thiruvappur muthumariamman - 2026

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் தேர் கோலாகலம்!

ஆன்மிகச் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல்
thiruvappur muthumariamman - 2026

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவை யொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல் நிகழாண்டில் பிப்.26 -ல் பூச்சொரிதல் விழா மற்றும் மார்ச் 5 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப்பெருந்திருவிழா தொடங்கி. மார்ச்- 20-ஆம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவின் தொடக்க நாளில், திருவப்பூர் குலாலர் தெருவின் திடலிலிருந்து நாட்டார்கள், ஊரார்கள் தங்கள் கிராம தெய்வமான கவிநாடு களரி பெரிய அய்யனார் கோயிலுக்கு புரவி எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து இரவு ஏழு மணி அளவில் திருக்கோகர்ணம் அருள்மிகு திருக்கோகர்ணேசர் உடனுறை பிரஹதாம்பாள் ஆலயத்தில் உற்சவ மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை கள் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக எடு்த்துச்சென்று திருவப்பூர் கோயிலை அடைந்த அம்மனுக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. இதைய டுத்து ஏறத்தாழ 9 மணியளவில் கொடியேற்றப்பட்டு மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது.

திருவப்பூர் அருள்மிகு முத்துமாைரியம்மன்
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம், முத்துபல்லக்கு போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

விழாவி்ன் முக்கிய நிகழ்வாக (மார்ச்-13) திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள், அலகு குத்திச்சென்று தங்கள் நேர்த்திக்கடனை நி்றைவேற்றி அம்மனை வழிபட்டனர்.

இதில், சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி, சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே, நகர காவல்துணை கண்காணிப்பாளர் ராகவி,முன்னாள் எமஎல்ஏ வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான்.

நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில், நகராட்சி ஆணையர் நாகராஜன், அறங்காவல் குழுத்தலைவர் பா. செந்தில்குமார், செயல் அலுவலர் ச. முத்துராமன், மாவட்ட திமுக செயலர் கே.கே. செல்லப்பாண்டியன், நகர செயலர் ஆ. செந்தில், அறங்காவலர்கள் சி. கவிதா, ஆர்.பி. ராமச்சந்திரன், ஏ.வி. ராஜேந்திரன், கு. கணேசன்.

கண்காணிப்பாளர் கோ. சண்முகசுந்தரம், ஆய்வர் வி. திவ்யபாரதி, மேற்பார்வையாளர் வே. தெட்சிணாமூர்த்தி, திருவப்பூர் முத்துமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகி பி.விஆர். சேகரன், நகர் மன்ற உறுப்பினர் கனகம்மன் பாபு, இந்து சமய வழிபாட்டு மன்ற நிர்வாகி சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி.அனிதா தலைமையில் விழாக்குழுவினர், திருவப்பூர், கவிநாடு கிராமத்தினர் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர்.

-செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.