தீபாவளிக்கு தீபாவளி திறக்கப்படும் ஆலயம்! ஒரு வருடமாய் அணையாத தீபம், வாடாத பூ, ஆறாத அன்னம்..!

hasanamma 1
hasanamma 1

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை தினத்திற்கு மட்டுமே திறக்கப்படும் அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மன் ஆலயத்தில் ஏற்றப்படும் தீபம் அடுத்த தீபாவளி வரைக்கும் அணையாமல் இருக்கும்.

அம்மனுக்கு சார்த்தப்படும் பூவும் அடுத்த ஆண்டு வரைக்கும் வாடாமல் இருக்கும். அம்மனுக்கு முன்பு ஒரு குடம் தண்ணீர் வைக்கப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் அடுத்த ஆண்டு வரைக்கும் குறையாமல் அப்படியே இருக்கிறது.

அம்மனுக்கு சுடச்சுட நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னமும் கெடாமல் அடுத்த ஆண்டு வரைக்கும் சுடச்சுட அப்படியே இருக்கும். இந்த அதிசயம் கண்டு, அம்மனின் மகிமை என்று பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போகின்றனர்.

hasanamma temple
hasanamma temple

அம்மன் நெற்றியில் வைக்கப்பட்டிருக்கும் சந்தனமும் அடுத்த ஆண்டு வரைக்கும் அப்படியே காயாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆச்சரியமான அதிசயமான அம்மன் ஆலயம் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு மேற்கே 180 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹாசன் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஹாசனாம்பா கோவில்.

ஹாசனாம்பா கோவில் கருவறையில் சின்ன சின்ன கற்களே சுயம்பு வடிவத்தில் அமைந்திருக்கிறது. அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகை தினத்தினை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்படுகிறது.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

மிகவும் அதிசயமான சக்தி வாய்ந்த அம்மனாக வீட்டிற்கும் 3 சுயம்பு வடிவ கற்களின் மீதும் சிவப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டிவிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

hasanamma
hasanamma

அம்மனுக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கின்றன. கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய்தீபத்தில் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படுகிறது.

இப்படி ஊற்றப்படும் நெய் தீபம் அடுத்த ஆண்டு வரைக்கும் அணையாமல் ஒருவருடம் இருந்துகொண்டே இருப்பதுதான் ஆச்சரியம். அந்த நெய்யும் குறையாமல் அப்படியே இருக்கிறது.

அம்மன் நெற்றியில் இருந்து சுரண்டப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தனம் இயற்கையாகவே சுவாமி மீது வருகிறது. அபிஷேகம் முடிந்த பின்னர் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. சுடச்சுட நைவேத்தியம் செய்யப்படுகிறது.

hasanamma2
hasanamma2

சாமிக்கு முன் ஒரு குடம் தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் தான் அடுத்த ஆண்டு வரைக்கும் குறையாமல் அப்படியே இருக்கிறது. சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் அன்னம் அடுத்த ஆண்டு வரைக்கும் சுடச்சுட அதே சூட்டில் அப்படியே இருக்கிறது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

பிரசித்தி பெற்ற கோவில்கள் எல்லாம் நாள்தோறும் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படிப்பட்ட பிரசித்தி கோயில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஹாசனம்மா ஆலயம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட்டாலும் 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி அன்று மதியம் 12 .19 மணிக்கு ஹாசனம்மா கோவில் கருவறை திறக்கப்பட்டது. அப்போதும் கடந்த ஆண்டு நடை மூடும்போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அப்படியே இருந்தது.

hasanamma temple 2
hasanamma temple 2

வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஹாசனம்மா மற்றும் சித்தேஸ்வரர் கோயில்களை புதுப்பிக்க முன்னாள் முதல்வர் எடியூரப்பா தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள்.

ஹாசனம்மா கருவறை திறக்கப்பட்டது முதல் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கோபாலய்யா, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜோலே, பிரீத்தம் கவுடா எம்எல்ஏ , மாவட்ட ஆட்சியர் ஆர்.கிரீஷ் உள்ளிட்டோர் வந்து சிறப்பு தரிசனம் செய்து செல்கின்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories