spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்"ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து"

“ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து”

 “ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து”

(‘முகமுக’மாக தரிசித்த பொருத்தம்.) தொகுத்தவர்-ரா. கணபதி.10482143_599228513527816_46027082804070919_n தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
ஸ்ரீமுக வருஷம்.தில்லைக்கு முதன்முறை வந்த
பெரியவர்கள் கண்களை மூடிக்கொண்டே நகருக்குள்
வருகிறார்கள். கண் மூடித் தியானத்தில் இருக்கிறார்
என்றோ, வெளிச்சத்தின் கூச்சத்தால் கண் மூடியிருக்கிறார்
என்றோ பெரும்பாலோர் நினைத்திருப்பார்கள். மடத்தில்
மிக நெருங்கியிருப்பவர்களுக்கு மட்டும் இது சற்று
வித்தியாஸமாகப் பட்டது. 
 
ஏனெனில் சிதம்பரத்துக்கு முந்திய முகாமான குமராக்ஷியை
விட்டுப் புறப்படும் போதே பெரியவாள் கண்ணை மூடிக்
கொண்டுவிட்டார்.சிதம்பரப் பட்டணப் பிரவேசம் முழுதும்
பெரியவாள் கண்ணைத் திறக்காமல் இருந்ததோடு.
பிறகு அந்த ஊரில் மடத்தின் ஜாகைக்கு வந்த பின்னரும்
அவ்விதமேயிருந்து நித்திரை கொண்டு விட்டார்.
 
மறுநாள் அதிகாலை மடத்தினருக்கோ,கோவில் தீக்ஷிதர்கள்
உட்பட சிதம்பர மக்களுக்கோ எவருக்கும் தெரியாமல்,
ஒரே ஒரு கிங்கரரை மட்டும் அழைத்துக் கொண்டு
பெரியவாள் ‘கோயில்’ என்றே பெருமை கொண்ட சபாபதி
ஆலயத்துக்குச் சென்றார்கள். அப்போதும் கண் திறக்கவில்லை
கிங்கரரே வழி சொல்லிக்கொண்டு சென்றார். அரையிருட்டு
வேளையில், இந்தக் குருட்டு வேஷத்திலேயே குருபிரான்
சிவகங்கைத் திருக்குளத்தில் தீர்த்தமாடி, மாற்றுத் துவராடை
புனைந்து, திருநீறு அணிந்து,பிரத்தியக்ஷப் பரமசிவமாக
சித்ஸபையை அடைந்தார்.
 
உஷக்கால பால் நைவேத்தியத்துக்காக மணியடிக்கப்
பொன்னம்பலத்தின் மணிக் கதவுகள் திறந்தன. பெரியவாளின் கண்களும் திறந்தன. நேரே நடராஜனின் சௌந்தரிய சமுத்திரமான மூர்த்தியில்
மீன்களாக ஆழ்ந்து திளைத்தன!
 
“தர்சனாத் அப்ரஸதஸி”- “காண முக்தி சிதம்பரத்தில்”
என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டார்.!
ஆரூரில் பிறந்தாலும்,அருணையை நினைந்தாலும்,
(திரு அண்ணாமலை) காசியில் மரித்தாலும்,
கோயிலில் (தில்லையில்) கண்டாலும் மோக்ஷம் என்பது
ஆன்றோர் வாக்கு. எனவே ஞான சிதம்பரத்தில் இந்த ஊனக் கண் காணவேண்டிய
முதல் வஸ்து. ;என் கண்ணின் மணியே,குருமணியே’
அடியார் பாடிய நடனசிகாமணியைத்தான் என்று நமக்குக்
காட்டிவிட்டார். குருமணி! ‘குமாரக’ என்றால் ‘கண்மணி’என்றொரு பொருள்.
‘அக்ஷி’ என்றாலும் கண்தான். இந்தப் பெயர் பொருத்தம்
பார்த்துத்தான் ‘குமராக்ஷி’யிலேயே தம் திவ்விய நயனங்களை மூடிக்கொண்டு விட்டார்.
 
அப்புறம் அந்த ஸ்ரீமுக ஆண்டிலே ஈசனின் திருமுகத்தை
ஈசனின் அவதாரத் திருமுகம் ‘முகமுக’மாக
தரிசித்த பொருத்தம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe