இது ஒரு

தலைமைப் பண்புகளின் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.

“முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன், முகில்வண்ண வானத்து இமையவர் சூழ் இருப்பர் ” என்பது நம்மாழ்வார் வாக்கு.

முகில் வண்ணன் அல்லது மேகவண்ணனாக நின்று இவ்வுலக மக்களுக்கு நல்ல தலைமைப் பண்புகளை உணர்த்திக் கொண்டிருக்கும் தலைவனுக்கும் தலைவன் எம்பெருமான் ஶ்ரீமந் நாராயணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories