பரமன் அளித்த பகவத் கீதை (8): மகாபாரதம் வரலாறா கதையா?

Published:

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 8மகாபாரதக் கதை

மகாபாரதம் வரலாறா கதையா? பகுதி 2

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

  • துரியோதனனால் உருவாக்கப்பட்ட அரக்கு மாளிகை, வாரணாவதம். வாரணாவதம் என்ற இடத்தில் துரியோதனன்  ஒரு அரக்கு மாளிகையை கட்டி பாண்டவர்களை கொல்ல முயற்சி செய்தான். இந்த இடம் தற்போது உத்தர பிரதேசத்தில் ‘பாப்பார்த்தில்’ அமைந்திருக்கிறது.
  • துருபத மன்னன் ஆட்சி புரிந்த பாஞ்சாலம். இங்கு தான் திரௌபதியும், துஷ்டதுய்மனும் தீயில் இருந்து பிறந்து இருக்கிறார்கள். இந்த இடம் இப்போது இமயமலைக்கும், சம்பா நதிக்கும் நடுவே அமைந்திருக்கிறது.
  • பீஷ்மர் தாகத்தை தணித்த நீரூற்று. குருஷேத்திரப் போர் முடிவில் பீஷ்மர் அம்பு படுக்கையில் விழுந்த போது அவரது தாகத்தை தணிக்க அர்ஜுனன், ஒரு நீரூற்று உருவாக்குவார். இது குருஷேத்திரத்தில் அமைந்திருக்கிறது. இந்த இடம் தற்போது  ‘பான் கங்கா‘ என்று அழைக்கப்படுகிறது.
  • ஜராசந்தன் ஆட்சி புரிந்த மகதம். இந்த ஜெராசந்தன் கம்சனின் மாமனார் ஆவார்.  இவருடைய இரண்டு மகள்கள் ஆன அஸ்தி மற்றும் பிரபந்தியா. கிருஷ்ணன் கம்சனை கொன்றதனால். தன்‌ இரண்டு மகள்களும் விதவை ஆனதால், கிருஷ்ணனுடைய மதுராவின் மீது பல முறை ஜராசந்தன் போர் தொடுத்தார். இவருக்காக தான் கிருஷ்ணன் மதுரா மக்களை காப்பாற்ற, துவாரகையை உருவாக்கினார். ஜராசந்தனை பீமன் கையால் கொல்ல வைப்பார். ஜராசந்தன் ஆட்சி புரிந்த மகதராஜ்யம் இப்போது “பீகாரில்” அமைந்திருக்கிறது.
  • மணிப்பூர் தேசம், தற்போதும் “மணிப்பூர்” என்றே அழைக்கப்படுகிறது. மணிப்பூர் அரசரின் பெண் சித்ராவை தான் அர்ஜுனன் திருமணம் செய்து கொள்வார். இவர்கள் இரண்டு பேரின் மகன் தான் பப்ருவஹன. பப்ருவாஹனன் மதுரையை ஆண்ட சித்ராங்கதை என்ற பெண் என்ற கதையும் கர்நாடகத்தில் வாழ்ந்த பெண் என்ற ஒரு கதையும் உள்ளது.
  • அடுத்ததாக ஜெயத்ரதன் ஆட்சி புரிந்த சிந்து தேசம், துரியோதனன் மற்றும் கௌரவர்களின் ஒரே தங்கையான துர்ச்சலையை, ஜெயத்ரதனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இந்த ஜெயத்ரதன் ஆட்சி புரிந்த சிந்து தேசம் இப்போது, ‘பஞ்சாப் மாநிலத்தில்’ அமைந்திருக்கிறது.
  • சிசுபாலன் ஆட்சி புரிந்த சேடி தேசம். சிசுபாலன் ஆட்சி புரிந்த சேடிதேசம். இப்போது, மத்திய பிரதேசத்தில் இருக்கிறது.
  • மகாபாரத போரில் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் ஒரு நியூக்ளியர் வெப்பன்.
  • மாவீரன் கர்ணன் பயன்படுத்திய கவசத்தை வைத்து தான், இப்போது குண்டு துளைக்காத உடை-புல்லட் ப்ரூப் தயாரித்து இருக்கிறார்கள்.
  • மகாபாரதம் நடந்ததற்கான ஒரு மாபெரும் ஆதாரம், கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை நகரம். இந்த துவாரகை நகரம், துவாபர யுக முடிவில் கடலுக்குள் மூழ்கியது என மகாபாரதத்தில்  கூறப்பட்டுள்ளது. அது உண்மைதான் நிரூபிக்கும் விதமாக, குஜராத் உள்ள கடலுக்கு அடியில் மறைந்து  இருக்கிற துவாரகை நகரத்தை பற்றி பல அறிஞர்களும் ஆராய்ச்சி மேற்கொண்டு இது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த இடமாக கூறுகிறார்கள்.
ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

Related articles

Recent articles

spot_img